(Reading time: 12 - 23 minutes)

ஆனால், மாயாவின் மேல் இருந்த பிடிப்பை விட சந்துரு தயாராகயில்லை. இப்போது மாயாவின் காதல் விவகாரம் தெரியத் தொடங்கியதும் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது நாளை மாயா பெங்களூரில் இருந்து வந்ததும் ஒரு முடிவெடுத்துவிடவேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத்தொடங்கினான். அதன்பிறகு நடந்தவற்றை யோசிக்கும் முன்னரே லாயர் சண்முகம் உள்ளே நுழைந்தார் வாங்க லாயர் ஸார்.

என்னம்மா நல்லாயிருக்கீங்களா ?

என்னத்த நல்லாயிருக்கிறது, அதுதான் எங்க வீட்டு மகாலட்சுமியே போயிட்டாளே? பர்வதம்மாள் புடவைத்தலைப்பிற்குள் அழுகையைக் காட்ட முயற்சித்தாள். இப்படித்தான் லாயர் சார் எப்பப்பாரு ஒரே அழுகைதான் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிறாங்க, நான் என்ன செய்ய ? மாயாவும் போயிட்டா இப்போ இவங்களுக்கும் ஏதாவது ஒண்ணுன்னா நான் தனியா நிக்கணுமே ?

ஏம்மா நடந்தது நடந்து போச்சு, அதற்காக நீங்க பெரியவங்க நீங்கதான் எல்லாரையும் சமாதானப்படுத்தணும். நீங்களே கவலைப்பட்டா என்னம்மா ஆகுறது ? அதற்குள் காபி கோப்பையைக் கொண்டு வந்து வைத்த வேலைக்காரி கனகம் பர்வதம்மாளின் நடிப்பைப் பார்த்து ரொம்பவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

காபி சாப்பிடுங்க ஸார், எப்போதும் நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு காபி கொடுக்கணுமின்னு பாப்பா சொல்லிக்கிட்டே இருப்பா.

கவலைப்படாதீங்கம்மா, நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா பேசிட வந்தேன். மாயா பேரில் உள்ள சொத்துக்களையெல்லாம் உங்களுக்கு பவர் எழுதித்தந்திடலாம் என்று, ஒரு வருடம் கழித்து அதுக்கு ஏதும் ஆட்சேபணை வரலைன்னா நான் உங்க பேரிலேயே எல்லாத்தையும் மாற்றிக் கொடுத்திடறேன். அதுக்கு உண்டான பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி இரண்டு நாளில் கொண்டு வந்திடறேன்.

ஆமா அவளே போயிட்டா இனிமே என்ன வந்து என்ன செய்ய ?

அப்படின்னா...லாயர் இழுக்க, சந்துரு உடனே பேசினான். சார் அவங்க ரொம்பவும் கவலையிலே பேசறாங்க. எந்தவொரு அதிகாரமும் இல்லாம நான் ஆபீஸில் எந்த பணியையும் செய்ய முடியலை, எல்லாம் முடங்கிக்போனா மாதிரி இருக்கு, நீங்க ஆக வேண்டிய வேலைகளைப் பாருங்க ஸார். அப்புறம் நாளை மறுநாள் மாயாவுக்கு பதினாறாவது நாள் காரியம் அவசியம் வந்திடுங்க, நீங்க இப்போ வரலைன்னா நானே வந்துசொல்லாமின்னு இருந்தேன்.

நான் அவசியம் வந்திடறேன். என்றார் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்று லாயர் வாயைத் திறக்கும் போதே, சந்துருவின் மொபைல் அலறியது.

ஹலோ,,,,

மச்சான் நான் ரவி பேசறேன். நான் சொன்னாப்போல, பட்சி வந்திடுச்சு, நீ என்னடா பண்ணிட்டு இருக்கே ? வாடா நேரமாகுது.

வரேன்... வரேன் விட்டுடாதே, ரொம்பவும் மண்டை காஞ்சிப் போயிருக்கிறேன் என்றான் அவன்.

சரிசரி...சீக்கிரம் வா....?!

சார் அவசரமா ஆபீஸில் இருந்து போன் வந்திருக்கு நான் உடனே போயாகணும் நீங்க வேணுன்னா அப்புறம் வாங்களேன்.

இல்லை மிஸ்டர். உங்ககிட்டே இந்த வீட்டைப் பற்றிக் கொஞ்சம் பேசணும். மறுபடியும் அவனின் செல் சிணுங்கியது. ரவியின் நம்பர் தான். சீக்கிரம் வாடா என்று மெசேஜ் வேறு வர, எதுவாயிருந்தாலும் அப்புறம் பாாத்துக்கலாம் ஸார் என்று அவரின் பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல் கிட்டத்தட்ட ஓடினான்.

லாயர் அவனைப் பார்க்க பர்வதம்மாள் பதிலுரைத்தாள். மாயா போனதில் இருந்து இவன் இப்படித்தாங்க அரக்க பரக்க வேலைப்பார்க்கிறான் என்ன செய்யறது ? ம்....! சரி சார் நீங்க போயிட்டு வாங்க என்க லாயர் கிளம்பினார். மறுபடியும் கனகம் கொண்டு வந்து வைத்து மீதமிருந்த பாதாம் அல்வாவைச் சாப்பிடத் துவங்கினாள் பர்வதம்மாள். வரப்போகும் பெரிய பூதம் தெரியாமல் !

சோக் நண்பனை வற்புறுத்திச் சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தான் அவனின் அலைபேசி தொடர்ந்து அடித்தது. லட்சணாதான், சொல்லு லட்சணா..........நான் கமலோட வீட்டிலே இருக்கிறேன்...........மேற்கொண்டு இரண்டு நிமிட சம்பாஷணைகளை முடித்துக்கொண்டு கமலிடம் வந்தான். உன்னையும் என்னையும் உடனே பெங்களூருக்கு வரச்சொல்கிறாள் லட்சணா என்று முடித்தான்.

தொடரும்

Epsiode # 05

Epsiode # 07

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.