(Reading time: 9 - 18 minutes)

“நீ யாரையாச்சும் லவ் பண்ணுறியா?” எதையும் பிரதிபலிக்காத குரலில் கேட்டாள் யாழினி.

“இவ கிட்ட புகழ் எதையுமே சொல்லலையா? அதான் இப்படி கேட்கிறாளா?” என்ற மைண்ட்வாய்சில் பேசியவளை உள்மனம் கேலி செய்தது.

“அட மக்கு மைதாமாவே,  புகழ் சொல்லுற அவளுக்கு நீயும் தமிழும் ஈருடல் ஓருயிர்னு காதலிச்சீங்களா என்ன?”. ஆழ்மனதின் கேலி அவளை சிரிக்க வைத்தது.கொஞ்சமாய் வருந்தவும் வைத்தது. ஏதோ விசைக்கு கட்டுப்பட்டு இயங்கும் இயந்திரம் போல உணர்ச்சியற்ற குரலில் உணர்ச்சிகர பதில் சொன்னாள்.

“காதல்.. அதுக்கான அர்த்தத்தை நான் உணர்ந்திருக்கேன்.. ஆனா அனுபவிக்க முடியல ஆயிஷா. கொடுக்குறது மட்டும்தான் காதல்.. கொடுக்கும்போதெல்லாம் மனசுல உதிக்கிற சந்தோஷம்தான் காதல்னு நினைச்சவதான் நான். ஆனா என் மனசுக்குனு தேவையான காதல் ஏன் கிடைக்கலன்னு யோசிக்கும்போது என் மேலநானே பரிதாபப்படுறேன்.

இந்த மனசு ஏன் ஆயிஷா இவ்வளவு முட்டாளாக இருக்கு? யாரு நம்மை நேசிக்க மாட்டாங்களோ, யாரு நம்மை நினைக்க மாட்டாங்களோ, யாரு நாம செத்தாலும் வாழ்ந்தாலும் அவங்க பாட்டுக்கு சந்தோஷமாக இருப்பாங்களோ அவங்களை தேடி பிடிச்சு அவங்களை மட்டும் நேசிக்கிது?

எப்படி சில பேரால பழகின நாட்களை குப்பை மாதிரி கசக்கி அது மேலயே ஏறி நடந்துகடக்க முடியுது? “ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிச்சோமே, நம்மையும் ஒரு பொண்ணு பைத்தியம் மாதிரி நேசிச்சாளே, அவள் எப்படி இருக்கா? அவள் மனதளவில் திடமாக இருக்காளா?இல்ல வாழ்க்கையே போச்சுன்னு விரக்தியில் இருக்காளா? நான் அவளுக்கு கிடைக்க மாட்டேன் என்றாலும் அதை அவ மனசு வருந்தாதபடி உணர வைக்கனுமே” இப்படி எல்லாம் யோசிக்கவே தோணாதா?

சுயநலமா வாழுறது அவ்வளவு சுலபமாக இருக்குல? தினமும் நாள் முழுக்க தைரியசாலியா, சிரிச்சமுகமா சுத்திட்டு, ராத்திரியில் கதறி அழுற அந்த பெண்ணொட கண்ணீரின் விசும்பல் கூட அவனுக்கு கேட்காதுல? இங்க இவ தூக்கமே இல்லாம நடைப்பிணமாக, அங்க அவன் கனவுகளின் உச்சத்தில் சிலிர்த்து வாழ்வதுதான் உலக நியதியா?

ஒரு பெண்ணோட மென் உணர்வுகள் விழித்தெழுந்து வீழ்ந்தே போனதுக்கு தானும் ஒரு காரணம்னு உணர்ந்து சின்னதாக மன்னிப்பு கேட்க கூட சிலர் தயாராக இல்லையோ?” மறுத்து போன குரலில் அவள் சொல்லி முடிக்கும்போது ஆயிஷாவின் விழிகளின் ஒரு சொட்டு கண்ணீர் விழவா என அனுமதி கேட்டு நின்றது.

“ஷ்ஷ்.. யாழினி..நம்ம கண்ணுக்கு தெரியாததினால் ஒரு விஷயம் இல்லன்னு ஆகிடாது.. கடவுள், காற்று..அந்த மாதிரிதான் காதலும்..காதலை கொடுக்குற சுகம் உனக்கு தெரியும்.. வாங்கி அனுபவிக்கிற சுகம் உனக்கு இன்னும் தெரியல..அதுக்காக அப்படி ஒருவிஷயமே இல்லன்னு ஆகிடுமா? ஒரு நாள் அந்த காதல் உன்னை தேடி வரும்..நீ எதிர்ப்பார்த்ததை விடபலமடங்கு பெருசாகி,வலுவாகி உன் முன்னால வந்து நிக்கும்..” என்றாள் ஆயிஷா. அவள் வார்த்தைகள் பலித்தால்? அதுவும் அந்த தினமே பலித்தால்? அதற்கான பணியை அறியாமலே உடனே துவக்கியிருந்தார் தமிழின் அப்பா.

