Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 05 - லதா சரவணன் - 5.0 out of 5 based on 1 vote

கிளாஸிக் டான்ஸர் ஆன பெண்ணின் கதை ஹீரோயின் ஓரியன்ட்டட் சப்ஜெக்ட் பட், அவங்களுக்கு விருப்பம் இல்லை, ஆனா அவங்க வீட்டில் இருந்தவங்க நம்பிக்கை தந்ததின் பேரில், வீட்டிற்குப்போனேன் அங்கே வேகத்தில் இரண்டொரு வார்த்தைகள் விழுந்திட்டது? !

அதன்பிறகு மாயாவை நீங்க பார்க்கவே இல்லையா?

இல்லை ஸார்...! அவங்க ஒப்புக்கலை முட்டிமோதி பார்த்தேன். முடியவில்லை என்றதும், விட்டுவிட்டு என் வேலையை கவனிக்கப் புறப்பட்டு விட்டேன் என்றான்.

சரி கவின் நாங்க புறப்படறோம், வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம் வீரா புறப்பட,,,

கவின் தயங்கியபடியே ஸார் மாயாவை அடிக்கடிப் பார்த்ததைத் தவிர நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் வளர்ந்து வரும் இயக்குநர் இப்படி சர்ச்சையில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை,

அதனால் எதுவானாலும் என்னை நேரில் அழையுங்கள் தயவு செய்து ஸ்டூடியோ வரை வர வேண்டாம் என்றான். ப்ளீஸ் ....

சரி வருகிறோம். என்று மூவரும் கிளம்பினார்கள்.

ஸார் உங்களுக்கு இவனைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது.

தப்பானவனா தெரியலை, மாயாவுக்கு நிச்சயம் தொந்தரவு தந்திருக்கிறான். அதாவது நாம் முட்டி மோதிக் கொண்டு போகும் விஷயம் கிடைக்காமல் போனால் உடனே ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று பேசுவார்களே அதை போல்தான் இவனின் மனநிலையும், இவனால் ஏதும் தகவல்கள் கிடைக்கப் போவதில்லை, இருந்தாலும், இவன் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு ஆளைப் போடுவதும் நல்லது என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தன் வீரா வண்டியைக் கிளம்பினார்.

யக்குநர் கவின் தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான். அடக்கடவுளே, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா நான் ஒண்ணு நினைத்தேன் இது வேறாக திரும்புதே ?

மாயாவை அவன் முதன் முதலில் சந்தித்தது காமராஜர் அரங்கத்தில்தான் ?! திரையுலகில் வெள்ளிவிழா கண்ட ஒரு இயக்குநருக்கு பிரம்மாண்டமான விழா எடுத்தார்கள். அங்கு அறிமுக நடனம் ஆடியவள்தான் மாயா ? நடனத்தைக் கண்டதுமே இவள்தான் தன் கதையின் நாயகி என்று முடிவு செய்து விட்டான் கவின். புரோயூசரும் கூட கிடைத்து விட்ட நிலையில் கதாநாயகிக்காக தள்ளிப்போனது படப்பிடிப்பு, இன்னும் இரண்டு மாதத்திற்குள் படத்தை ஆரம்பிக்க முடியாவிட்டால் வாங்கிய அட்வான்ஸ் தந்துவிடுங்கள் என்று கேட்கத் துவங்கினார். நெருக்கடியான நேரத்தில் தான் கவினின் கணகளில் பட்டாள் மாயா.

ஆனால் அவளைச் சந்திப்பதே அத்தனை சுலபமாய் இல்லை, யாரிடமும் அத்தனை சீக்கிரம் பழகாதவள் கர்வம் கொண்டவள் என்று நிறைய விவரங்களை கேள்விப்பட்டாலும், சினிமா என்றாலே உடனே பெண்கள் ஒப்புக்கொள்வார்கள். அதிலும் இவள் ஏற்கனவே மேடை அனுபவங்கள் உள்ளவள். புகழில் புரள்பவள் கட்டாயம் ஒப்புக்கொள்வாள் என்ற அவனின் நினைப்பு பொய்த்துப் போனது மாயாவின் முன் நிற்கும் வரையில் ?!

