(Reading time: 18 - 36 minutes)

தைப் பார்க்கவியலாமல் எழுந்த துடிப்பை மனதில் மறைத்துக் கொண்டவளாய்.....எனக்கு கொஞ்ச நாள் டைம் தருவியா அரசு, நான் யோசிச்சு சொல்றேன் சரியா.....

கேட்டவளுக்கு தலையசைத்து பதில் கொடுத்தான் அவன்.

 சற்று நாட்கள் கடந்த பின் அவளும் தன் நேசத்தை தெரிவிக்க அவர்களுடைய சொர்க்க காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட அரசு தன் நண்பர்களிடமிருந்து விடைப் பெற்று வழக்கமாக பனி அரசியை சந்திக்கும் இடம் தேடிச் சென்றான்.

 காதலில் கட்டுண்டவனாக இருந்தாலும் அவனுடைய கோபம் இன்னும் கட்டுக்குள் வந்திருக்கவில்லை. அவன் காதலை கொச்சைப் படுத்திப் பேசின ஒருவனை ஒரு நாள் அவன் மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருக்க எதிரில் அவளைக் கொண்டு நிறுத்தி இருந்தனர் அவன் நட்புக்கள். அவளது கலங்கிய கண்களைப் பார்த்து அப்படியே அவன் கோபம் வடிந்து விட்டதோ என்னமோ அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் அவன்.

 கண்களால் சிரிக்க மட்டும் தான் முடியும் என்றுக் காட்டிக் கொண்டிருந்த அவனுடைய அரசியின் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்த தன் செய்கை மேல் அவனுக்கு அளவில்லா வெறுப்பு வந்து விட்டிருந்தது.

 ஸாரிம்மா.....தனக்கு அவள் காதல் பெற அருகதை இல்லையோ..தன்னை விட்டு அவள் சென்று விடுவாளோ என்று எப்போதும் தோன்றும் அவன் மனக்கலக்கம் இன்று பேயாட்டம் போட்டுக் கொண்டு இருந்தது.

 இதோ இப்போது என்னை விட்டுப் போய் விடுவாள் என்று குமைந்து தலைக் குனிந்து அழுது விடுவோமோ எனத் தோன்றும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தி அமர்ந்து இருந்தவனின் தலையை பரிவாய் வருடியது அவள் கரங்கள். சட சடவென்று தலையில் நீர்ச் சிதறல்கள்.அழுகிறாளா என்ன?.......விதிர் விதிர்த்து நிமிர்ந்தவனின் கண்களுக்கு முகமெல்லாம் அழுகையில் நனைந்திருக்கும் அவள் நிலைப் பார்த்து மனம் பதறியது. ஒருவருக்கொருவர் மௌனமாய் நேரத்தைக் கரைத்தவர்கள் அன்றைய தினம் மட்டும் பேசாமலேயே விடைப் பெற்றுக் கொண்டார்கள்.

ழமாய் வேரூன்றிவிட்ட அவர்கள் காதலுக்கு எமனாய் வந்தது மற்றொரு நிகழ்வு, தன்னை வெகுவாக கட்டுப் படுத்தி இருந்த அரசுவின் பொறுமையை அவனுடைய தாயைக் குறித்த தேவையற்றப் பேச்சுக்களால் தகர்த்திருந்தான் ஒருவன். மூர்க்கமான அடிதடியின் நடுவில் அரசி விரைந்து வந்து நிற்க செயலற்றவனாக அரசு நின்றிருந்த அந்த ஒரு நொடிப் பொழுதை தனக்கு சாதகமாக்கிய மற்றவன் அவனைத் தள்ளி விட புருவத்தின் மேல்ப் பகுதியில் வெட்டு காயம். அதுவரையிலும் கல்லூரியின் வெளிப் பகுதியில் நடந்து வந்திருந்த சண்டைகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வராதிருக்க, தற்போது கல்லூரி காம்பவுண்டிலேயே நிகழ்ந்த இந்த விஷயம் முந்தைய அத்தனைப் பிரச்சினைகளையும் வெட்ட வெளிச்சமாக்கியது.

