(Reading time: 12 - 24 minutes)

"போ பாட்டி!"-முகத்தில் ஒருவித மாறறத்தை செயற்கையாக உருவாக்கி கொண்டான் அவன்.

"ம்...சீக்கிரம் உனக்கு ஒரு நல்லப்பொண்ணா பார்க்கணும்!"

"அதெல்லாம் என் மனசுல ஏற்கனவே ஒருத்தி இருக்கா!"-அதைக் கேட்டதும் அதிர்ந்துப் போய் நிமிர்ந்தாள் கங்கா.அவள் முகம் அளித்த மாற்றங்களை கவனிக்காமல் கவனித்தான் ருத்ரா.

"யார்டா அது?"

"எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவள் தான்!"-அவனது பேச்சை விரும்பாதவள்,மெல்ல அங்கிருந்து நழுவிக் கொண்டாள்.

"யாருடா அது?"

"சும்மா பாட்டி!நம்பிட்டியா?"

"அதானே பார்த்தேன்.உனக்கு அந்தளவு திறமை இல்லையே!"-அவன் தன் முகத்தை சுர்ரென்று வைத்துக் கொண்டான்.

"சரி..இதோ வரேன் இரு!"-என்று தோட்டத்தை நோக்கி பயணப்பட்டான் பிரதாப்.

அந்த இரவு நேர நிலவொளியில் ஒரு விருட்சத்தின் கீழ் நின்று செடிகளோடு மௌன சம்பாஷணை நிகழ்த்திக் கொண்டிருந்தாள் கங்கா.

"கங்கா!"-அவன் குரல் கேட்டதும் திடுக்கிட்டவள்,அங்கிருந்து நகர முயன்றாள்.அவனது கரங்களோ அவள் கரங்களை சிறைப்பிடிக்க,வினாவோடு அவனைக் கண்டாள் கங்கா.

"என்ன ஒரு மாதிரி இருக்க?"

"விடுங்க!"

"எதுக்காக நான் வந்தாலே இப்படி ஓடுற?"-அவள் கண்களில் மெல்லியதாய் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"அழுறீயா?அப்படி என்ன கேட்டுவிட்டேன் நான்?"

"விடுங்க எனக்கு நேரமாகுது!"

"ஆனாலும் பரவாயில்லை.என் கேள்விக்கு பதில் செல்லிட்டு போ!"

".............."

"வேணாம் நானே சொல்லிடுறேன்!எனக்கு உன்னைப் பிடித்திருக்கு கங்கா!ரொம்ப பிடித்திருக்கு!என் கூடவே கடைசி வரை இருப்பியா?"-பட்டென அவன் கூறிவிட,அதிர்ந்துப் போனாள் அவள்.

"சொல்லு?"

"இதில் சொல்ல என்ன இருக்கு?தப்பா எடுத்துக்காதீங்க...நீங்க எங்கே?நான் எங்கே?இது நிச்சயம் சரி வராது!"-அவன் சில நொடிகள் அவளை உற்று பார்த்தான்.

"படத்துல,கதையில வர மாதிரி உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரேன்னு என்னால சொல்ல முடியாது!எனக்கு பாட்டி முக்கியம்,மித்ரா முக்கியம்,நீயும் முக்கியம்.என்னிக்காவது இந்தப் பணம்,பெயர் இதெல்லாம் விட்டுப்போகும்னு தெரியும் அதனால இதுவரை என்கூடவே இருக்கியான்னு அதுக்கிட்ட நான் கேட்கலை!நீ போகமாட்டன்னு தோணுச்சு!அதான் கேட்டுவிட்டேன்."

".............."

"போகணும்னு தோணுச்சுன்னா போ!"-என்று அவள் கரங்களை விடுவித்தான் ருத்ரா.அவள் சில நொடிகள் பேசாமல் மௌனமாக நின்றாள்.

"போ!"-அவள் மௌனமாக இரு அடிகள் எடுத்து வைத்தாள்.அவன் மனதில் ஏதோ அழுந்த தைத்ததை போலானது!கண்கள் மூடி மரத்தின் கிளைப் பற்றி நின்றிருந்தவனை சுற்றி இரு கரங்கள் அணைத்தன.கரம் நழுவிச்சென்ற புதையல் மீண்டும் தனக்கே சொந்தமாகிய உணர்வு அவனுக்கு!!அவளது கரங்களை விடுவித்து திரும்பினான் ருத்ரா.

"என்னால போக முடியலை!"-கண்ணீரோடு அவள்கூறவும்,அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.நெருக்கமான அவ்வுறவு பயணத்தின் சில தூரம் கழித்து உடைப்பட போவதை எந்தக் காலமும் அவ்விருவருக்கும் உணர்த்தவில்லை.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.