(Reading time: 11 - 22 minutes)

உடனேயே கணேஷ் பற்றிய ப்ரொபஷனல் விவரங்கள் அனைத்தும் திரையில் தெரிய கணேஷ் அனைத்தையும் சேவ் செய்து கொண்டாள்.

காதல் வந்தால் கள்ளமும் குடி புகுந்து கொள்ளும் அல்லவா. வருணுக்கு விடியோ கால் செய்வதை தவிர்த்தாள். எங்கு அவன் தன் மனதைப் படித்து விடுவானோ என்று அச்சம் இருந்தது.

விழிகளாலும் செய்கைகளாலும் அவனது காதலை அவளுக்கு உணர்த்தினான் தான். இருந்தாலும் இன்னும் ப்ரொபோஸ் செய்யாத நிலையில் யாரிடமும் எதை பற்றியும் கூற பெண் மனது தயக்கம் கொண்டது.

எதையும் படபடவென்று வெளிப்படையாக பேசிவிடும் வர்ஷினி இந்த விஷயத்தில் சற்றே பொறுமையாக இருந்தாள். ஆனால் பல முறை ஆலோசித்து பின் செயல்படும் கணேஷ் யோசிக்காமல் தனக்கு முக்கியமானவர்களிடம்  தெரிவித்து விட்டான்.

பாஸ்டனில் ப்ராஜக்ட் முடிந்தவுடன் நியூயார்க் சென்று ராமிற்கு சர்ப்ரைஸ் அட்டக் கொடுக்க வர்ஷினி தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தாள்.

ங்கு கணேஷ் வர்ஷினி பற்றிய விவரங்களை எப்படி அறிந்து கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

வேலையில் சற்றே பிசி ஆகிவிட ஈஸ்வரமூர்த்தியிடம் சுற்றி வளைத்து எப்படியாவது கேட்டு விடலாம் என்று அவருக்கு போன் செய்ய வாயிஸ் மெயிலுக்கு போகவும் தான் அவர்கள் திருமணதிற்காக இந்தியா செல்லவிருந்தது கணேஷுக்கு நினைவு வந்தது.

“அர்ஷும்மா...உன்னை நான் எப்படி கண்டுபிடிக்கன்னு தெரியலையே. நீயே என் கண் முன்னாடி வந்திடு டா” தன் இதயத்தில் சுகமாய் துடித்துக் கொண்டிருக்கும் தன்னவளிடம் மொழிந்தான் கணேஷ்.

உயிர்!!! விலை மதிக்க முடியாத ஒன்று. அது எந்த உயிரனாலும் சரி முக்கியம் தான். வளர்ந்த நாடுகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதிகள் நிரம்ப உண்டு. ஓரளவு வளர்ந்து வரும் நாடுகளிலும் அடிப்படை வசதிகளேனும் கிடைத்து விடும். ஆனால் மிகவும் பின்தங்கிய நாடுகளிலும் எந்நேரமும் போரின் கொடும்பிடியில் சிக்கித் தவிக்கும் பகுதிகளிலும் அடிப்படை மருத்துவ வசதி கிடைப்பதே சிரமம்.

அதில் இதய நோய்க்கான சிகிச்சை என்பது அங்கு வாழும் மக்களுக்கு கனவிலும் கிட்டாத ஒன்று.

அது போன்ற சிரமமான சூழல்களில் பணியாற்றவும் பெரும்பாலான மருத்துவர்கள் தயக்கம் கொள்வதுண்டு. உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அங்கு தோற்று நோய்களுக்கு மருத்துவர்களும் பலி ஆகலாம். குடும்பத்தோடு வசிப்பதற்கான சூழ்நிலை கிடையாது.

