தன்னையறியாமல் கண்ணீர் சிந்தின மாயாவின் விழிகள்!!
"அதுக்கு அப்பறம்,பிரதாப்பை இங்கே கூட்டிட்டு வந்து அவனை மாற்ற எனக்கு 2 வருடம் அவகாசம் பிடித்தது!மித்ராவுக்கு கூட இந்த விஷயம் தெரியாது.அவன் ஓடினான்!கங்கா இழப்பை ஈடுக்கட்ட அவன் 2 வருடம் கழித்து தனது பிசினஸை ஆயுதமாக்குனான்.தன்னை தானே வருத்திக்கிட்டான்.ஆனா,அவன் அந்தஸ்து தான் வளர்ந்ததே தவிர,அவன் வலி கொஞ்சம் கூட குறையலை!அப்போ தான் நீ அவன் வாழ்க்கையில வந்த!வெறுப்பால தொடங்கிய உங்கப் பந்தம் அவன் மனதை கங்காவோட பிடியில இருந்து திசை திருப்பியது.சின்ன வயசுல இருந்து அப்பாம்மா பாசம் கிடைக்கலை!ஸ்கூல் படிக்கும் போதும் ஹாஸ்டலில் தான் வளர்ந்தான் அவன்.இடையில வந்த காதலும் கானலா போச்சு!ருத்ராவை நான் ஏன் தலையில தூக்கி வைத்து கொண்டாடுறேன்னு கேட்பியே இந்தக் காரணம் போதுமா மாயா?"
"பிடிவாதமாம் பிடிவாதம்!ஒருவேளை கங்கா உயிரோட இருந்திருந்தா,நான் தாராளமா உன் பிடிவாதத்தோடு நீ வாழுன்னு சொல்லி இருப்பேன்.கங்கா உயிரோட இருந்திருந்தா,நீ..!அவனுடைய வாழ்க்கையில நுழைய வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது!முதல் காதல் எப்போதும் எப்படி காதலிக்கணும்னு சொல்லிட்டு செத்துப் போயிடுது மாயா!எனக்கு நம்பிக்கை வந்தது.எப்போ பிரதாப் உன் மேலே ஒரு ஈடுபாடு உண்டுன்னு சொன்னானோ,இனி,நீ அவனை பார்த்துப்ப!அவன் வலிகளுக்கு மருந்தாய் இருப்பன்னு நம்பினேன்."
"நீ உன்கிட்ட எதையாவது வேண்டுறவங்களுக்கு அவங்க கேட்கிறதை இல்லைன்னு சொன்னதில்லை!நான் என் நண்பன் வாழணும்னு விரும்பின,காதலை உன்கிட்ட கேட்கிறேன் மாயா!"-அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
"இதுக்கும் மேலே உன் மனசு இளக ஆரம்பிக்கலைன்னா,உன் வைராக்கியம்,உன் பிடிவாதம் காதலை தோற்கடித்துடுச்சுன்னு நான் ஒத்துக்கிறேன்.கிளம்புறேன் மாயா!அம்மா வெயிட் பண்ணுவாங்க!"-என்றவன் விடைப்பெற்று கிளம்பினான்.அவளது மடியில் அந்த ஆல்பம் தவழ்ந்துக் கொண்டிருந்தது.ஒவ்வொரு புகைப்படமாக உற்றுப் பார்த்தப்படி இருந்தாள் மாயா.அவள் மனதில் ஏதோ ஒன்று ஆழமாய் தைத்தது!மிக ஆழமாக!!!
தொடரும்
{kunena_discuss:1104}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.