(Reading time: 12 - 24 minutes)

முதல் பார்வையிலே நிகழ்ந்தது இதய பரிமாற்றம்!!அவளது விழிகளில் விளைந்த அச்சமோ,அவன் தீண்டலில் அவள் பெற்ற தடுமாற்றமோ ஏதோ ஒன்று அவனது விழிகளை அவள் மேலிருந்து விலகாமல் தடுத்தது.அவனது பார்வையிலிருந்து தப்பிக்க விரும்பியவள்,சிரம் தாழ்ந்தவண்ணம்,அங்கிருந்து கிளம்ப,அவளது புடவையின் நுனி,அவனது கை கடிகாரத்தில் சிக்கி அவளை தடுத்தது.அதிர்ந்துப் போய் திரும்பியவளை சில நொடிகள் ஆழமாக ஊடுறுவினான் ருத்ரா.பின்,அவள் முகம் பார்த்தப்படி அவளது புடவை நுனியை விடுவித்தான்.மீண்டும் பதற்றம் அவளிடத்தில் தொற்றிக்கொள்ள,விரைந்து அங்கிருந்து நீங்கினாள் அவள்.

தனது பாட்டியின் மடியில் சிரத்தை சமர்பித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான் ருத்ரா.இல்லை...உறங்குவதாய் நடித்துக் கொண்டிருந்தான்.

"தேவையாடா உனக்கு?கண்ணு மண்ணு தெரியாம இப்படி குளத்துக்குள்ளே விழுந்து உடம்பு சரியில்லாம போய்...ஊருக்கு வந்த நேரமே உடம்பை கெடுத்து வைத்திருக்கியே!"-அவர் பாராட்டக்களை அவன் கேட்பதாய் இல்லை.விழிகளுக்குள் அவள் பிம்பத்தை வைத்து கண்கள் மூடி படுத்திருந்தான்.

"அம்மா கங்கா!சீக்கிரம் வாம்மா!"-குரல் கொடுத்தார் அவர்.

"வரேன் பாட்டி!"-இனிமையான குரல் காற்றில் கலந்து வந்தது.

"கண்ணா!எழுந்திருடா!இந்த கஷாயத்தைக் குடிடா!"-அன்போடு எழுப்பினார் அவர்.

"போ பாட்டி..எனக்கு..."-என்று கண் விழித்தவனின் எதிரில் ஏதோ சூடான பானத்தை ஆற்றியப்படி நின்றுக்கொண்டிருந்தவளின் பிம்பம் தெரிந்தது.ஒருமுறை தலையை உலுக்கிக் கொண்டான்!அவளோ அவன் முகத்தை ஒரு திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளைக்கண்டதும் உடனடியாக இதழ்கள் மலர்ந்தன அவனுக்கு!அவன் புன்னகை பூப்பதை நோக்கியவள் சட்டென தலையை குனிந்துக் கொண்டாள்.

"இதை வாங்கி குடிடா!"-சட்டென உற்சாகமாய் எழுந்து அமர்ந்தான் ருத்ரா.அவள் கைகளில் நடுக்கத்துடன் அந்தக் கோப்பையை அவனுக்கு கொடுத்தாள்.அதை அவன் வாங்கியதும் சட்டென கைகளை உறுவிக் கொண்டாள்.அவளது முகத்தை பார்த்தப்படி அம்மருந்தை அருந்தினான் ருத்ரா.

"ப..பா..பாட்டி!நான் போய் சமையல் வேலையை பார்க்கிறேன்!"

"இரு..!எப்போ பார்த்தாலும் எதாவது வேலை செய்துட்டே இருக்க?கொஞ்சம் ஓய்வெடும்மா!"-அக்கறையுடன் கூறினார் லட்சுமி.

"இல்லைப் பாட்டி.."

"சொன்னா கேட்க மாட்ட!"-என்று அவளை பிடித்து தன் அருகே அமர வைத்தார் லட்சுமி.

"நான் சொல்லிருக்கேன்ல கங்கா!இவ தான்.தங்கமான பொண்ணு!இவ வந்ததில் இருந்து தான் இந்தளவு நடமாட ஆரம்பித்திருக்கேன்."-அது எதுவும் அவன் காதில் விழுந்ததாய் தோன்றவில்லை.அவன் அவளது முகத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தான்.

"கங்கா!இவன்தான் என் பேரன் ருத்ரா!"-அவள் தயங்கியப்படி இரு கரம் கூப்பி வணங்கினாள்.

"நான் கோவிலுக்கு போகணும் பாட்டி!நேரமாயிடுச்சு!"

"சரிம்மா!ஜாக்கிரதையா போ!"-அனுமதி கிட்டியதும் உடனடியாக அங்கிருந்து கிளம்பினாள் கங்கா.அவள் சென்று சில நிமிடங்கள் ஆகி இருக்கும்!

"பாட்டி!நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்!"-என்று பறந்தான் ராணா.

"எங்கேடா?"

"அது....ஆ...நம்ம அசோக் இல்லை?அவனை பார்த்துட்டு வரேன்!"

"சரி...சீக்கிரமா வந்துடு!"

"சரி பாட்டி!"-என்று வேகமாய் வெளியேறினான் அவன்.

கண்களுக்கு எட்டிய தூரம் தான் சென்றுக்கொண்டிருந்தாள் கங்கா.

அவளை நோக்கி வேகமாக நடந்தான்.

"ஏங்க...!"

"............."

"கங்கா!"-அவள் சிலையாக அப்படியே நின்றாள்.

"என்னங்க நீங்க?பாட்டி அவ்வளவு தூரம் இன்ட்ரோ பண்றாங்க ஒரு வார்த்தைக் கூட பேசாம போறீங்க?"-அவள் அச்சத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"இதோ பாருங்க சின்னய்யா!இது கிராமம்!இங்கே இதுமாதிரி தனியா நின்று பேசுறதை யாராவது பார்த்தாங்கன்னா பெரிய பிரச்சனை ஆகிவிடும்!தயவுசெய்து எதுவாக இருந்தாலும் இங்கே பேசாதீங்க!"

"ஓ...ஸாரி!"-சட்டென வாடியது அவன் முகம்.

"யூ கேரி ஆன்!"-என்று வந்த வழியே திரும்பி நடந்தான் ருத்ரா.அவன் செல்வதை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள் ஆலயம் நோக்கி நடக்கலானாள்.

நாட்கள் நகர்ந்தன...

"எப்பா என்னடா குழந்தை மாதிரி சேட்டை பண்ற?ஆனா உன்னை கட்டிக்கப் போறவள் ரொம்ப பாவம்டா!"-அவன் செய்த ஏதோ ஒரு சேட்டைக்கு கத்தினார் லட்சுமி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.