இருப்பினும் அதையும் மீறி சேவை செய்யும் உயர்ந்த எண்ணத்தோடு உலக சுகாதார அமைப்போடு இணைந்து பல தொண்டு ஆர்வ மருத்துவக் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

“வாழ்நாள் முழுவதும் அங்க போய் சர்வீஸ் செய்ய முடியலைனாலும் கொஞ்ச காலமாவது அங்க போய் அந்த மக்களுக்கு ட்ரீட்மன்ட் செய்யணும்” இதை சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள் ஹரிணியும் ஹர்ஷவர்தனும்.

ஏற்கனவே தானும் இணைந்து கொள்வதாய் கணேஷ் சொல்லியிருந்த நிலையில் இதய சிகிச்சைக்குத்  தேவையான அடிப்படை கட்டமைப்பை முழுமையாய் நிர்மாணித்தப் பின் அழைப்பதாய் சொல்லியிருந்தான் ஹர்ஷவர்தன்.

பல குழந்தைகள் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் இதய நோய்களுக்குப் பலியாகின்றனர்.

அவர்களை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் அடிப்படையில் ஆப்ரிக்க ஆசிய கண்டங்களின் பின்தங்கிய நாடுகளில் நடமாடும் குழந்தைகள் இதய நோய் சிகிச்சை மையம் ஒன்றை ஏற்படுத்தினர்.

கணேஷ் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்.

ஹரிணி கணேஷ் பற்றி ஹர்ஷாவிடம் கூறியதும் வாழ்த்து தெரிவிக்க ஹர்ஷா கணேஷிற்கு பேசும் போது இது பற்றி குறிப்பிட்டான்.

“இப்போ த்ரீ மந்த்ஸ் இங்க இருக்க மெடிகல் சென்டர்ல சர்ஜரி செய்யலாம்னு இருக்கோம். கேன் யூ ஜாயின்” ஹர்ஷா கேட்கவும் உடனேயே தனது ஒப்புதலை தெரிவித்தான் கணேஷ்.

“ராம் நீ இன்னும் ஒன் மந்த்ல இங்க வர வேண்டியிருக்கும். இன்னும் நீ வர்ஷினியை சந்திச்சு பேசலை. இப்போ சரி வருமா” ஹரிணி கவலைப்பட்டாள்.

“செர்ரி. இது நம்ம கனவு நம்ம லட்சியம் இல்லையா. எத்தனை முயற்சி செய்திருக்கீங்க. பாஸ் அவரா நீ வரியான்னு என்னை கேட்கும் போது நான் எப்படி வராம இருப்பேன். நீ தான் சொன்னியே தி யுனிவர்ஸ் வில் ஹெல்ப்ன்னு. கண்டிப்பா என் அர்ஷுவை நான் மீட் செய்து கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டுட்டு வருவேன்” உறுதியாய் சொன்னவன் மீது பெருமை கொண்டாள் ஹரிணி.

அன்றிலிருந்து பரபரப்பாகக் காணப்பட்டான் கணேஷ். ஏற்கனவே மூன்று மாத கால விடுப்பு இப்பணிக்காக மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று  அவன் பணிபுரியும் மருத்துவமனையில் தெரிவித்திருந்தான் கணேஷ்.

“லிசி,..புது அப்பாயின்ட்மன்ட்ஸ் ஏதும் கொடுக்க வேண்டாம். எமர்ஜன்சி டாக்டர் பூஜாவை ஹாண்டில் செய்ய சொல்றேன்” தனது செக்ரடரியிடம் தனது பயணத்தைக் குறித்து தெரிவித்தான்.

“கணேஷ்.. கிவ் மை ரிகார்ட்ஸ் டு பாஸ் அண்ட் மேடம்” பூஜாவிடம் தனது பயணத்தைப் பற்றி கணேஷ் தெரிவிக்க அவனுக்கு வாழ்த்துச் சொன்னாள்.

காலம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் கணேஷ் மனம் துணுக்குற்றது.

“அர்ஷுமா எங்க டா இருக்க நீ. அடுத்த வாரம் நான் கிளம்பினா மூணு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவேன்” கணேஷின் தவிப்பு அவனவளுக்கு கேட்டதா.

இதயம் துடிக்கும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.