(Reading time: 10 - 19 minutes)

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்  என் மூச்சில் சேருதே

உன் கைகள்  கோர்க்கும் ஓர் நொடி

என் கண்கள்  ஓரம் நீர்த்துளி

உன் மார்பில்  சாய்ந்தே சாகத்தோணுதே

ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……

உன்னாலே எந்நாளும்  என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்  என் மூச்சில் சேருதே

விடிந்தாலும் வானம்  இருள்பூச வேண்டும்

மடிமீது சாய்ந்து  கதைபேச வேண்டும்

முடியாத பார்வை  நீ வீச வேண்டும்

முழு நேரம் என்மேல்  உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை  நாம் போவோம் அதுவரை

நீ பார்க்க பார்க்க  காதல் கூடுதே

ஓஹோ…. ஓ… ஓ…  ஓஹோ… ஹோ……

உன்னாலே எந்நாளும்  என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்  என் மூச்சில் சேருதே

ஏராளம் ஆசை  என் நெஞ்சில் தோன்றும்

அதை யாவும் பேச  பல ஜென்மம் வேண்டும்

ஓ ஏழேழு ஜென்மம்  ஒன்றாக சேர்ந்து

உன்னோடு இன்றே  நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம்  நம் காதல் முடியுமா

நீ பார்க்க பார்க்க  காதல் கூடுதே

ஓ… ஓ……. ஓ…… ஓ…

உன்னாலே எந்நாளும்  என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்  என் மூச்சில் சேருதே

உன் கைகள்  கோர்க்கும் ஓர் நொடி

என் கண்கள்  ஓரம் நீர்த்துளி

உன் மார்பில்  சாய்ந்தே சாகத்தோணுதே

ஓ….. ஓ…….. ஓ…….. ஓ…….

உன்னாலே எந்நாளும்  என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்  என் மூச்சில் சேருதே

இந்தர் பாடி முடித்த பொழுது கரகோஷம் விண்ணை எட்டியது. இந்தர், பூஜாவையே பார்த்திருந்தான். அவனது  குரலில் மயங்கியது மட்டுமல்லாது, அவன் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து பாடியது, அவளது இதயத்தின் அடி வரை சென்று அவள் கண்களில் நீராக நிறைந்தது. ஓடி சென்று அவனை அணைத்து கொள்ள துடித்த மனதை அடக்க பெரும் பாடு பட்டாள் பூஜா.........

அவனை எப்பொழுது தனிமையில் சந்திப்போம் என காத்திருக்க ஆரம்பித்தாள் பூஜா..........

பூஜாவின் ஏக்கம் இந்தருக்கும் புரிந்தது அவள் கண்களின் வழியே ........... அவள் அருகே சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் இரவு பத்து மணிக்கு சென்னையில் வீட்டுக்கு போய்டலாம் டா என்று கூறி அவளை சமாதானப் படுத்தினான் இந்தர்.........

ஊரிலிருந்து வந்த அனைவரும் இரவு உணவுக்கு பின் தூத்துக்குடி விமான நிலையம் நோக்கி பயணித்தனர். சற்று தாமதாமாக விமானம் கிளம்பும் என்று தொலைபேசிக்கு முன் அறிவிப்பு வந்திருந்ததால் அவர்கள் சற்று தாமதமாக கிளம்பி பத்தரை மணிக்கு தான் விமான நிலையத்தை அடைந்தனர். செக் இன் செய்து உள்ளே அமர்ந்த பொழுது விமானம் இப்பொழுது கிளம்பும், அப்பொழுது கிளம்பும் என்று விமானதில் எதோ தொழில் நுட்ப்ப கோளாறு என்று அனைவரின் பொறுமையையும் சோதித்து விடியற்காலை மூன்று மணிக்கு கிளம்பி ஐந்து மணிக்கு சென்னை வந்து அடைந்தது.

வீட்டை அடைந்த பொழுது ஆறு மணி ஆகி இருந்தது. இந்தர் அவனது வீட்டிற்க்கே பூஜாவை அழைத்து சென்று விட்டான்.

அவனது அறைக்குள் நுழைந்ததும் பூஜா அவனை இருக்க கட்டிக் கொண்டாள்.

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 15

Episode 17

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.