(Reading time: 18 - 36 minutes)

தே நேரம் தன் டீலிங்க் தடைப் பெற்று விட்டதை எண்ணி கோபத்தில் பாட்டியிடம் செல்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள் ஏஞ்சலிகா.

"அடடே என் குட்டிம்மா சொல்ல வந்த சீக்ரெட் இதுதானா? நாளைக்கு அப்பா உனக்கு ஒரு பெரிய டைரி மில்க் வாங்கித் தரேன் சரியா"... என சமாதானத்தூது விட்டான் தகப்பன்.

பெரிய சாக்லேட்....அப்போச் சரி.... சமாதானமாகியவள் பாட்டி எனத் தாவினாள்.மகிழ்ச்சியோடு பேத்தியை தூக்கிக் கொண்டு முத்தமிட்டவருக்கு பதிலுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சிக் கொண்டாள் ஏஞ்சலிகா.

 தன் மகன் வாழ்க்கை நல்லபடியாக அமைந்தால் தான் நிறைவேற்றுவதாக எண்ணியிருந்த தன் வேண்டுதல்களை வேளாங்கண்ணி ஆலயம் சென்று நிறைவேற்றிய கையோடு சில சொத்துப் பிரச்சினைகளுக்காகவும் ஊர் சென்றிருந்த அம்மா அன்று திரும்புவதை அவனுக்கு ரகசியமாக வைத்திருந்த மனைவியையும் மகளையும் நினைத்து அவனுக்கு சிரிப்பாக வந்தது. 

"அத்தே வாங்க.... சுடுதண்ணி போட்டு வைச்சிருக்கேன் மேலுக்கு ஊத்திட்டு வாங்க,அப்புறமா எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்"

என்றவளை "இருடி உன்னைப் பார்த்துக்கிறேன்" என்று ரகசியமாய் மிரட்டினான் அவன்.

"ம்க்கும்" அவனுக்கு மட்டும் புரியும் விதம் நொடித்துக் கொண்டுச் சென்று விட்டாள் அவள்.

"நம்ம எல்லோரும் சேர்ந்து வர்ற லீவில வேளாங்கண்ணிக்குப் போகணும்பா" என்ற அம்மாவிடம் 

அதுதான் நான் தீபாவளி லீவுக்கு சேர்ந்து போகலான்னு சொல்லியிருந்தேனே அம்மா நீங்க தான் அவசரமா போயிட்டீங்க. உங்களைத் தனியா விட்டுட்டு எனக்கு ரொம்ப கவலையா இருந்தது. 

இப்பவே ரொம்ப லேட்டுப்பா, உன் திருமணம் முடிஞ்ச கையோட போகணும்னு இருந்தது. இப்போ ஏஞ்சலும் வளர்ந்தாச்சு இன்னும் வேண்டுதல் நிறைவேத்தலன்னா சரியில்லை. அதான் துணைக்கு தெரிஞ்சவங்க இருந்தாங்களே நீ எதுக்கு கவலைப் பட்டுக் கிட்டு" அம்மா எழுந்து சென்றார்கள்.

சாப்பாடு முடித்து பாட்டியிடம் கதைக் கேட்க ஒன்றிய மகளை விட்டு விட்டு தன் அறைக்கு திரும்பினான் அரசு என்னும் வளனரசு.

பெட்சீட்டை விரித்துக் கொண்டிருந்த மனைவியை பின்னால் நின்று அணைத்தான்.

என்ன வைஸி சார் ரொம்ப மிரட்டுனமாதிரி இருந்தது...

ம்ம் பதில் சொல்லாமல் கையோடு அவளைத் தூக்கிக் கோண்டான் அவன்.

வர வர உன்னை தூக்க முடியலடி, குண்டம்மா ரொம்ப கனக்கிற நீ...

"குண்டம்மாவா நான்" அவளின் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாக அவளை தன் மடியில் இருத்தி அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன். தன் தலை மேல் கன்னம் பதித்து இருந்த கணவனின் மௌனம் புரியாமல் ,

என்ன அரசு....எனவும்

"ஒண்ணுமில்லம்மா ஏதோ பழைய ஞாபகம்."

"ம்ம் என்ன திடீர்னு" என்றவளுக்கு காலேஜில் நிகழ்ந்தவற்றைச் சொன்னான் அவன்.

"ஓஹோ...அப்போ நாம காலேஜில எவ்வளவு ஃபேமஸ் பார்த்தீங்களா" சிரித்தவளை விழி நிறையப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 "ஏன் பனி நீ மட்டும் இல்லைன்னா, உன்னோட காதல் மட்டும் இல்லைன்னா நான் எங்கேயோ என் வாழ்க்கையை என் கண்மண் தெரியாத கோபத்துனால அழிச்சிருப்பேன் இல்ல. அந்த சம்பவத்துக்குப் பிறகு எப்படியோ வைராக்கியமா படிச்சி , அம்மா ஆசைப் பட்டமாதிரி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததுக்கு காரணம் நீதான்",

நெகிழ்வாய் பேசியவனை இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள்.கூடவே முந்தைய ஞாபகங்கள் தலைத்தூக்க அவன் புருவத்திற்கு மேல் சின்னத் தழும்பாக தற்போது மாறியிருந்த அந்த காயத்தை வருடி, அழுந்த முத்தமிட்டாள்.

 எல்லாத்தையும் விட உன்னைத் திருமணம் செய்வதுக்குள்ளே பட்ட பாடு, நீ மட்டும் பிடிவாதமா என்னை மணந்திருக்காவிட்டால் நான் ரொம்ப உடைஞ்சிப் போயிருப்பேன். அவ்வளவு வசதியான மாப்பிள்ளைங்கள்லாம் விட்டுட்டு... சொன்னவனின் வாயை மூடினாள் அவள்.

 "சும்மா இதையே பேசாதீங்க அரசு ....உங்களை விட்டுட்டு அதெப்படி யாரையும் என்னால திருமணம் செய்திருக்க முடியும். நீங்கதான் என்னோட ஃபர்ஸ்ட் & லாஸ்ட் லவ்வாக்கும்"

அவனை இயல்பாக்கும் முயற்சியில் தன் மூக்கால் அவன் மூக்கில் உரசினாள் அவள்.

"எஸ்கிமோ கிஸ் வேணாண்டி எனக்கு வேற கிஸ்தான் வேணும்" கேட்ட கணவனின் கோரிக்கைக்கு அவள் செவிமடுக்க அவர்கள் கெஞ்சலும், கொஞ்சலும் தொடர்ந்தது.

 மனிதர்கள் வரவிரும்பா வெற்று வெட்டவெளி நான்.

 என்னிடம் ஆர்வமாய் வந்து என் உள்ளம் நிரப்பியவள் நீ.

 கால் பதிப்போர் தாம் புதையும் ஆழமிக்க மணல் நான்.

 என்னுள் புதைந்த புதையல் நீ

 எப்போதும் சுடும் காற்றில் சுழலும் சூறாவளி நான்.

 மென்மையாய் வருடிச் செல்லும் தென்றல் நீ.

 தாகத்தில் துடிக்கச் செய்யும் ஈரப்பதமற்றக் கானல் நான்.

 அன்பு மழை எனில் பொழிந்து என் வாழ்வில்

 அழகுமிக்க ரோஜாக்கள் மலரச் செய்தவள் நீ.

This is entry #53 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.