(Reading time: 10 - 20 minutes)

அங்கே வந்ததுமே குழுவில் இருந்த மற்ற மாணவர்களிடம் வர்ஷினி நட்புக்கரம் நீட்ட அந்த மூன்று வாரங்களில் அனைவரும் நண்பர்களாகி இருந்தனர்.

“கைஸ் அடுத்த வாரம் ப்ராஜக்ட் முடிந்து எல்லோரும் அவரவர் இடத்திற்கு திரும்பி விடுவோம். என்ன தான் சோஷியல் நெட்வொர்க்ல நாம தொடர்பில் இருந்தாலும் இது போல ஒன்றாக இருக்க வாய்ப்பு இனி கிடைக்காது. சோ நாம இந்த வீக்எண்டை மெமரபில் ஆக்கணும்” ஆங்கிலத்தில் அங்கே இருந்த ஒரு மாணவன் சொல்லவும் அனைவரும் ஆமோதித்தனர்.

“சோ என்ன பிளான்” ஒருவன் கேட்க

“நயகரா போகலாமா. இங்க இருந்து ரொம்ப பக்கம் தான்”

“வாவ் நிஜமாவா. போகலாம் போகலாம். எங்க ஊர்ல குற்றாலம் பால்ஸ் இருக்கு அங்க போனா என் அத்தை மாமா என்னை தண்ணியில விடவே மாட்டாங்க” வர்ஷினி முதல் ஆளாக கையை உயர்த்தி உற்சாகமாக சொல்லவும் ஸ்ரீதர் திடுக்கிட்டான்.

“நயகரா பெரிய பால்ஸ். குற்றாலம் மாதிரி அங்க போய் குளிக்கலாம்ன்னு நினைச்சியா. அதெல்லாம் தூரமா இருந்து தான் பார்க்கணும்” ஸ்ரீதர் தடா சொல்ல வர்ஷினி முகம் தொங்கிப் போனது.

“குளிக்க முடியாதா... அப்போ பெருமாள் கோயில்ல தீர்த்தம் தெளிப்பாங்களே அப்படியாச்சும் கொஞ்சமா சாரல் நம்ம மேல படுமா” வர்ஷினி பாவமாக கேட்க என்னாச்சு என்று கேட்ட  மற்றவர்களுக்கு ஸ்ரீதர் மொழிபெயர்த்தான்.

“அங்க போட் ரைட் உண்டு. பால்ஸ் உள்ள கூட்டிட்டு போவாங்க. வி கேன் கோ” ஒருவன் சொல்ல

“வாவ் ஜாலி ஜாலி பாரு நான் சொன்னேன்ல” வர்ஷினியின் உற்சாகம் உடனே அடுத்த தகவலில் வடிந்து போனது.

“யு ஹவ் கனடா விசா ரைட்”

“கனடா விசாவா எதுக்கு” வர்ஷினி கேட்கவும் அந்த ரைட் போக கனடா விசா வேண்டும் என்று ஒருவன் விளக்கமாக சொன்னான்.

“என்ன பண்றது ஸ்ரீதர்”

“ஹ்ம்ம் ஓரமா போய் நின்னு வேடிக்கை பார்த்துட்டு வரலாம்”

மனமே இல்லாமல் சரி என்று தலையாட்டினாள் வர்ஷினி.

அந்த வார இறுதில் குழுவாக அனைவரும் நயாகரா பார்க்க கிளம்பினார்கள்.

தே சமயம் ஒரு கருத்தரங்கில் பங்கேற்கவென ரோசெஸ்டர் வந்திருந்தான் கணேஷ். கருத்தரங்கு முடிவு பெற்றதும் ஏனோ பழைய நாட்களின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஒரு கான்பரன்சில் பங்கேற்க நால்வரும் வந்திருந்த சமயம். அருகில் நயாகரா இருக்கிறது சென்று பார்த்து விட்டு போகலாம் என்று தீர்மானித்து சென்றிருந்தனர்.

முதன் முதலில் கணேஷ் ராம் நயகரா சென்றது அப்போது தான். அதற்குப் பிறகு இப்போதுதான் இங்கு வரும் சந்தர்ப்பம் அமைந்தது.

தனது காரை நயாகரா நீர்வீழ்ச்சி நோக்கி செலுத்தினான்.

“வர்ஷா எ குட் நியூஸ் பார் யூ. MAID OF MIST போட் டூர் கனடா விசா இல்லைனா அமெரிக்கன் சைட் வரை கூட்டிட்டு போவாங்களாம்”

“யூ கேரி ஆன். வி ஆர் நாட் கமிங்” என்று சொன்னவள் ஸ்ரீதரை எரித்து விடுவது போல பார்த்தாள்.

“இட்ஸ் ஸேப். கம் லெட்ஸ் கோ” நண்பர்கள் வற்புறத்த மறுத்து விட்டிருந்தாள்.

அன்று காலை வருண் போன் செய்யவும் தாங்கள் நயகரா செல்லவிருப்பதை உற்சாகமாக கூறினாள் வர்ஷினி.

“ஸ்ரீதர் சொன்னான் அம்மு. நீ போட் ரைட் எல்லாம் போக வேண்டாம் என்ன. உனக்கு ஆசையா இருந்தா நாம எல்லோரும் சேர்ந்து அங்க கண்டிப்பா போகலாம். தனியா போகக் கூடாது பாப்பா” லக்ஷ்மி ராமச்சந்திரன் வருண் மூவரும் ஒரு சேர கூறவும் சரி என்று சொல்லியிருந்தாள்.

“கோள்மூட்டி. ஏன்டா அண்ணாகிட்ட போட்டுக் கொடுத்த...கோள்மூட்டி” மிகக் கோபமாக ஸ்ரீதரிடம் முறைத்துக் கொண்டு அங்கே தடுப்புகள் அருகில் சென்று அருவியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சோ என்று கொட்டிய அருவியின் அழகில் அவள் கோபம் எல்லாம் பறந்து போனது.

“ஸ்ரீதர் வா வா... இந்தா என்னை போட்டோ எடு” அவன் கைகளில் கேமராவை திணித்து விதவிதமாக போஸ் குடுக்க ஆரம்பித்தாள்.

அன்று மஞ்சள் நிறத்தில் லாங் ஸ்கர்ட் மற்றும் நீல நிறத்தில் டாப்ஸ் அணிந்திருந்தாள் வர்ஷினி. காற்று அவள் முடியை வம்புக்கு இழுக்க அதை அசட்டையாக சுருட்டி கிளிப் செய்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.