மிழ்”.. லேப்டாப்பில் மூழ்கி இருந்தவனை மீட்டு எடுத்தது சுதாகரின் குரல். அவர் குரலில் எதிரொலித்த சந்தோஷம் அங்கு புத்தகம் படித்து கொண்டிருந்த  மனோன்மணியின் கவனத்தையும் ஈர்த்தது.

“சொல்லுகப்பா..”

“உனக்கொரு பொண்ணு பார்த்திருக்கேன்.. நீயும் பாக்கனும்ல?எப்போ ஃப்ரீன்னு சொல்லு!”என்று அவர் சொல்ல புத்தகத்தை பட்டென மூடி வைத்தார் மனோ. அகக்கண்ணில் அன்று கோவிலில் தமிழை எதிர்ப்பார்த்த யாழினியின் முகம் நினைவில் நின்றது.

“அந்த பொண்ணை விரும்பலயா இவன்?” மனதில் கேள்வி எழ, தமிழைப் பார்த்தார் அவர். அவன் வாயைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருக்க, அவரே பேசினார்.

“என்ன நடக்குது இந்த வீட்டுல?கல்யாணம் தமிழுக்கா இல்ல உங்களுக்கா?” காட்டமாய் கேட்டார் மனோன்மணி.

“ஷ்ஷ்..ஏன் இப்படி கோபப்படுற?”

“கோபப்படாமல் கொஞ்சுவாங்களா? தமிழுக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா? அவனுக்கு இதுல இஷ்டமா?இல்ல வேறயாரயாச்சும் விரும்புறானா ?எதுவுமே கேட்காம எப்போ பொண்ணை பார்க்கலாம்னு கேட்குறீங்க..”

“ அவனுக்கு நம்மளோட பேசவே நேரமில்லை..இதுல காதல் எங்க பண்ண போறான்?  நான் பார்த்த பொண்ணும் டாக்டர் மனோ.. அழகா இருக்கா. தெரிஞ்சவரோட பொண்ணுதான்.. தமிழுக்கு நல்லஜோடி..”

“ஐயோ.. உங்க தொல்லை தாங்கலங்க.. எப்போ பார்த்தாலும் டாக்டர் டாக்டர்னு.. நம்ம பையன் டாக்டர்ன்னா மருமகளும் அப்படித்தான் இருக்கனும்னூ யாருதான் உங்களுக்கு சொன்னாங்களோ!”

“ஒரே வேலை பார்த்தா நல்ல புரிந்துணர்வு இருக்கும்ல?”

“ஏன் ..நானும் நீங்களும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழலையா?”

“ஏன் இப்படி விதண்டாவாதம் பண்ணுற நீ? ஏன் ..தமிழ் யாரையாச்சும் லவ் பண்ணுறானா என்ன” சுதாகரன் கேட்கவும் இதழில் மந்தகாச புன்னகையொன்றை சிந்தியபடி எழுந்தான் தமிழ்.

“ஆமாப்பா..இத்தனை நாளா சரியா தப்பான்னு, இருக்கா இல்லையான்னு குழம்பிட்டு இருந்தேன்.. நீங்க இன்னொரு பொண்ணைப் பத்தி பேசுன இந்த ஒரு நிமிஷத்துலேயே அவ என் நடு மண்டையில சுத்தியலால நங்குனு அடிச்ச மாதிரி இருக்கு.. ஐ லவ் ஹெர்ப்பா..அவதான் என் பொண்டாட்டி..” என்றான் தமிழ்.

“யாழினிதானேடா?” ஆசையாய் கேட்டார் மனோன்மணி. இதழ்களை குவித்து அன்னைக்கொரு முத்தத்தை காற்றில் பறக்கவிட்டு “யெஸ்”என்றான் தமிழ். அன்னையும் மகனும் கொஞ்சி கொண்டதில் அங்கு தனலாய் எரிந்த ஜீவனொன்றை மறந்தே போனார்கள்.! கவனித்திருக்கவேண்டுமோ?

அடுத்த வாரம் சொல்லுறேன்.

ஹாய் ப்ரண்ட்ஸ்.. பல நாட்களின் இடைவெளிக்கு பின், இப்பொதுதான் இந்த கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. காதலைப்போல நெருக்கம் காட்டும் நட்பு, நட்பை போல ஆதரவு தரும் காதல் என இரு வேறு ஆண்களை தமிழ் புகழ் என உங்கள் முன் சமர்ப்பித்து கொண்டிருக்கிறேன்.. அவர்களின் கதாப்பாத்திரங்கள் உங்களை கவர்ந்துள்ளனவா? அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டுள்ளேன்.. அதையும் கமெண்டில் சொல்லுங்கள்.நன்றி.

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.