(Reading time: 11 - 22 minutes)

“செர்ரி. யு ஆர் தி பெஸ்ட்” கணேஷ் மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லவும் ஹரிணியும் மகிழ்ந்து போனாள்.

“அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டியா ராம்”

“இனிமே தான் சொல்ல போறேன். செர்ரி எனக்கு பாஸ் கிட்ட இதை பத்தி சொல்ல ஒரு மாதிரி இருக்கு. நீயே சொல்லிடு”

“ஹரி கிட்ட நான் சொல்லிடறேன். ஆனா பூர்வி கிட்ட நீயே சொல்லிடு. அப்புறம் நீயும் என்கிட்டே இருந்து மறைச்சுட்டன்னு சண்டைக்கு வருவா. சரி ராம். நான் அப்புறம் பேசறேன். நீ அம்மா அப்பாகிட்ட பேசு” என்றவள் கால் கட் செய்ததும் அந்த பால்கனியில் இருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டான் கணேஷ் ராம்.

ஒற்றைப் பிள்ளையாய் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் கணேஷ் ராம். பள்ளியிலும் சரி இளநிலை மருத்துவம் படித்த போதும் சரி நெருக்கமான நட்பு யாரிடமும் அவன் கொண்டதில்லை. படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் எப்போதும் அதிலேயே மூழ்கி இருந்தான். தனிமை விரும்பி என்றும் சொல்லலாம் கூச்ச சுபாவம் என்றும் சொல்லலாம்.

அவன் மேற்படிபிற்காக அமெரிக்கா வந்த போது கிடைத்த ஹரிணி ஹர்ஷவர்தன் மற்றும் பூர்வியின் நட்பு அவன் வாழ்வில் இனிமையான வசந்த காலம். போர் சாம்பர் (FOUR CHAMBER) என்று மற்றவரால் இன்றளவும் குறிப்பிடப்படும் அளவிற்கு அவர்கள் நட்பு ஆழமாய் பிணைந்திருக்கும் ஒன்று.

அதிலும் ஒரே வயதான பூர்வியோடு சிறுசிறு விஷயங்களுக்கு ஏட்டிக்குப் போட்டியாக மல்லுகட்டும் போது முற்றிலும் கலகலப்பானவனாய் மாறிப் போயிருந்தான்.

“செர்ரி வேற பூரி மசாலா கிட்ட நீயே சொல்லிடுன்னு சொல்லிட்டா. இதை சொன்னேன் நல்லா மசாலா இடிச்சு தள்ளிருவாளே” தனக்குத் தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தான்.

முதலில் பெற்றோரிடம் சொல்லிவிடலாம் என அவர்களுக்கு போன் செய்து நேரடியாகவே விஷயத்தை சொல்லிவிட்டான்.

அவனது பெற்றோர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வாழ்த்தவும் அவன் மனம் இன்னும் நிறைந்து போனது. ஆனால் அவனது அன்னை மருமகளின் விவரங்களை கேட்கவும் பதில் கூற முடியாது தவித்துப் போய்விட்டான்.

இப்போதைக்கு பூர்வியிடம் பேசினால் அவள் கண்டிப்பாக லெப்ட் அண்ட் ரைட் ட்ரில் எடுத்து விடுவாள், பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணியபடியே தனது மொபைலில் இருந்த ரிகார்டரை ஆன் செய்தான்.

தெளிவாக இல்லை என்றாலும் அவனது தேவதை காதோடு தான் நான் பாடுவேன் என்று அவனுக்காகப் பாடியது அவன் செவிகளில் அம்ரிதமாய் தித்தித்தது.

ங்கு அவள் பெயர்  (அதுவும் முழு பெயர் தெரியாது) தவிர ஏதும் தெரியமால் கணேஷ் விழித்துக் கொண்டிருக்க அங்கோ வர்ஷினி மங்கல்யான் வேகத்தில் தீயை வேலை செய்தாள்.

விழா முடிந்த மறுதினமே வர்ஷினி ஸ்ரீதர் இருவரும் ப்ராஜக்ட்டுக்காக  பாஸ்டன் சென்றிருந்தனர்.

“ஸ்ரீதர்...நேத்து நம்மளை டிராப் செய்தாரே...அவர் கூட டாக்டர்ன்னு” மெல்ல ஸ்ரீதருக்கு தூண்டில் போட்டாள் வர்ஷினி.

“ஹ்ம்ம் டாக்டர் கணேஷ் ராம். ஹார்ட் சர்ஜன்ன்னு ஈஸ்வர் அங்கிள் சொன்னாரே. அன்னிக்கு கூட உன்னை நயாகரா பால்ஸ்ல வச்சு திட்டினார் தானே. அவருக்கு உன்னை அடையலாம் தெரியல போல. தப்பிச்ச” ஸ்ரீதர் சொல்லவும் வர்ஷினி வெளிக்காட்டாமல் நகைத்துக் கொண்டாள்.

“எங்க தப்பிச்சேன். அதான் லைப் லாங் சிறை வச்சுட்டாரே டாக்டர்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் “அவர் பெரிய டாக்டரோ” சற்று விட்டேற்தியாக சொல்லவும் ஸ்ரீதர் அவள் உள்நோக்கம் புரியாமல் சண்டைக்கு வந்தான்.

எப்போதும் வர்ஷினிக்கு அவளது அண்ணன் வருண் பெரிய டாக்டர் என்பதில் மிகுந்த கர்வம் உண்டு. அடிக்கடி நண்பர் வட்டாரத்தில் பெருமை பேசிக்கொண்டிருப்பாள். அதனால் அவளது தோணி ஸ்ரீதருக்கு சற்றே எரிச்சலை ஏற்படுத்தியது.

“ஆமாம் அவர் பெரிய டாக்டர் தான். ஈஸ்வர் அங்கிள்க்கு சர்ஜரி பண்ணிருக்கார். நியூயார்க்ல பெஸ்ட் டாக்டர்” அவ்வளவாக விவரங்கள் தெரியாத போதும் ஸ்ரீதர் கணேஷின் பெருமைகளை கூற வர்ஷினிக்கோ அதைக் கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்தாள்.

“அவர் பார்த்தா சின்ன வயசா தெரியுது. நியூயார்க்லேயே பெஸ்ட் டாக்டர்ன்னு சொல்ற” தூண்டிலை பலமாக போட்டாள்.

“ஏன் உன் அண்ணா கூட தான் சின்ன வயசு. அவர் தான் பெஸ்ட்ன்னு நீ சொல்லலையா. வேணும்னா ஜான்வி அக்கா கிட்ட கேளு” என்றான் பதிலுக்கு.

“நான் ஏன் யாரை பத்தியோ போய் கேக்குறேன். எனக்கு வேற வேலை இல்லையா” அலட்சியமாய் சொன்னபடியே நேராக திருவாளர் கூகுளின் ஜன்னலை தட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.