(Reading time: 14 - 27 minutes)

10. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

மனிதனின் இதயத்தின் மொத்தம் நான்கு அறைகள்;வலது புறம் இரண்டு இடது புறம் இரண்டு

வாவ் வர்ஷினி...நீயா இது என்னால நம்பவே முடியலையே” ஸ்ரீதர் ஆவென்று வாயை பிளந்து கொண்டு வர்ஷினியை பார்த்து ஆச்சரியப்பட்டான்.

பொதுவாகவே வர்ஷினி ஏதேனும் விழா அல்லது விசேஷம் என்றால் வீட்டையே ஒரு வழி செய்து விடுவாள். அங்கு ஒரு மினி பேஷன் ஷோ நடக்கும்.

வருணும் ராமசந்திரனும் பார்வையாளர்கள் என்றால் லக்ஷ்மியின் பாடு தான் திண்டட்டாம். ஏனென்றால் புடவை என்றால் எல்லா புடவைகளையும் அவள் ஒவ்வொன்றாக கட்டி விட சொல்லியல்லவா படுத்துவாள்.

“மாமா எப்படி இருக்கேன் சொல்லுங்க” அவள் எதை உடுத்திக் கொண்டு வந்தாலும் மிக நன்றாக இருக்கிறது என்று தான் சொல்வார்.

“ஹஹ்ஹா இதுலே ஏலியன் மாதிரியே இருக்கே” வருண் ஏதேனும் கேலி செய்து கொண்டு இருப்பான்.

“புடவை கட்டிக்கணும்னு ஆசை. ஆனா ஒழுங்கா சமாளிக்க தெரியாது. ஒரு இடத்தில அடக்க ஒடுக்கமா உட்காரவும் முடியாது உன்னால. அங்க இங்க தாவிகிட்டே இருக்கணும். இதோட 25  பின் ஆச்சு. ரிகார்ட் தான் போ” வர்ஷினிக்கு புடவை கட்டிவிட வேண்டும் என்றாலே லக்ஷ்மி அலறுவார்.

“அத்தை. இதோ இந்த அம்ருதவர்ஷினி என்ற அம்மு சபதம் எடுக்கிறாள். இன்றிலிருந்து 80 வருடத்திற்குள் ஒரு பின் கூட இல்லாமல் புடவை கட்டி அழகா சமாளிச்சு காட்டுவேன். இதோ இந்த ஊக்கின் மீது ஆணை” அவள் சொல்லவும் வருண் விழுந்து விழுந்து சிரிக்க லக்ஷ்மி செல்லமாய் ஒரு அடி கொடுத்தாலும் மறக்காமல் திருஷ்தி சுற்றிப் போடுவார்.

விளையாட்டுக்காக சொன்னாள் என்றாலும் யு டியுப் உபயத்தால் விதவிதமாய் சேலை உடுத்தப் பழகிக் கொண்டாள் வர்ஷினி.

ஸ்ரீதரின் உறவினர் வீட்டின் விழாவின் போதும் வர்ஷினி புடவை தான் அணிந்திருந்தாள்.

“ஜானு அக்கா வர்ஷினி என்னோட பிரென்ட் சொன்னேன்ல” ஸ்ரீதர் கல்யாணப் பெண் ஜானவியிடம் வர்ஷினியை அறிமுகம் செய்து வைத்தான்.

“ஹே நீ தான் வர்ஷினியா. வாவ் யு லுக் சோ கார்ஜியஸ்” அக்காவை முந்திக் கொண்டு அங்கே இவர்களைப் பார்த்து ஓடி வந்த சைந்தவி பாராட்டு பத்திரம் வாசித்தாள்.

வர்ஷினிக்கு ஸ்ரீதரின் சகோதரிகளை மிகவும் பிடித்துப் போனது. பொதுவாகவே கலகல பேர்வழி அவள். அங்கே சிறிது நேரத்திலேயே பெண்கள் மூவரும் சேர்ந்து கொண்டு அடித்த லூட்டியில் பாவம் ஸ்ரீதர் தான் திண்டாடிப் போனான்.

