(Reading time: 12 - 24 minutes)

17. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

"மாயா உயிருக்கு ஆபத்திருக்கு!"-கண்ணீருடன் காயத்ரி கூறிய மொழிகளில் அதிர்ந்துப் போனாள் மித்ரா.

"மாயாவுக்காக நான் எதையுமே செய்ததில்லை!அவ சந்தோஷம்,துக்கங்களை பகிர்ந்தது இல்லை.அவ என் மேலே காட்டுற வெறுப்பு நியாயமானது தான்!ஆனா,இனியாவது செய்த தவறுக்கான பிராயசித்தமா இனியாவது அவளை பாதுகாக்கணும்னு நினைக்கிறேன்!"

"ஆனா...அக்கா உயிருக்கு எந்த மாதிரி ஆபத்தும் வர வாய்ப்பில்லையே!அவங்க இந்த வீட்டில இருக்காங்க!இந்த இடத்துல காற்று நுழையணும்னா கூட மாமாவை தாண்டி வர முடியாது!அக்கா இங்கே இருக்கிற வரை எந்தக் கவலையுமில்லை!"-தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினாள் மித்ரா.

"உண்மை தான்!ருத்ரா முதல்முறையா மாயா மேலே இருக்கிற விருப்பத்தை சொன்னப்போது,எனக்கு அதிர்ச்சியா தான் இருந்தது!ஆனா,மாயாவுக்கு ருத்ராவை தவிர யாராலும் பாதுகாப்பை கொடுக்க முடியாது.மாயா ஜாதகத்தை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போய் கொடுத்து பார்த்ததுல..."-அவர் பழங்கதையை நினைவு கூர்ந்தார்.

"இந்த ஸ்திரியை உலக வாழ்க்கையோடு ஒன்றிணைய வைத்தால்,அவள் சினம் தவிர வாய்ப்புண்டு!"-கணித்து கூறியவரின் மொழிகளை கூறினார்.

"அப்படின்னா,அக்கா மனசுல உண்மையிலே கல்யாண ஆசை இல்லையா?"

"இல்லை...அதுக்கும் காரணம் நான் தான்!ஆனா,அந்த ஆசை உருவாக வாய்ப்புண்டு!அவரும்,நானும் வாழ்ந்த சமயத்துல என் மேலே அவர் வைத்திருந்த பிரியத்தை பார்த்து வளர்ந்தவ மாயா!அதனால,நிச்சயம் அவ மனசுல காதல் பற்றின ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கும்!"-அவர் கண்கள் மெல்லியதாய் கலங்கின.

"எப்படி சொல்றீங்க?"

"அவர் காதலை உதாசினம் செய்த காரணத்தால் தான் மாயா என்னை பழி வாங்க துடிக்கிறா!"-கசப்பான புன்னகையுடன் கூறினார் காயத்ரி.

"கவலைப்படாதீங்கம்மா!மாமா தனக்கு பிடித்த எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார்.அக்கா மனசு மாறும்!பாருங்க...நீங்க இங்கே தங்குற விஷயம் தெரிந்தும் அக்கா பேசாம அமைதியா இருக்காங்க!அதனால நிச்சயம் அவங்க மனசும் மாற வாய்ப்பு உண்டு!"-ஆறுதல் அளித்தாள் மித்ரா.

"து என்னுடைய வீடு இல்லை அர்ஜூன்.அதனால காயத்ரி இங்கே தங்குறது பற்றி என்னால என் கருத்தை சொல்ல முடியாது!நான் இங்கே வந்ததுக்கு காரணம் மித்ரா மட்டும் தான்!என்னமோ அவ என் மேலே உரிமை எடுக்கும்போது எனக்கு தடுக்க தோணலை!சின்ன வயசுல இருந்தே ஒரு தங்கச்சி இல்லையேன்னு கவலைப்பட்டு இருக்கேன் அதனால மித்ரா மேலே எந்த ஒரு வகையிலும் என்னால கோபம் காட்ட முடியாது!நான் இங்கே கெஸ்டா வந்தேன்.கெஸ்ட்டாவே போயிடுவேன்!"

"மாயா..!"

"உன் நண்பன்கிட்ட தேவையில்லாத கற்பனை உலகத்துல வாழ வேணாம்னு சொல்லிடு!நிஜ வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது!கறபனையில வாழுறவங்களால நிஜத்தை ஜெயிக்க முடியாது!என் அப்பாவாலே உடைக்க முடியாத என் பிடிவாதத்தை நேற்று வந்தவன் உடைக்க போறானா?"

"உடைத்து காட்டிட்டா?"

"அவ்வளவு நம்பிக்கையா?"-ஒரு புன்னகையோடு ஒரு சிறு பெட்டியை மாயாவின் கையில் திணித்தான் அர்ஜூன்.அதை பிரித்தவள் உறைந்துப்போனாள்.அதில் இருந்தவை எல்லாம் அன்று அவள் அணிந்து பின் அறுப்பப்பட்ட உருத்திர மணிகள்!!

"நீ வணங்குற சிவனுக்கே உன் பிடிவாதத்துல விருப்பம் இல்லைங்கிறதுக்கு இது சாட்சி!அவரை மீறி எதையாவது செய்யுற துணிச்சல் உனக்கு இருக்கா?"

"............"

"சொல்லு மாயா!நீ உன் வைராக்கியம் மேலே பிடிவாதமா இருக்க!அவன்,அவனுடைய காதல் மேலே வைராக்கியமா இருக்கான்.ருத்ரா அவ்வளவு சீக்கிரம் எது மேலேயும் ஆசைப்பட மாட்டான் தெரியுமா?"

"............."

"இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினவன்,உண்மையை சொல்லட்டா?எத்தனைப் பொண்ணுங்க அவனுக்காக காத்திருந்தாங்க தெரியுமா?அவனுடைய மறைக்கப்பட்ட கடந்தக்காலம் என்னை தவிர யாருக்கும் தெரியாது மாயா!"-அவளது புருவங்கள் சுருங்கின.

"நீ வலிகளை பார்த்து வளர்ந்தவள்!உன் அப்பா அனுபவித்த வலி,அவர் மேலே நீ வைத்த ஈடு இணையில்லாத பாசத்தால கோபமா உருமாறி இருக்கு!ஆனா,ருத்ரா ஏமாற்றங்களை சந்தித்தே வளர்ந்தவன்."

"அவன் அனுபவித்த வேதனைகளிலே மோசமான வேதனை எது தெரியுமா?காதல்...காதல் மூலமா அவன் சந்தித்த வேதனை!"

"காதலா?"

"ஆமா மாயா!7 வருஷத்துக்கு முன்னாடி அவ அவனுடைய வாழ்க்கையில வந்தா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.