(Reading time: 9 - 17 minutes)

17. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

"ப்பாவுக்கு தான் அம்மா வேணாம்னா,என்னையும் அப்படியே வளர்க்க பார்க்கிறார்!"-பசுமரத்தாணியாய் இதயத்தில் பதிந்த வார்த்தைகள்,சிறிது சிறிது அவனை கொன்றுக் கொண்டிருந்தது.எதிலும் அவன் கவனம் இலயக்கவில்லை.தனிமையை நாடினான்!சிந்தித்தான்!செயல் இழந்தான்!விஷ்வாவிடமிருந்து மீண்டும் பிரதிபலிக்கும் மௌனம்,அவனை அச்சம் கொள்ளவே வைத்தது.

"ச்சீப்!"

"மனோ ப்ளீஸ்!தனியா விடு!"

"இருங்க ச்சீப்!தாராளமா இருங்க!இன்னும் எத்தனைக் காலம் ச்சீப் இந்த தண்டனை உங்களுக்கு?"

"ஆயுசுக்கும்!"

"இருக்கலாம் ச்சீப்!உங்க அம்மாவுக்காக முதல் காதலை தியாகம் பண்ணீங்க!மகனுக்காக வைராக்கியத்தை தியாகம் பண்ணீங்க!இப்போ,பிடிவாதத்துக்காக மகனை தியாகம் பண்ண போறீங்களா?"

"மனோ!"

"கோபப்படாதீங்க ச்சீப்!எல்லாம் கை மீறியாச்சு!கடந்தக் காலம் முடிந்த ஒண்ணு!எனக்கு உங்க முதல் காதல் யாருன்னு கூட தெரியாது!ஆனா,இன்னிக்கு வரை அதை தியாகம் செய்ததுக்கான தண்டனையா நீங்க எவ்வளவு நரகத்தை அனுபவிக்கிறீங்கன்னு நான் பார்த்துட்டு தான் இருக்கேன்!"

".............."

"ஆனா,விஷ்வா குழந்தை ச்சீப்!அவனுக்கு இதெல்லாம் புரியாது!நீங்க உங்களை தண்டிக்கிறதா நினைக்கிறீங்க!ஆனா,அதோட வலி எல்லாம் விஷ்வா தான் அனுபவிக்கிறான்!"-தனது ஆசனத்தை விட்டு எழுந்தான் ருத்ரா.

"மரணத்தோட பிடியில இருந்து அவனை காப்பாற்றி கொண்டு வந்து இருக்கோம்!ஆனா,நீங்க உங்க பையனுக்காக பிடிவாதத்தை இழக்க மாட்டிங்க அப்படி தானே!"

"மனோ...புரிந்துக்கோ!"

"வேணாம் ச்சீப்!ப்ளீஸ்...எனக்கு இந்த காதல் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது!ஆனா,அம்மா இல்லாத வலி என்னன்னு நல்லாவே தெரியும்!ப்ளீஸ் ச்சீப்!அதை விஷ்வாவை உணர வைக்காதீங்க!உங்க வைராக்கியத்தை உடைத்து வாங்க!உங்க காயத்துக்கான மருந்து இப்போ உங்க எதிரிலே இருக்கு!அதை வீணா தூக்கி எறியாதீங்க ச்சீப்!உங்களை நான் கெஞ்சி கேட்டுக்கிறேன்!"-அவன் கை எடுத்து வணங்கினான்.

"விஷ்வா சாப்பிட அடம் பிடிக்கிறான்!நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலை!இப்போ அவன் நம்பிக்கையை காப்பாற்ற உங்களால மட்டும் தான் முடியும்!ப்ளீஸ் ச்சீப்!"-ருத்ரா செய்வதறியாது திகைத்து நின்றான்.மனம் முழுதும் கடந்தக்காலம் ஓடியது!!

ஒரு நொடி விழிகளை இறுக மூடி திறந்தான்.

"விஷ்வா எங்கே?"

"ரூம்ல இருக்கான்!"

"சாப்பாடு எடுத்துட்டு வா!"-என்றவன் விரைந்து அவன் அறையை நோக்கி சென்றான்.

தனது அறையில் அழுதப்படி படுத்திருந்தான் விஷ்வா.

"விஷ்வா!"

".............."

"டேய் கண்ணா!"-அவனை தூக்கி தன் மடி மீது அமர வைத்தான்.

"என்னடா?எதுக்கு செல்லம் அழுறீங்க?"

"என் கூட பேசாதீங்க!"

"ஏன்?"

"வேணாம் பேசாதீங்க!"

"அப்பா மேலே கோபமா?"

"ஆமா!"

"ஏன்டாம்மா?"

"பாருவை கூட்டிட்டு வர வேணாம்னு சொல்லிட்டீங்கல்ல!"

"பாரு நம்ம கூட இருக்க முடியாதுடா!"

"எனக்கு பாரு என் கூட இருக்கணும்!"

"ஏன்?அப்பா மட்டும் போதாதா?"

"அம்மா வேணும்பா!என் கூடவே அவங்க இருக்கணும்!"-என்றவனை இறுக அணைத்துக் கொண்டான் ருத்ரா.

"கூட்டிட்டு வரேன்!சீக்கிரமே பாரு வருவா!இந்த வீட்டுக்கு வருவா!உன் அம்மாவா வருவா!அப்பா சத்தியம் பண்றேன்!"

"நிஜமாவாப்பா?"-ஆர்வமாக கேட்டான் விஷ்வா.

"ம்...உனக்காக இந்த ருத்ரா தன் வைராக்கியத்தை உடைக்கிறான்!பார்வதி இந்த ருத்ராவுக்கு மனைவியா,உனக்கு அம்மாவா சீக்கிரமே இந்த வீட்டுக்கு வருவா!!"-வாக்களித்தான் அவன்.அப்பாலகனுக்கு அவன் கூறியது எதுவும் விளங்கவில்லை,"உன் அம்மாவா வருவா!"என்ற வாக்கியத்தை தவிர!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.