(Reading time: 10 - 19 minutes)

கோவில் அந்த ஊருக்குள் இல்லாமல், ஊருக்கு வெளியே கருவேல மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த அய்யனார் தெய்வம்.

இங்கு சாமி கும்பிட வந்தால் தங்குவதற்கு என்று அங்கு ஒரு பெரிய விருந்தினர் மாளிகை கட்டி வைத்திருந்தார் அர்ஜுன். அது கடல் ஓரமாக இருந்தது.  அதில் தனி தனி அறைகளாக இல்லாமல், பெரிய ஹால் போல் இருந்தது, அதில் வரிசையாக கட்டில்கள் போடப்பட்டு இருந்தது. சாமி கும்பிட வரும் போதெல்லாம் இப்படி அனைவரும் ஒரே அறையில் தங்கி பேசி மகிழ வசதியாக இருக்கும் என்று அவ்வாறு கட்டி இருந்தார் அர்ஜுன். ஒரு பெரிய சமையல் அறையும், சாப்பிடும் அறையும், இருந்தது. வீட்டை சுற்றி மா, பலா, தென்னை என்று மரங்களாக இருந்து காற்றை வாரி இறைத்தது.

ஐந்து ஆறு குழந்தைகளும் வந்திருந்ததால், அனைவரும் கடலில் சென்று குளித்து கும்மாளம் போட்டனர்.

தூத்துக்குடிக்கு அருகில் இந்த இடம் இருந்ததால் தாத்தா ஈஷ்வரே அங்கிருந்து  சமையல் ஆட்களை அழைத்து வந்திருந்தார். அவர்களும்  இரவு உணவை தயாரித்து வைத்தனர்.

அனைவரும் கடலில் குளித்த களைப்பில், பசி வயிற்றை கிள்ள, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

பூஜாவிர்க்கும், இந்தருக்கும் தனியாக பேச கூட நேரம் கிடைக்கவில்லை. இருவரும் கண்ணாலேயே பேசியபடி இருந்தனர்.

ஈஷ்வர் சொல்லி கொண்டிருந்தார், அந்த காலத்தில் பொழுது போக்கு என்பதே இப்படி காட்டிற்குள் வந்து சாமி கும்பிட்டு செல்வது தான். என்று அக்கால கதைகளை எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.

று நாள் காலை ஒவ்வொருவர்ராக எழுந்ததும், பனை மரத்தில் இருந்து பதனிர் எறக்கி கொண்டு வந்து எல்லோருக்கும் வழங்கினார் ஈஷ்வர். ஒரு மரத்து பதனிராக குடித்தால உடம்புக்கு மிகவும் நல்லது என கூறினார். பூஜா முதன் முறையாக  குடிப்பதால் பயந்து கொண்டே தான் குடித்தாள். ஆனால் அதன் சுவை அவளையே மயக்கி விட்டது.

பின்பு அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவில் என்று ஏதும் கட்டமாக இல்லாமல், ஒரு பெரிய மேடையின் மேல் சாமி சிலை நிறுவப்பட்டு இருந்தது. இப்பொழுது வரை சாமி உத்தரவு கொடுக்கவில்லை கட்டிடம் கட்ட என்று ஈஷ்வர் விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார் பீஷ்மரிடம்.

பீஷ்மருக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த அவருக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததது. பெண்ணை நல்ல இடத்தில தான் கொடுத்து இருக்கிறோம் என்று ஆனந்தபட்டார்.

ஒரு வழியாக காலை சாப்பாட்டை முடித்து அனைவரும் கிளம்பி தூத்துக்குடி வந்து அடைந்தனர். அங்கு ஈஷ்வர் வீட்டில் மணமக்களை பார்க்க ஒரு பெரிய கூட்டமே கூடி இருந்தது. சொந்த பந்தங்கள், அவர்கள் ஏற்றுமதி வியாபாரத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், விவிங் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள், அநேகம் பேர் வந்திருந்தனர். அனைவருக்கும் ஈஷ்வர் பெரிதாக விருந்து வைத்திருந்தார். அனைவரும் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

சொந்தக்கார கூட்டதிற்கு நடுவில் ஒரு முறை இந்தர், பூஜாவை ஒரு ஓரமாக அழைத்து சென்றான். “என்னடா கஷ்டமா  இருக்கா? என்று வினவ.....

“இல்லை ஜித்து, எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு , நம்ம கோவில், இங்க இந்த சொந்தகாரங்க, எல்லாமே” என சந்தோஷமாக கூறினாள்

அவளது சந்தோஷ முகத்தை பார்த்தவாறே “ம்ம் “ என்று மட்டும் கூறினான் இந்தர்.

“இங்க உள்ள சாப்பாடு கூட “

“ம்ம்”

“நான் என்ன கதையா சொல்றேன், இப்படி என்ன சொன்னாலும் ம்ம் கொட்டறிங்க? பூஜா கோபமாக கேட்க

“உனக்கு என்ன மறதி வியாதியா? நேத்து தான சொன்னேன், ம்ம் க்கு அர்த்தம்” இந்தர் அலுத்து கொள்ள சட்டென வெட்க்கி சிவந்தாள் பூஜா......

“ஹேய், இங்க என்ன நடக்குது, ரொமான்ஸா” என கேட்டபடி அவர்கள் அருகில் வந்தான் அபி.

“ஆமான்டா, அப்படியே நான் ரொமான்ஸ் செய்தாலும், நீங்க விட்டுட்டு தான் மறு வேலை பார்பிங்க.” என்றான் இந்தர்.

“அதெல்லாம் மால்டிவ்ஸ் ல் போய் பார்த்து கொள்ளுங்கள் அண்ணா” என்றான் அபி........

“மால்டிவ்ஸ் பார்த்து கொள்ள உங்க பர்மிஷன் எனக்கு எதுக்குடா” என இந்தர் கேட்க

அதற்குள் மற்றவர்களும் அவர்களை சுற்றி வளைத்து சேர்களில் அமர்ந்தனர்.

சரி இந்தர் இப்போ ஒரு பாட்டு பாடு என ஒரு அண்ணன் ஒருவர் கூற மற்றவர்களும் தொடர்ந்தனர். இந்தர் பூஜாவை பார்த்த பொழுது அவள் உதடு மட்டும் அசைத்து பாடுங்க என்றாள்.

உடனே இந்தரும் பாட ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.