இத்தனை அலட்சியமான பெண்ணை அவன் கண்டதேயில்லை, ஹீரோயின் என்ன தலையைக்காட்டும் சிறு வேடம் என்றால் கூட கும்பிடு போட்டு வரும் பெண்களிடத்தில் மாயா தனித்து நின்றாள். எப்படியும் அவளை சம்மதிக்க வைத்து விட முயன்றபோதுதான் சந்துருவைக் கண்டான்.

என்ன சார் முகத்திலே கரி பூசி அனுப்பியிருப்பாளே?

ம்...

எனக்கு அப்பவே தெரியும். அவ கர்வம் பிடிச்சவ, இன்னும் இன்னும் கெஞ்சனுமின்னு எதிர்பார்ப்பா...எவ்வளவு தருவீங்க ஒரு படத்திலே நடிச்சா ?

மேடம் எத்தனை எதிர்பார்க்கிறாங்களோ நல்ல கான்செப்ட் ஸார் அவங்க நடிச்சா கட்டாயம் சூப்பர் டூப்பர் ஹிட்தான்.

அடம்பிடிக்கிறீங்களே, பேசாம இவளை விடுங்க. நம்மகிட்டே கைவசம் மாயாவை விடவும் அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்காங்க. என்ன சொல்றீங்க?

வேண்டாம் ஸார் மேடம்தான் பொருத்தமாக இருப்பாங்க.

சரி அவளை நான் சம்மதிக்க வைக்கிறேன் எனக்கு என்ன செய்வீங்க.

ஸார் நிஜமாவா ? கவின் நம்பாமல் பார்த்தான்.

நாளைக் காலையிலே ஒரு 5 லட்ச ரூபா அட்வான்ஸ் எடுத்துக்கிட்டு வாங்க, பேசிடலாம் என்றான் சந்துரு. சந்துருவை பேச்சினை நம்பித்தான் கவின் மறுநாள் பணத்தோடு மாயாவின் வீட்டுக்குப்போனதே?! அங்கோ, ஒரு வயதான பெண்மணியிடம் மாயா எரிந்து விழுந்து கொண்டு இருந்தாள்.

ஏன் என்கிட்டே இருந்து இத்தனை சுகமா இருக்கிறது பத்தாதா, நான் ஒண்ணும் பணம் சம்பாதிக்கிற மிஷின் இல்லை, ஏதோ என் தனிமையைப் போக்கவும் மன ரணங்களை ஆற்றவும் தான் நாட்டியத்தில் கூட ஈடுபடறேன். இதையே சாக்கா வைச்சு அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான் எவனையாவது கூட்டிட்டு வந்தீங்கன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன். அருகில் வந்து நின்ற கவினைக் கண்டவள் , வாங்க ஸார் இதெல்லாம் உங்க வேலைதானா ? நான்தான் நேற்றே முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேன் இல்லை, அப்புறம் என்ன ஆளைத் தூதுவிட்டு வந்திருக்கீங்களா ? ஒரு தடவைக்கு நாலுதடவை கேட்டா, ஒத்துப்பேன்னு நினைச்சீங்களா ?

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 05 - லதா சரவணன்Pooja Pandian 2017-08-20 08:23
Nice epi Latha sis........ :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 05 - லதா சரவணன்Aarthe 2017-08-19 23:06
Interesting update!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 05 - லதா சரவணன்saaru 2017-08-19 12:46
Nice update lathu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 05 - லதா சரவணன்madhumathi9 2017-08-19 07:18
:clap: super epi. Arumaiyaa sariyaana pathaiyil pogira maathiri irukku. (y) waiting to read more. :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top