(Reading time: 8 - 16 minutes)

சுவாசம் அவரிடம் இன்னமும் மிச்சமிருக்க, தனது கைகுட்டையை எடுத்து அவரது ரத்தத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தியவன் அவரை மோதிய அந்த வாகன ஓட்டியும் உதவிக்கு வர அவரை அப்படியே அள்ளி தனது காரில் கிடத்திவிட்டு மருத்துவமனை நோக்கி பறந்தான் விவேக்.

விபத்தில் அடிப்பட்ட யாரையும் விட்டுச்செல்ல அவனால் இயலாது!!! கண்டிப்பாக இயலாது!!!

‘காப்பாத்திடலாம்பா. அவரை எப்படியும் காப்பாத்திடலாம்..’ ஏனோ தனது அப்பாவிடம் மானசீகமாக சொல்லிக்கொண்டான் விவேக்.

அவரை மோதிய அந்த வாகன ஒட்டி பின் இருக்கையில் தமோதரனுடன் இருக்க, படுத்து கிடப்பவர் யாரென்றே தெரியாமல், திரும்பி அவர் முகம் கூட பார்க்காமல் கவனம் முழுவதும் சாலையிலேயே இருக்க அதிவேகமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான் விவேக்.

பின்னால் இருப்பவர் கண்டிப்பாக அவனது தந்தை இல்லைதான். அவரை பார்த்து விடுவதால் அவனது தந்தை திரும்பி வந்து விடுவதாக அர்த்தம் இல்லைதான். இதனால் அவனது இப்போதைய நிலையில் பெரிய மாற்றம் இல்லைதான். இருந்தாலும்......

இழக்கக்கூடாத ஒன்றை இழந்து, அதை மறுபடியும் ஒரு முறை பார்த்துவிடவாவது முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருப்பவனுக்கு அவன் இழந்ததின் பிரதிபிம்பமாவது கிடைப்பது பேரின்பம் அல்லவா??? அந்த உணர்வுக்கு ஈடு இணை இல்லை அல்லவா???

ஆனால் இந்த நிலையில் அவர் முகத்தை கூர்ந்து கவனிக்கவில்லையே விவேக்!!!

மருத்துவமனையை அடைந்தது கார். அது அவனது தந்தை பார்த்து பார்த்து கட்டிய மருத்துவமனை. அவர் இருந்தவரை அதன் நிர்வாக பொறுப்புகள் எல்லாம் அவருடையதாகவே இருந்தது. இப்போது அதன் நிர்வாகத்தை கவனித்து வருவது வீட்டிலிருக்கும் அவனது அப்பாவும், தம்பி ஷிவாவும்.

அப்பா!!! இவனை பெற்ற அப்பா ஸ்ரீநிவாசன் இவனை விட்டு போன பிறகு அவரை அப்படிதான் அழைக்கிறான் விவேக்!!!

அவர் ஸ்ரீனிவாசனின் உடன் பிறந்த சகோதரர் ஸ்ரீதரன்!!! அவரை விட மூன்று வயது இளையவர். இவனது சித்தப்பா. ஷிவா அவரது ஒரே மகன்.

ஸ்ரீனிவாசன் இவனை விட்டு போன நிலையில் உடைந்து, சிதைந்து கிடந்தவனை கொஞ்சமாக தேற்றி எடுத்தவர் அவர்தான்.

‘அப்பா இல்லைனா என்னடா. என்னை அப்பான்னு கூப்பிடு’ என்றார் அவர்.

அப்படிதான் அழைக்கிறான் அவரை. ஆனாலும் அவனது அப்பாவின் இடத்தை நூறில் ஒரு பங்கு கூட அவரால் நிரப்ப முடியவில்லை என்பது அவரே ஏற்றுக்கொள்ளும் உண்மைதான்.

ரபரவென மருத்தவமனையின் உள்ளே அவன் நுழைய, சரசரவென மருத்துவமனை சிப்பந்திகள் அவனை சூழ்ந்துக்கொள்ள அவனது விழி அசைவில் இயங்கியது மொத்த மருத்துவமனையும். அப்பாவின் மீது அவர்கள் வைத்திருந்த அந்த மரியாதை இன்னமும் இவனிடத்திலும்  தொடருகிறது.

