(Reading time: 11 - 22 minutes)

"ச்சீ...நான் இன்னொருத்தரை விரும்புறேன்!"

"அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.ஒண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்கோ!இல்லை...செத்துடு!"-என்றவன் மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு அவளை நெருங்கினான்.

ஓடி ஔியவும் மார்க்கமில்லை.உதவிக்கும் ஆட்கள் அங்கு எவருமில்லை!!அவனிடமிருந்து தன்னை காக்க விரைந்து ஓடினாள் கங்கா.பலனில்லை!!இதுபோன்ற சில சமயங்களில் இறைவனும் தன் கண்களை கட்டிக் கொள்கிறான் போலும்!!அவனிடமிருந்து தப்பிக்க வேறு வழியில்லாதவள்,அங்கு காவல் தெய்வமாய் கோபுரமின்றி அமர்ந்திருந்த இரவில் வீதி உலா வருவதாய் கூறப்படும் ஐயனாரின் பக்கமாய் இருந்த பாறை தடுக்கி கீழே விழுந்தாள்.

"என்னால மனசுல நினைத்தவரை தவிர யார் கூடவும் வாழ முடியாது!தயவுசெய்து என்னை விட்டுவிடு!நான் அவர் கூட வாழணும்!"-மன்றாடி கதறினாள்.அக்கல் மனம் கொண்டவனுக்கு தான் இரக்கம் சுரக்கவில்லை.

"நீ எனக்கு கிடைக்கலைன்னா,எவனுக்கு கிடைக்க கூடாது!"என்றவன் அருகிலிருந்த திரிசூலத்தால் அவளை தாக்க,அதன் கூர்முனை அவள் தேகத்தை துளைத்து உள் இறங்கியது.சட்டென நிகழ்ந்த செயலால் கத்தவும் தெம்பில்லாமல் சரிந்தாள் அவள்.செங்குருதி அவள் அங்கத்திலிருந்து ஆறாய் வெளிவந்தது.

அவளை அடையும் நோக்கத்தோடு வந்தவன்,மாங்கல்யத்தை அவள் அருகே போட்டுவிட்டு,யாரும் காண்பதற்கு முன்னர் அங்கிருந்து ஓடினான்.உயிர் உடலை நீங்க ஆயத்தமாகி போக,அந்நேரம் அங்கு வந்தது ருத்ராவின் கார்!!

"கங்கா!"-அவளது நிலையை பார்த்தவன்,அலறியப்படி அவளை வந்து தாங்கினான்.

"ஏ...என்னடி?என்னடி இது கோலம்?யார் இப்படி பண்ணா?"-திணறியப்படி நடந்தவற்றை கூறினாள் கங்கா.அவனது செங்குருதி கொதிக்க தான் செய்தது,ஆனால்,அதற்கு முன்னதாக அவள் உயிர் காக்க வேண்டும்!

"கடவுளே...!வா ஹாஸ்பிட்டல் போகலாம்!"

"வேணாங்க!இதுக்கு மேலே நான் பிழைக்க மாட்டேன்!"

"ஐயோ!"

"எனக்கு உங்கக் கூட வாழுற பாக்கியமில்லை.என்னை மன்னிச்சிடுங்க!"

"கங்கா!அப்படியெல்லாம் பேசாதே கங்கா!நான் உன் கூட ரொம்ப நாள் வாழணும்!"

"இல்லை...இனி முடியாது!எனக்காக ஒண்ணு செய்வீங்களா?"

"முதல்ல ஹாஸ்பிட்டல் வா கங்கா!"

"என்னால முடியலை!எனக்காக ஒண்ணு செய்வீங்களா?"

"என்னம்மா?"

"எக்காரணம் கொண்டும் மனோகரை இதுக்காக நீங்க பழித்தீர்க்க கூடாது!உங்க மேலே எந்த ஒரு கறையும் பட நான் விரும்பலை!சத்தியம் பண்ணுங்க!"-தன் கரத்தை நீட்டினாள்.

"முடியாது கங்கா!இதுக்காக நிச்சயம் அவன் பதில் சொல்லியே தீரணும்!"

"வேணாம்!நீங்க அடிக்கடி சொல்லுவீங்கல்ல,உனக்கு என்ன வேணும்னாலும் கேளுன்னு!இப்போ கேட்கிறேன்...சத்தியம்...பண்ணுங்க!"

"கங்கா!"

"பண்ணுங்க!"-அதற்கு மேல் வேறு உபாயம் கிட்டவில்லை அவனுக்கு!நடுங்கியப்படி அவன் கரம் அவள் கரத்தில் பதிந்தது.நிம்மதியாக புன்னகைத்தப்படி அவன் கன்னத்தை தீண்டினாள் கங்கா.

"கங்கா!"-கல்மனமும் கரைய கதறினான் ருத்ரா.

"எனக்கு ஒரு ஆசை இருக்கு செய்வீங்களா?"

"என்னம்மா?"-அவள் அருகிலிருந்த மாங்கல்யத்தை எடுத்து அவனிடம் தந்தாள்.

"உங்கக்கூட ரொம்ப நாள் வாழ நினைத்தேன்.அது இனி முடியாது!இல்லைன்னா,உங்க மனைவியாகவாது சாகுறேன்!"

"கங்கா!பைத்தியம் மாதிரி பேசாதே கங்கா!உனக்கு எதுவும் ஆகாது!"

"என்னங்க...சீக்கிரம்!"-அவன் வாழ்வே சூனியமாய் உருமாறியது.அக்னியை சாட்சியாக்கி,கனவுகளை சாட்சியாக்கி,இன்பமாய் தொடங்கப்படும் பந்தம்,அன்று...

அவளது கழுத்தில் அம்மாங்கல்யத்தை அணிவித்தான் ருத்ரா.அவ்வலியிலும் புன்னகைப் பூத்தவள்,அவன் கரம் கொண்டு தன் செங்குருதியையே திலகமென நெற்றியில் சூடிக்கொண்டாள்.

"கங்கா!இப்போதாவது வா கங்கா!"

"வேணாங்க!நான் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!வருங்காலத்துல,உங்களுக்கு பொண்ணா நிச்சயம் நான் பிறப்பேன்!"-என்றவள் அவனது கன்னத்தில் தன் இதழை ஒருமுறை ஒற்றி எடுத்துவிட்டு,அப்படியே அவன் மேல் சரிந்து உயிர் நீத்தாள்.

"கங்கா!"

"...........

"கங்கா....."-பெரும் வேதனையில் கத்தினான் அவன்.வந்த கடன் ஈடேறி காலமும் அவன் காதலை கொன்று அழித்து சென்றது.(இப்போது புரிகிறது அன்று அவன் பாட்டி கேட்ட வினாவிற்கு அவனிடமிருந்து வெளிவந்த பதிலின் வலிகள் அனைத்தும்!)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.