(Reading time: 12 - 24 minutes)

அப்போது போட்டோகிராபர் திரும்பி நிற்க சொல்ல, செழியன் சாதாரணமாக வருவது போல் செந்தில் அருகே வர, போட்டோ எடுப்பதை பார்த்து தயங்கி நின்றான்.

அதை கவனித்த செந்தில் “மச்சா..எனக்கு கம்பெனிக்கு நில்லு” என, அவர்களோடு சேர்ந்து நின்றான்.

பிறகு இவர்கள் department lecturers மட்டும் சேர்ந்து புகைப்படம் எடுக்க சொல்ல, அங்கேயும் அவன் மலர் பக்கத்தில் தான் நின்றான். பொண்ணு மாப்பிள்ளை நடுவில் உட்கார, இரு பக்கமும் நான்கு chair போடப்பட்டு அதில் சீனியர் எல்லோரும் அமர, பின்னாடி மற்றவர்கள் நின்றனர்.

போட்டோ அழகுக்காக நின்று இருந்தவர்களை இங்கே அங்கே மாற்றி விட்டதில், செழியன் அருகே மலர் நிற்க, இதை எதிர்பாரா செழியன் சந்தோஷத்தில் மனதினுள் குத்தாட்டம் போட்டான்.

பிறகும் அனைவரும் அமர்ந்து இருக்க, பொண்ணு மாப்பிள்ளை மட்டும் தனியாக போட்டோ எடுத்தனர்.

அதில் எல்லோரும் சேர்ந்து செந்திலை ஒட்டிக் கொண்டு இருக்க, மலரும் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து சாப்பிட சென்றனர்.

எல்லோருமே சாப்பிட்டு முடித்து இருக்க, இவர்கள் தான் கடைசி பந்தி. ஆனால் பொண்ணு மாப்பிள்ளையோடு அமர்ந்தனர். செந்திலை அவன் மனைவிக்கு ஊட்ட சொல்லி கலாட்டா செய்ய, சிரித்தபடி செய்தான். கொஞ்ச நேரம் அவர்களை ப்ரீ ஆகா விட்டு விட்டு தங்களுக்குள் பேச ஆரம்பித்து இருந்தனர்.

HOD செழியனிடம் “என்ன ஹீரோ சார்.. அன்னிக்கு பார்ட்டி அப்போவே நழுவி ஓடிட்ட..? உன் நடவடிக்கை எல்லாம் சரி இல்லைன்னு உளவு துறை ரிப்போர்ட் சொல்லுது?”

“யாரு உங்க கிட்ட இருக்கிற ஒற்றர் படை.. தானே.. ? அவங்களுக்கு பக்கத்துலே பார்த்தாலே பசு மாடு தெரியாது.. தூரத்துலே பார்த்து காளை மாடா தெரிய போகுது?”

“இல்லையே.. ரொம்ப ஸ்ட்ரோங் information வந்து இருக்கு.. நீ எங்கியோ வசமா மாட்டிகிட்டே என்று?”

“என்ன சொன்னாங்க... ?”

“அட நீதான் whats up, மூஞ்சி புக் எல்லாத்துலேயும்.. ஒரே லவ் status போடறியாம்.. போதா குறைக்கு எல்லா போஸ்ட்க்கும் லைக் கொடுக்க சொன்னா லவ் கொடுக்கரியாம்.. நீ போடுற லவ் சிம்போல் பார்த்து மார்க் இதுக்கு மேலே எங்க கிட்டே ஹார்ட் சிம்போல் ஸ்டாக் இல்லை.. ப்ளீஸ் விட்டுடுங்க.. அப்படின்னு பர்சனல் மெயில் அனுப்பினாரமே..”

“சார் இது எல்லாம் forward மெசேஜ் மாதிரி.. எங்கே இருந்து வருதுன்னு தெரியாது..? நீங்க பாட்டுக்கு இத உண்மைன்னு நம்பி forward பண்ணி விட்டீங்க... சேதாரம் உங்களுக்குத்தான்.. “

“இப்போவும் நழுவுற பார்த்தியா? சொல்லு .. எப்போ கல்யாண சாப்பாடு போட போறே? எல்லோரயும் கோர்த்து விட்டுட்டு போறே .. உன்ன கவனிக்க ஒரு ஆள் சீக்கிரம் வந்தாதானே நாங்க நிம்மதியா இருக்க ?”

“சார்.. என்ன ஒரு உயர்ந்த உள்ளம்? இதுக்காகவே இன்னும் சில பல வருஷத்துக்கு கல்யாணத்துக்கு ரெடி ஆக கூடாது போலே இருக்கே..”

“டேய்.. இப்போ நீ ஒழுங்க சொல்றியா...? இல்லை நாளைக்கு உங்க அப்பா அம்மா வரும்போது அப்படியே ஒன்னு ரெண்டு பிட் எக்ஸ்ட்ராவா போட்டு அடுத்த மாசமே யார் கிட்டயாவது மாட்டி விட்ரவா?”

“தெய்வமே.. நீங்க நல்லா இருப்பீங்க... இப்போ என்ன தெரியனும் உங்களுக்கு ? எப்போ கல்யாணம் தானே ? நான் இப்போ பண்ணிட்டு இருக்கிற தீசிஸ் முடிஞ்சவுடனே  போதுமா?”

“ஹ.. அதா நாங்களே சொல்லுவோமே.. நாங்க கேட்கிறது பொண்ணு பார்த்துட்டியா? இல்ல உன்னோட எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லு ..”

இதை கேட்டதும் தன்னை அறியாமல் ஒரு செகண்ட் மலரை அவன் பார்வை வருடி சென்றது.. ஆனால் யாரும் பார்க்கும் முன் தன்னை சுதாரித்தவனாக,

“சார்.. என் மனசுக்கு பிடிச்ச பொண்ண சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவேன் .. அப்போ உங்க எல்லோர் கிட்டேயும் சொல்றேன் .. இப்போ விடுங்க.. மீ பாவம்..”

“கடைசி வரை எதுவும் சொல்லாமலே நழுவரே.. பார்த்தியா.. நீ கேடி நம்பர் ஒன்”

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த மலர் ஒரே சிரிப்பு தான்.. மலர் பொறுத்தவரை அமைதியானவள்.. ரொம்ப நல்லா பழகினவங்களிடம் நல்லா பேசுவாள் அவ்வளவுதான்.. ஸ்கூல், காலேஜ் எல்லா இடத்திலும் எல்லோரிடமும் நட்பு பாராட்டுவாள்.. ஆனால் நெருக்கம் என்று யாரும் கிடையாது.. இப்படி எல்லாம் கேலி கிண்டல் எல்லாம் அதிகமாக பார்த்தது இல்லை..

அவளின் ஆச்சரியம் இவர்கள் எல்லோரும் காலேஜ் லே என்ன சீன் ஓட்டுவாங்க.. இங்கே என்னடா என்றால் students விட பயங்கரமா ஒருத்தரை ஒருத்தர் கலாயிசிட்டு இருக்காங்க..

அதிலும் HOD பார்த்து அத்தனை பேரும் பயப்படுவார்கள்.. அவரோ இங்கே செழியனை வாரி வாரி விட்டுக் கொண்டு இருக்கிறார்..

இதை எல்லாம் எண்ணிப்பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.