மயக்க நிலையில் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார் தாமோதரன். இன்னமும் அவர் முகம் சரியாக பார்க்கவில்லை விவேக். அவர்களுடன் வந்த அந்த இன்னொரு கார் ஓட்டுனரிடம் கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவிட்டு உள்ளே சென்று அந்த அறைக்குள் அமர்ந்தான் விவேக். பதற்றம் சற்றே தணிந்தது போலே இருந்தது

அது அவனது அப்பாவின் நிர்வாக அறை.  அவரின் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான் மகன். எதிரே அங்கே புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா. அந்த சுழல் நாற்காலியில் மெல்ல ஆடிக்கொண்டே, அவரின் புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான்.

‘அப்பா நிஜமா என்ன செய்யறீங்க நீங்க??? என்னை என்ன செய்ய வைக்கறீங்க???’ வாய்விட்டே கேட்டான் விவேக். பதிலற்ற மனதாகச புன்னகை அவரது புகைப்படத்தில்.

விவேக்கின் மனதிற்குள் திடீரென ஒரு மின்னல் ‘ஒரு வேளை இவர்தான் அப்பா சொன்ன தாமோதரனா???’ அவரது உடமை என அவனது கை சேர்ந்திருந்தது ஜிப் வைத்த ஒரு பை.

‘அதை திறக்கலாமா வேண்டாமா???

‘எப்படி என்றாலும் அவர் யாரென தெரிந்துக்கொள்ள, அவர் உறவினர்களுக்கு தகவல் சொல்லவாவது அவரது பையை திறந்துதானே ஆக வேண்டும்!!!’ யோசித்தபடியே திறந்தான் அவன். அவரது கைப்பேசியை தேடி துழாவினான் பையை. அது கிடைத்தால் அவரது உறவினர்கள் எண் ஏதாவது கிடைக்கவில்லை. அது கிடைக்கவில்லை அவனுக்கு.

அதனுள் இருந்தன சுத்தமாய் துவைத்து மடித்து வைக்கபட்டிருந்த இரண்டு வெள்ளை வேஷ்டிகள், இரண்டு வெள்ளை துண்டுகள், இரண்டு அரைக்கை சட்டைகள், ஒரு கைப்பேசி. சார்ஜர், கொஞ்சம் பணம். சாதரண வேஷ்டி சட்டை அணியும் மிக எளிமையான மனிதராய் இருந்தார் அவர். அந்த வெள்ளை வேட்டியை மறுபடியும் ஒரு முறை பார்த்தான்.

அப்பா வேட்டி அணிந்து அவன் அதிகம் பார்த்தது இல்லை. காரணமே இல்லாமல் இந்த வேட்டி சட்டையில் அப்பாவை கற்பனை செய்து பார்த்துக்கொண்டது அவன் மனம். சின்னதாய் ஒரு மென்சிரிப்பு அவன் இதழ்களில்.

அந்த பையை இன்னும் சற்றே அவன் துழாவ அதிலிருந்தது சின்ன நோட்டுப்புத்தகம். அதில் ஏதேதோ சின்ன சின்ன குறிப்புகள், ஏதேதோ கணக்குகள் மட்டுமே இருந்தன.

அவரது முகவரியோ, கைப்பேசி எண்ணோ அது போன்ற எந்த குறிப்புகளுமே இல்லமல் போக கொஞ்சம் ஏமாற்றத்துடன் அதை மூடியவனின் மடியில் அந்த நோட்டுக்குள்ளிருந்து விழுந்தது அந்த புகைப்படம்.

அதை எடுத்து பார்த்த விவேக்கின் விழிகள் திகைப்பில் விரிந்தன!!!

Hi friends.  இந்த வாரம் சின்ன அப்டேட்தான் கொடுக்க முடிந்தது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அடுத்த வாரம் கொஞ்சம் பெரிய எபி தரேன். Thanks a lot.

 

தொடரும்......

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.