“வர்ஷினி இது என்கேஜ்மன்ட் பங்க்ஷன்னும் சொல்லலாம். மினி வெட்டிங்ன்னும் சொல்லலாம். மேரேஜ் இந்தியாவில். அதனால் இங்க எல்லோருக்கும் இது தான் மெயின். நாங்க பொறந்ததில் இருந்தே இங்க தான் இருக்கோம் ஜீஜூ ( அக்காவின் கணவர்) பேமிலியும் அப்படி தான். அதுனால வி ஆர் ஆல் எக்சைடட்”

“ஸ்ரீதர் சொன்னான். கேம்ஸ் எல்லாம் இருக்குன்னு” வர்ஷினி சைந்தவியிடம் ஆர்வமாய் வினவினாள்.

“பொதுவா பாஸ் ஒ பாஸ், தம்போளா எல்லாம் இருக்கு. அது எல்லோரும் பார்டிசிபேட் பண்ணுவாங்க. பேட் முக்கியமானது அந்தாக்ஷரி அப்புறம் சங்கீத். அதுவும் கம்பைன்ட் சங்கீத்” சைந்தவி வர்ஷினியிடம் விளக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சங்கீத். வாவ். நான் நேர்ல இது வரை பார்த்ததே இல்ல. ஹிந்தி படத்தில் பார்த்தது தான். அது மாதிரி தான் இருக்குமா” வர்ஷினி ஆர்வமாய் கேட்க சைந்தவி உற்சாகமானாள்.

“ஆமா அது மாதிரி தான். ஜீஜூ அம்மா பஞ்சாபி. அதுவும் இங்கேயே ப்ராட் அப். இங்க ஆன்டி சைட் ரிலேடிவ்ஸ் தான் ஜாஸ்தி. அங்கிளும் ஆன்டியும் லவ் மேரேஜ். அதுனால இந்த பங்க்ஷன் நார்த் ஸ்டைல். ஊர்ல நடக்கும் வெட்டிங் நம்ம ஊர் ஸ்டைல்”

“ஹ்ம்ம் சூப்பர்”

“வெறும் சூப்பர் மட்டும் சொன்னா போதாது. இது ஒரு காம்படிஷன் மாதிரி. மாப்பிள்ளை வீடு ஒரு க்ரூப். நம்ம ஒரு க்ரூப். அக்காவோட பிரெண்ட்ஸ் அண்ட் என் பிரெண்ட்ஸ் எல்லோரும் வருவாங்க. நாம தான் ஜெய்கணும்” சைந்தவி மிகத் தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அப்போ ஹிந்தி அந்தாக்ஷரியா”

“இல்ல இல்ல. ஆக்சுவலி ஜீஜூவோட அப்பா பக்கத்துக்கு கசின்ஸ் இந்தியாவில் இருந்து வந்திருகாங்க. அன்ட் எங்க பிரெண்ட்ஸ் கசின்ஸ் நிறைய பேர் தமிழ் தான். அதுனால ஒரு டிப்ப்ரன்ட் கான்சப்ட் யோசிச்சோம். அந்தாக்ஷரி எப்போவும் லாஸ்ட் லெட்டர்ல முடியும் அதுல அடுத்த டீம் ஸ்டார்ட் செய்வாங்க. இது அப்படி இல்லாம சிட்ஸ் எடுக்கணும். அதுல என்ன வருதோ நாம அது மாதிரி பாடணும். நமக்கு சிட்ஸ் ஜீஜூ சைட்ல ப்ரிபேர் செய்வாங்க. அவங்களுக்கு நாம செய்தாச்சு. வி வில் சிங் தமிழ். தே வில் சிங் ஹிந்தி”

“வாவ் இது செம ஐடியா. இட்ஸ் கோயிங் டு பி லாட் ஆப் பன்”

“நாங்க தமிழ் சாங்க்ஸ்ல வீக். ஜீஜூ கசின்ஸ் எப்படியும் கஷ்டமா தான் சிட்ஸ் ப்ரிபேர் செய்திருபாங்க. ஸ்ரீதர் சொன்னான் நீ அந்தாக்ஷரி எல்லாம் கலக்குவியாமே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.