(Reading time: 14 - 28 minutes)

"அப்போ சரி!இனிமே நான் அவக்கூட சந்தோஷமா வாழ்வேன்!குட் பாய்!"என்றான்.

"அவளா?யார்...யாரு அவ?"

"அதை ஏன் நான் உன்கிட்ட சொல்லணும்?எனக்கும்,உனக்கும் என்ன சம்பந்தம்?"-அவள் அதற்கு மேலும் அவனை உயிரோடு விடுவதாய் இல்லை.

"இதுக்காக தான் டிவோர்ஸ் கொடுத்தியா?"என்றவள் அவனுடன் சண்டைப் பிடித்தாள்.

"ஏ.. அடிக்காதே!வலிக்குது!"

"யார் அவன்னு சொல்லு!இல்லை...இங்கிருந்து உன்னை தள்ளிவிட்டுட்டு,நானும் குதித்திடுவேன்..."

"கொலைக்காரி..!நான் உனக்கு தாலிக் கட்டிவன் என்னை கொல்ல பார்க்கிற?"

"இப்போ அவ யாருன்னு சொல்ல போறீயா?இல்லையா?"-அவள் மீண்டும் அவனை அடிக்க ஆரம்பிக்க,பொறுமை இழந்தவன்,சட்டென அவளை இழுத்து அவள் இதழ்களை தன் வசமாக்கிக் கொண்டான்.அவளது செயல்கள் யாவும் சட்டென நின்றன...!இறுக்கங்கள் யாவும் தொலைந்தன!சிவாவின் கழுத்தைச் சுற்றி தன் கைகளை மாலையாக்கினாள் கீதா.நீண்ட நேரம் கழித்தே அவளை விடுவித்தவன்,குறும்போடு அவளைப் பார்த்துக் கூறினான்,"நீ தான்!"என்று!!அவ்வளவு நேரமும் யுத்தப்பூமியாய் திகழ்ந்த அவ்விடம்,நந்தவனமாய் உருமாறியது!!அவனது பார்வையின் சீற்றத்தினை தவிர்க்க விரும்பியவள்,அங்கிருந்து விலகி ஓட பார்க்க,சட்டென அவளது தடுத்து நிறுத்தினான் சிவா.

"விடுங்க சிவா!"-பாவமாய் கெஞ்சினாள் அவள்.

"இவ்வளவு நேரமும் ருத்ர தாண்டவம் ஆடிட்டு,இப்போ விடுங்க சிவான்னு கெஞ்சுற?ம்ஹூம்...!உன்னை இன்னிக்கு என்னப் பண்றேன்னு பாரு!"-என்று அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான் சிவா.

றுநாள் காலை....

நீண்ட நேரமாக சிவாவின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருந்தது.கடினப்பட்டு கண்களை திறந்தவன்,அதை எடுத்து காதில் வைத்தான்.

"மா!சொல்லும்மா!"

"என்னடா?நேற்று அத்தனை கால் பண்ணி இருக்க?எதாவது முக்கியமான விஷயமா?"

"ம்...அது வந்து!எனக்கு இன்னும் விசா வரலைம்மா!எப்படியும் ஒரு பத்து நாள் ஆகும் போலிருக்கு!"

"ஓ..கீதாவை மட்டும் அனுப்பி வைக்கிறீயா?"

"ஆ...!இல்லை..இல்லை!நாங்க பத்து நாள் கழித்து வரோம்னு சொல்ல தான் போன் பண்ணேன்!"

"ச்சீ..இதுக்கா அத்தனை போன் பண்ண!சரி...கீதா எப்படி இருக்கா?"

"ம்..நல்லா இருக்கா!"

"அவளுக்கு எதுவும் தொந்தரவு கொடுக்கலை தானே!"

"இல்லைம்மா!நான் நல்லப் பையன் அதெல்லாம் கொடுக்க மாட்டேன்!"

"சரி..அப்பா கூப்பிடுறாரு!நான் அப்பறமா பேசுறேன்!"

"சரிம்மா!"-என்று இணைப்பைத் துண்டித்தான் அவன்.

"ம்...சொன்னாங்க!சொன்னாங்க!நீங்க ரொம்ப நல்லப் பையன்னு!"-என்றாள் அவனது பிடியுள் சிக்கி இருந்தவள்.

"திருடி!முழிச்சிட்டு தான் இருக்கியா?"-என்றான் அவள் நெற்றி முடிக்கீற்றை விலக்கியப்படி!!

"சரி...என்னை விடுங்க!"

"இன்னும் டைம் ஆகலை!"

"மணி ஒன்பது!"

"பரவாயில்லை..டைம் மாற்றி வைத்துக்கலாம்!"

"ப்ச்..விடுங்க சிவா!"-என்று அவனை தள்ளினாள் கீதா.

"ஏ...!"

"என்ன?"

"லவ் யூ!"-முதல்முறையாக தன் மனதுள் பதிந்திருந்த காதலை கூறினான் அவன்.அவள் பிடிவாதம் அதற்கு தடையாய் இல்லை,என்பதற்கு சாட்சியாய் அவன் நெற்றியில் அவள் அளித்த ஒற்றை முத்தமே போதுமானதாக அமைந்தது!!!

சில மாதங்கள் கழித்து...

நன்றாக மேடிட்டு இருந்த வயிற்றை தாங்கியப்படி எதையோ எடுக்க எக்கினாள் கீதா.அவள் எண்ணிய பொருளோ கரம் சேர மறுத்தது.மீண்டும் முயற்சித்தாள்!!பலனில்லை!!

"சிவா!"

"நான் பிஸிடா செல்லம்!"-என்றான் தன் கைப்பேசியுடன் விளையாடியப்படி!!

"ப்ச்..."-என்று மீண்டும் எட்டினாள்.

"ஓய்!"

"ம்??"

"என்ன பண்ற நீ?"

"சக்கரை எட்டலை!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.