(Reading time: 12 - 23 minutes)

அப்படி அவருக்கு அவசரமா இருந்தா நான் பண உதவி செய்றேன் தாராளமா கல்யாணம் பண்ணிவையுங்க எனக்கு ஆட்சேபணை இல்லை,

இதுதான் உன் பதிலா அப்படி என் பிள்ளைக்கு என்ன குறை இருக்குன்னு அவனை வேண்டாங்கறே ?

எல்லாமே அதிகம் அதனால்தான் வேண்டாங்கறேன். இங்கே பாருங்க நான் நல்ல மூடில் இருக்கிறேன் அதை கெடுத்துடாதீங்க, என் கல்யாணத்தைப் பற்றி நான் எடுத்திருக்கிறே முடிவை நானே சொல்றேன். இப்போ வழிவிடுங்க

சின்னப்பிள்யையா இருந்தப்போ உன்னை கைவிடாம அப்பனத்தா இல்லாதவன்னு வளர்த்தேன் இல்லை அதுக்கு நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலேயும் பேசுவே ? என் பேச்சுக்கு மரியாதை இல்லாதப்போ நான் இனிமே இருக்கணுமாயென்ன ?

தாராளமா போகலாம் அத்தை, நான் இப்பவே வேற வீடு பார்க்கச் சொல்றேன் ? நான் ஊரில் இருந்து வருவதற்குள் வினிதாவை வேற வீடு பார்க்கச்சொல்றேன்.

இதுதான் நீ காட்டுற நன்றியா ?

அந்த நன்றிக்காகத்தான் நீங்க இன்னும் இந்த வீட்லே இருக்கிறீங்க தர்ற மரியாதையை ஒழுங்கா பயன்பணுடுத்திக்கோங்க, அப்படி இல்லைன்னா தாரளமா நீங்களும் உங்க பிள்ளையும் வீட்டை விட்டு வெளியே போகலாம் நான் தடை செல்லப் போவது இல்லை, சொல்லிட்டு கோபமாய் கிளம்பிச் சென்றுவிட்டாள் மாயா?!

ன்றைய மாலையே மொட்டை மாடியில் சந்துரு வினிதாவைத் தனியாச் சந்தித்தான். நீண்ட நாள் காத்திருந்த சந்தர்ப்பம் அல்லவா?! ஆனால் அவள் அமைதியாய் ஏதும் பேசாமல் தரையைப் பார்த்தபடி இருந்தாள். மெல்லச் சீண்டினான் சந்துரு, ஏய்,,,,இத்தனை நாள்தான் வீட்டுலே யாராவது இருந்திட்டே இருப்பாங்க. இப்போதான் அம்மா கோவிலுக்கு போயாச்சு, மாயா பெங்களூர் போயிட்டா, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலான்னு தானே வரச்சொன்னேன். இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். நான் வேணா போயிடவா ?

சந்துரு நீங்க என்னை நேசிக்கிறது நிஜமான்னே தெரியலை ? இந்த வீட்டுக்கு வந்தபோது உங்க மேல இருந்த ஈர்ப்பு போகப்போக விருப்பமா மாறிச்சு. ஆனா என்னுடைய தகுதியை மனசிலே வச்சிகிகட்டு நான் அமைதியா இருந்திட்டேன். என் மனசை மாத்திக்க முயற்சி பண்ணப்போ நீங்க உங்க பார்வை அதெல்லாம் என் மனதிற்குள் இதம் பரப்பியது என்னவோ உண்மைதான்.

மக்கு வினிதா அதுதான் புரிஞ்சுகிட்டியே ? அப்புறம் என்ன? இன்னும் தள்ளியே நிக்கணுமா வினிதாவை கட்டியணைத்துக்கொண்டான்.