 அரசுவின் அம்மாவின் மன்னிப்பை இந்த முறை ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் அவனை காலேஜிலிருந்து நீக்கியது. பனி அரசியின் காதலைப் பற்றித் தெரிந்துக் கொண்ட அவள் பெற்றோர் அவள் காலேஜை மாற்றி விட்டனர்.அதன் பின்னர் என்ன நடந்ததோ?.........யாருக்குத் தெரியும்.....

ன் பணிகள் அனைத்தும் சரிவர நிறைவேற்றியாகி விட்டதா எனக் கவனித்து விட்டு வெளியே வந்த வளன் சல்யூட் அடித்த செக்யூரிட்டியிடமிருந்து தலையசைத்து விடைப் பெற்று காரில் அமர்ந்து வீட்டை நோக்கிப் பயணித்தான்.

டோர் பெல் அடித்ததும் கதவைத் திறந்தது சேர் மேல் ஏறி நின்ற நான்கே வயதான ஏஞ்சலிகா...

ப்பா....தாவியவளை பெருமிதமாய் தூக்கிக் கொண்டான் அவன்.

அவள் முகத்தில் ரகசியமாய் ஏதோ சொல்ல வருகின்ற தீவிரம்.

ஏங்க ...வந்துட்டீங்களா கிச்சனிலிருந்து வந்தவள் "ஏஞ்சல் குட்டி... அப்பா டயர்டா இருப்பாங்க சேஞ்ச் செய்துட்டு வரட்டும் சரியா" தூக்க விழைந்தவளிடம் செல்லாமல் மறுத்தது அந்தக் குட்டித் தேவதை.

நீ போ பனிம்மா, பாப்பாக்கு எங்கிட்ட எதுவோ பேசணும் போல...........

"ஓ....நல்லா பேசுங்க உங்க ரகசியத்தை" மகளைப் பார்த்து ஒற்றை விரலை ஆட்டி மிரட்டியவளாய் நகர்ந்தாள் பனி அரசி.

அப்பா...... அம்மா ஒரு சீக்ரெட் உங்க கிட்ட சொல்ல வேணான்னு சொல்லியிருக்காங்க.....

ம்ம்...

நான் அதை உங்களுக்குச் சொன்னா என்ன தருவீங்க....வியாபார ஒப்பந்தம் ஆரம்பிக்கும் முன்னே மறுபடி டோர் பெல் அடிக்க மனைவியை தொந்தரவு செய்ய விரும்பாதவனாக கதவைத் திறந்தவன் ஆச்சரியப் பட்டுப் போனான்.

"வளனரசு" ஆசையாய் அழைத்தப்படி அம்மா நின்றிருக்க...

வாங்கம்மா, என்னம்மா சொல்லவேயில்லை . சொல்லியிருந்தா ஸ்டேஷனுக்கு கூப்பிட வந்திருப்பேனே.. என்றவனாய் அம்மா கையிலிருந்த பைகளை அவசரமாய் வாங்கிக் கொண்டான் அவன். 

அதான் வழக்கமா வர்ற டாக்ஸி டிரைவருக்கு போன் செய்து கூப்பிட்டிருந்தேனே, கொஞ்ச நேரம் முன்னாலதான் மருமக கிட்டே விஷயம் சொன்னேன். எதுக்குப்பா நீங்கள்லாம் வீணா அலைஞ்சுகிட்டு..

 தனியாகவே சுமைகளைச் சுமந்துப் பழக்கப் பட்டுப் போன அம்மாவைப் பார்த்து வியப்பாக எதுவும் தோன்றவில்லை அவனுக்கு வெளியேச் சொல்ல இயலாத ஆதங்கம் மட்டுமே மனதில் நிறைந்து நின்றது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.