(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 10 - தேவி

vizhikalile kadhal vizha

செந்தில் செழியன் இருவரும் சிறு வயது முதலே friends.. சுற்றி வளைத்து உறவும் கூட. அந்த கல்யாண மண்டபத்தில் நிறைய பேரை அவனுக்கு தெரிந்து இருந்தது.. மலர் வந்தவுடன் அவளை பார்த்து தங்கள் காலேஜ் ஆட்கள் கூட உட்கார வைத்தவன் அதற்கு பின் நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டு இருந்தான்.

காலேஜ் மற்ற department lecturer.. சில students எல்லாம் வர அவர்களை கவனிக்கும் பொறுப்பை செழியன் பார்த்துக் கொண்டான். அதோடு காலேஜ் management இல் இருந்தும் வர செழியனால் கொஞ்சம் கூட ஓய்வாக அமர முடியவில்லை.

கொஞ்ச நேரம் எல்லோருடும் பேசிக் கொண்டு இருந்த மலர் , வளர்மதி மேடம் இடம்

“அக்கா.. நாம கிளம்ப எவ்ளோ நேரம் ஆகும்? நான் டிரைவர் வர சொல்லணுமே..” என்றாள்.

அப்போது தான் யாரையோ வழி அனுப்பி விட்டு வந்த செழியன் அவர்கள் பக்கமாக போகவும்,

“செழியா.. நாம சாப்பிட போகலாமா? மலர் கார் வர சொல்ல டைம் கேட்குறா” என்று வினவ,

“இல்லை அக்கா.. நாளைக்கு புல்லா மணமேடையில் சடங்குகள் நிறைய இருக்கும், அதோட உறவுக்காரங்க செய்யுற செய்முறை எல்லாம் இருக்கும்.. இன்னிக்கு போட்டோ session லே நம்ம department எல்லோரும் சேர்ந்து எடுக்கிற மாதிரி பிளான் பண்ணிருக்கோம்.. சோ .. கொஞ்சம் கூட்டம் குறைஞ்சு தான் அது எடுக்கணும்.. அந்த டைம் லே கால் பண்ணிக்கோங்க மலர் ..” என்று வளர்மதி , மலர் இருவரிடமும் பேசினான்.

“அப்போ டின்னெர் அதுக்கு அப்புறம் தானா?” என,

“ஆமாம்..” என,

மலர் யோசனையோடு இருக்க, செழியன்

“என்னாச்சு.. மலர்..? என்ன யோசிக்கிறீங்க..?” என்று கேட்டான்.

“இல்லை.. அப்பா ரொம்ப லேட் பண்ண வேண்டாம்னு சொல்லிருந்தாங்க...? “ என்று இழுக்க,

செழியன் “ஓ... “ என்று யோசித்தவன்,

“ஒன்னு பண்ணுங்க மலர்.. நீங்க உங்க அப்பா கிட்டே பேசி இப்படின்னு சொல்லுங்க.. எல்லோரும் இருக்கும்போது நீங்க மட்டும் இல்லைனா நல்லா இருக்காது.. இல்லாட்டா நான் வேணும்னா பேசட்டுமா?“  என்றான்.

மலரும் “சரி சார்.. நீங்க உங்க வொர்க் பாருங்க.  நான் அப்பா கிட்டே பேசிக்கிறேன்..” என்றாள்.

அவன் சென்ற பின், தன் தந்தைக்கு அழைத்தவள்.

“அப்பா.. இங்கே reception முடிய லேட் ஆகும் போலே இருக்கு”

“ஒஹ்.. நீ வேணா கொஞ்சம் சீக்கிரம் வர பாரேமா.. டிரைவர்உம ரொம்ப லேட்டா வீட்டுக்கு போக முடியாதே. அதோட உனக்கோ அங்கே மாப்பிள்ளை தான் தெரியும்.. அவரும் மேடையில் இருக்கும் போது தனியா நீ என்ன பண்ணுவ?.”

“இல்லை பா.. இங்கே எங்க department எல்லோரும் இருக்காங்க.. அதோட போட்டோ வேற எடுக்கணுமாம்.. அதான் .. உங்க கிட்டே கேட்டேன் பா”

“என்ன செய்ய..?” என்று அவர் யோசிக்கும்போதே , வளர்மதி அவளிடம் இருந்து போனை வாங்கி

“வணக்கம் சார்.. நானும் மலரோட department lecturer தான்.. என் பேர் வளர்மதி. இங்கே அவங்களை நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீங்க வீடு திரும்பறதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க சார்..” என.

“சரிங்க மேடம்.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க மலர் கிட்டே போன் கொடுங்க..”

மலரிடம் கொடுக்க, “மலர்.. நீ அவங்க கூட ஜாக்கிரதையா இருந்துக்கோ.. எப்போ வரணுமோ அதுக்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடி எனக்கு போன் பண்ணு.. நானே கார் எடுத்துட்டு வரேன்..” என

“சரிப்பா.. நீங்க சொன்ன மாதிரி செய்யறேன்..” என்று வைத்தாள். அவர் சொன்னதை வளர்மதியிடமும் சொல்ல, அவரும் அப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை.. என்று இருவரும் மற்ற விஷயங்களை பேச ஆரம்பித்தார்கள்.

சற்று பொருத்து வந்த செழியன் மலரிடம்

“மலர்.. வீட்டிலே பேசிட்டீங்களா? என்ன சொன்னாங்க?”

“ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை சார்.. அப்பா வரேன்னு சொல்லிடாங்க..”

“நல்லதா போச்சு.. “ என்றபடி தன் வேலை கவனிக்க போனான்.

முக்கிய ஆட்கள் எல்லாம் சென்ற பிறகு இவர்கள் எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்க சென்றனர்.

செழியன் HOD இடம்

“சார். மொதல்லே எல்லோரும் பாமிலி பாமிலி ஆ போட்டோ எடுங்க..” என,

“அதுவும் சரிதான்.. “ என்றவர்களாக, ஒவ்வொருவராக முடித்து விட்டு வந்தார்கள். செந்தில் எல்லோரையும் அவன் வருங்கால மனைவிக்கு அறிமுகபடுத்தினான்..

மலர் வரும்போது , தன் மனைவியிடம் .

“இவங்க மலர்விழி... எங்க காலேஜ் லே join பண்ணி ஆறு மாசம் தான் ஆகுது... எங்க department தான்.. “ என்று அறிமுகபடுத்த,

“விஷ் யு  எ ஹாப்பி married லைப்.. அண்ணா.. “ என்று வாழ்த்தியவள், அவன் மனைவிக்கும் கை கொடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.