(Reading time: 12 - 24 minutes)

றுநாள் ஒன்பது மணிக்கு மேல் தான் முஹுர்த்தம் என்பதால் சற்று நிதானமாகவே புறப்பட்டாள்.

குளித்து விட்டு வந்து அவள் அம்மாவிடம்

“அம்மா... எனக்கு கல்யாணத்துக்கு கட்டி போக நல்ல புடவை செலக்ட் பண்ணிக் கொடுங்க “ என

“இதோ வாரேன் ..” என்று அடுப்பை அணைத்து விட்டு வெளியே வர,

மலரின் பாட்டி “ஏன் புள்ள.. மலரு.. நேத்திக்குதேன் போயிட்டு வந்தியே... இன்னிக்கும் என்னத்துக்கு போகணும் கண்ணு..”

“இல்லை ஆச்சி.. கண்டிப்பா வரணும்னு சொல்லிருக்காங்க.. நேத்திக்கு காலேஜ்லே எல்லோருமே வந்தாக.. இன்னிக்கு நான் வேலை பார்க்கிற இடத்துலே உள்ளவுங்க மாத்திரம் போறோம்.. “

“அதுக்கு இன்னிக்கே நீ போயிருக்கலாமே.. தா..”

“நான் கூட வரலை நு சொன்னேன்.. கல்யாண மாப்பிள்ளையே அப்பாகிட்டே பேசி அனுப்பி வைக்க சொல்லிடாக.. அப்பாவும் சரின்னு சொல்லிட்டாக.. அதான் கிளம்பறேன் ஆச்சி..”

அவர் தன் பையனை பார்க்க, அவரும் சொல்லவே வேறு வழி இல்லாமல் அனுப்பி வைத்தார்..

வள்ளி உள்ளே வந்து அவளுக்கு வேணுங்கறதை எடுத்தார்..

“குட்டிம்மா.. போன தீபாவளிக்கு வாங்கின அந்த mustard கலர் புடவை கட்டிக்கோடா.. “ என

“சரிம்மா.. “ என்று அதை எடுக்கவும்.

வள்ளி கையேடு ஒரு நீள ஆரமும், அதன் செட் ஆக ஜிமிக்கி தோடும் , கை வளையலும் எடுத்துக் கொடுக்க,

“அம்மா.. ஆரம் பெருசா தெரியுதே”

“இல்லைடா.. இது மட்டும் போட்டுக்கோ .. சிம்பிள் அதே சமயம் லுக் ஆ இருக்கும்..”

சரி என்று தலை அசைத்தவள், கிளம்பி ரெடி ஆகி வரவும் , அவள் ஆச்சி அவளை அருகில் அழைத்து

“என் கண்ணே பட்டுடும் போலே இருக்கே ராஜாத்தி.. “ என்று திருஷ்டி கழித்தவர்,

“ஏத்தா. வள்ளி.. அந்த குளுரு பெட்டியிலே இருக்கிற மல்லிபூவ எடுத்து சின்னது தலையில் வைத்தா..”

அவர் சொல்வதற்கு முன்னே அதை தான் செய்து கொண்டு இருந்த வள்ளியும் , பூவோடு வந்து தன் மகளின் தலையில் வைத்து விட்டாள்.

பிறகு ஆயிரம் பத்திரம் சொல்லி அவளை அனுப்பி வைத்தனர்..

மலரின் மனதில் ஏனோ தன் அலங்காரத்தை செழியன் பார்ப்பனா..? அவனின் reaction என்னவாக இருக்கும்.. என்ற எண்ணமே ஓடியது.

தொடரும்!

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.