(Reading time: 10 - 20 minutes)

08. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

ஒரு நிமிடத்திற்கு ஐந்து முதல் 30 லிட்டர் வரை இரத்தத்தை உந்தும் ஆற்றல் கொண்டது இதயம்

தேடும் கண் பார்வை தவிக்க.....’ ‘எனை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடித் பார்க்கிறேன் காற்றோடு....’ ‘தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே’

ராஜாவில் இருந்து அனிருத் வரை கணேஷ் ராம் மனதில் இசை மழை தூவ அந்த மருத்துவனின் இதயத்தில் காதல் விருட்சம் வேரூன்றி பூத்துக் குலுங்கி கொண்டிருந்தது.

அவனது இதயப் பூக்களை அள்ளி எடுத்து உரிமையாய் சிகையில் சூட வேண்டிய சொந்தக்காரியோ மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் அவளது அத்தை மாமா அண்ணனோடு ஸ்கைப்பில் சாட் செய்து கொண்டிருந்தாள்.

“அம்மு என்னடா இப்படி இளச்சுட்ட”  வாரத்திற்கு இரு முறை லக்ஷ்மியும் ராமச்சந்திரனும் வர்ஷினியோடு ஸ்கைப்பில் உரையாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு முறையும் லக்ஷ்மி பொண்ணு மெலிஞ்சு போய்ட்டா என்று வருத்தப்பட்டு நிறைய அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டு இருந்தார்.

இதற்கு ராமச்சந்திரனும் சளைக்காமல் அவர் பங்கிற்கு மனைவியுடன் சேர்ந்து ஜிங்ச்சா அடித்துக் கொண்டிந்தார்.

“அம்மா அப்பா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. இங்க இருந்த போது வெண்டைக்கா மாதிரி இருந்தா. இப்போ பாருங்க நல்லா சொரக்கா மாதிரி புஸ்ன்னு இருக்கா. நீங்க குடுக்குற அட்வைஸ்ல திரும்பி வரும் போது பூசணிக்கா மாதிரி உருண்டு வரப் போறா” வருண் வர்ஷினியை சீண்ட வர்ஷினி விடுவாளா என்ன.

“டேய் அண்ணா. வெண்டைக்கா, சொரக்கா, பூசணிக்கான்னு என்னை கேலியா பண்ற. அண்ணா நீ என்னோட மூணு முகத்த தான் பார்த்திருக்க. எனக்கு இன்னொரு முகமும் உண்டு. சொர்ணாக்கா.. அதை பார்த்திராத பார்த்தா தாங்க மாட்ட..ஹ” ரஜினி ஸ்டைலில் முடியைக் கோதி விட்டு பக்கத்தில் இருந்த சேர் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு ஸ்டைலாக சொல்லவும் லக்ஷ்மியும் ராமச்சந்திரனும் அவள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நிறைவாக அங்கிருந்து சென்றனர்.

“அம்மு. விளையாட்டு போதும். அங்க நிஜமா உனக்கு கஷ்டம் ஏதும் இல்லையே”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அப்படியே ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தா நேத்து வந்த ஹீரோ திரும்ப வந்து என்ன மீட்டிடுவார்ல” கண்ணடித்தபடியே அவள் சொல்லவும்  வருண் கவனமானான்.

“நேத்து என்ன ப்ராப்ளம் ஆச்சு”

“ஐயோ அண்ணா. நேத்து சென்ட்ரல் பார்க் போக மெட்ரோ டிரைன் ஏறினேனா. இறங்கும் போது கார்ட் காணோம்”

“அப்புறம்”

“என்னோட ஹாண்ட்பேக் தேடி குடஞ்சுட்டு இருந்த போது எல்லா திங்க்சும் கீழ விழிந்திருச்சு. அப்போ  செம ஹான்ஸமா ஒரு ஹீரோ வந்து என் கார்ட்டை மீட்டுக் கொடுத்துட்டாரே”

வர்ஷினி கைகளை ஆட்டி முகபாவனைகளோடு சொல்லவும் பெரிதாக ஏதும் பிரச்சனை இல்லை என்று வருண் அறிந்து கொண்டான்.

“இருந்தாலும் அம்மு நீ இவ்வளவு கவனக் குறைவா இருக்கக் கூடாது. வெளிநாட்டில் இருக்கோம்ன்னு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா”

“எனக்கு எதுக்கு பயம்...அதான் யாமிருக்க பயமேன்ன்னு முருகனை போல நம்ம ஹீரோ பிரசன்னம் ஆகி விடுவாரே” ஆசிர்வதிப்பது போல போஸ் கொடுத்தவள்

“நோ நோ நம்ம ஹீரோ முருகன் போல இல்லையே. ரொம்ப நிதானமா இருந்தாரே” யோசிப்பது போல தலையில் தட்டிக் கொண்டவள், “ராமபிரான்னு வச்சுக்கலாமா அண்ணா” என்றாள்.

“அம்மு. விளையாட்டு பிள்ளையா இருக்காம ஜாக்கிரதையா இருக்கணும் என்ன” வருண் அக்கறையோடு சீரியசாக சொல்லவும்

“சரி அண்ணா. நான் கவனமா இருக்கேன். நீ உம்ம்ன்னு இருக்காத. கொஞ்சம் சிரியேன். அப்புறம் அண்ணி என்கிட்டே சண்டைக்கு வரப் போறாங்க”

அவள் அண்ணி என்று சொன்னவுடன் வருண் முகம் வெட்கத்தை அப்பிக் கொண்டது.

“ஷ்ஷ்ஷப்பா...இந்த கொடூரமான காட்சியை எல்லாம் என்னை பார்க்க வைத்து டார்ச்சர்  செய்கிறாயே ஆண்டவா” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

“அடுத்த வாரம் ரோசெஸ்டர் போகப் போறோம். ப்ராஜக்ட்க்கு. அங்க தான் டூ வீக்ஸ் இருப்போம். ஸ்ரீதர் எல்லாம் ஏற்பாடு செய்துட்டான். என்ன பத்தி  கவலை படாம அட்லீஸ்ட் கனவிலயாவது டூயட் ஆட கத்துக்கோ”

“சரி சரி பத்திரமா இரு. உன்னோட முன்னோர்களுக்கு கொஞ்ச நாள் மரியாதையை குடுக்கலைனா அவங்க ஒன்னும் கோச்சுக்க மாட்டாங்க. அதனால வாலை சுருட்டி வச்சுட்டு ஒழுங்கா இருக்கணும் சரியா” வருண் மீண்டும் அவளை சீண்டி விட சரி சரி என்று தலையாட்டினலே ஒழிய அவளாவது அவளது பட்டனார்களை மறப்பதாவது.

மூன்று வாரம் கடந்திருந்த நிலையில் ரோசெஸ்டரில் ப்ராஜக்ட் வேலைகள் முடியும் தருவாயில் மாணவர்கள் எல்லாம் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.