விடுங்க ப்ளீஸ்.... ! அவன் பிடியில் இருந்து தள்ளி நின்றுகொண்டு, பயப்படாம எப்படிச் சந்துரு இருக்க முடியும் மாயா எனக்கு முதலாளி. உங்கம்மா அவங்களை உங்களுக்குக் கல்யாணம் செய்யணுன்னு நினைப்பு இருக்கு, என்னதான் மாயா இப்போ தட்டித் தட்டிப் பேசினாலும், நாளைக்கு உறவு விட்டுப்போயிடக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா, அப்புறம் என் நிலைமை ?! பணங்காசு புகழோடு வர்ற மருமகளை விடுத்து என்னைப் போல ஏழையை எப்படி ஏத்துக்க முன்வருவாங்க?! நான் பார்த்தவரைக்கும் நீங்க அம்மா பேச்சே தட்டாத பிள்ளை அதனால... நான் என் மனசை மூடி மறைச்சிக்கிறதுதானே நல்லது.

மாயா பணக்காரிதான். உறவுமுறையில் அவளை கட்டிக்க சொல்லிக் கேட்டாங்க. நானும் தடை சொல்லத் தோணலை, ஆனா எப்போ உன்னைப் பார்த்தேனோ அப்பவே, நீதான் என் மனைவின்னு முடிவு செய்திட்டேன். ஆமா மாயாவிற்காக என்னை விட்டு விலகனுமின்னு சொன்னீயே இப்போ எப்படி ஒத்துகிட்டே ?

அது மாயாதான் கமலை லவ் பண்றாளே ? தெரியுமா அவங்க இன்னும் ஆறுமாசத்திற்குள்ளே கல்யாணம் செய்துக்கப்போறாங்க, இது எனக்கும் கமலோட நண்பனுக்கு மட்டும்தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது தயவு செய்து நீங்க வெளியே சொல்லிடாதீங்க ?!

ச்சீ எனக்கு இது நல்லவிஷயம்தான் மனசிலே உன்னையும் வைச்சிக்கிட்டு மாயாவை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன், நல்லவேளை இனிமே சிக்கல் இல்லை, அம்மாவை சமாதானப்படுத்தும் வரையில், இந்த காதல் கொஞ்சம் மறைமுகமாகவே இருக்கட்டும். சரியா?!

அவள் கிறக்கமாய் தலையசைத்தாள். இப்பவாவது நம் காதலுக்கு ஒரு அச்சாரம் தரலாமே? உதடுகளை குவித்து அவள் முகம் நோக்கிப் போக, ம்கூம் இதெல்லாம் கல்யாணத்திற்குப் பிறகுதான் ஒரு டயலாக் சொல்லிவிட்டு, வெட்கத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

இவளை மாதிரி எத்தனையோ பார்த்திட்டேன். உன்னை அடையாமல் விடப் போவதில்லை, மாயாவின் மேல் சந்துருவிற்கு விருப்பம் தான். ஆனால் எளிதாய் பெண்களைத் தன் வலையில் வீழ்த்திவிடும் அவனால் மாயாவிடம் மட்டும் நெருங்க இயலவில்லை, நெருப்பாய் இருந்தாள். முயன்று பார்த்து தோற்றுப்பேர் ஒதுங்கிவிட்டான். அவனிற்கு அம்மா பர்வதத்திடம் நம்பிக்கை இருந்தது. எப்படியாவது அவள் முயன்று மாயாவை தனக்கு கட்டி வைத்துவிடுவாள் என்று அதற்குள் வம்பு ஏதும் செய்து அவளிடம் கெட்டபெயர் எடுத்துவிடக்கூடாது என்று அமைதியாய் இருந்தான். அப்படிக் கல்யாணம் ஆகிவிட்ட நிலையில் அவளின் ஒட்டு மொத்த திமிரையும் அடக்கி தன்முன் மண்டியிட செய்ய வேண்டும் என்ற வேகம் கொண்டான், அதற்குள் உணர்ச்சிக்கு வடிகாலாக சில பெண்களை நாடுவதைப் போலத்தான் அவன் வினிதாவையும் நாடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.