(Reading time: 19 - 37 minutes)

7-ஆகஸ்டு-2012 (செவ்வாய் கிழமை)

நேரம்:காலை 8.45 மணி:

கடையைத் திறக்க வந்த கதிர், பாண்டி அண்ணனிடம் "என்னணே காலிலேயே வந்துடீங்க?" என்று நக்கலாக கேட்டான்.

"அட நீ வேற காலைலேயே, போய் கடையைத் திறப்பா " என்றார்.கடையைத் திறந்து ஒரு வண்டியை டெலிவரி கொடுத்து விட்டு அமர்ந்திருந்தான் கதிர்.

நேரம்: காலை 10 மணி:

டீக்கடைக்கு வந்து அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தான் கதிர்.

கதிர்:பாண்டி அண்ணே நல்லா ஸ்ட்ராங்கா குடிக்கிற மாதிரி டீ ஒண்ணு போடுங்க பாப்போம்.

பாண்டி அண்ணன்:டேய் அப்போ இவ்ளோ நாள் குடிக்கிரமாதிரிப் போடாம வேற எப்படிடா போட்டேன்?

கதிர்:அடப் போங்கண்ணே நீங்க போடறதெல்லாம் ஒரு டீயா? போய் சரவண பவன்ல குடிச்சிப்பாருங்க.அது டீ.

பாண்டி அண்ணன்:அப்போ போய் சரவண பவன்லயே குடிக்க வேண்டியதான ராசா.அதுக்கு வக்கு இல்லாமத்தான இங்க வார.

கதிர்:சரிண்ணே கோவப்படாதீங்க டீயப் போடுங்க.

பாண்டி அண்ணன்:ஒனக்கு இளிச்ச வாயன் நான் தான இருக்கேன்.ஒழுங்கா போன வாரப் பாக்கிய குடுத்துட்டுப் போ.

கதிர்:அட விடுங்கண்ணே தந்துறலாம்.நா என்ன ஓடியாப் போயிறப் போறேன்.அது சரி நேத்து மேட்டர் ஏதாது தெரிஞ்சிச்சா?

பாண்டி அண்ணன்:ஆமாப்பா காலைல ஒரு போலீஸ்காரர்  வந்தாரு.அவரு தான் சொன்னாரு.பொண்ணு பேரு செல்வியாம்,IT கம்பெனில வேலை செய்தாம்.அவ வீட்டுக்காரரும் அதே கம்பெனில மேனேஜராம்.கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் தான் ஆகுதாம்.லவ் மேரேஜ் ஆம்.பாவம் அந்தப் பொண்ணோட வீட்டுக்காரரும்,அப்பாவும்  நேத்துல இருந்து சாப்டவே இல்லையாம்.அந்த வீட்லயே உட்கார்ந்து அழுதுட்டே இருக்காங்களாம்.இது இப்படி இருக்க "B பிளாக்" ல திருட்டுப் போனது ஒரு பைனான்சு கம்பெனிக் காரருடையதாம்.நல்ல வசதியாம்,பார்ட்டி வெய்ட்டு பார்ட்டியாம்.ஊர் பூராவும் வட்டிக்குப் பணம் கொடுத்துருக்காராம்.கொள்ள வட்டியாம்.அவர் வீட்ல திருட்டுப் போனது நியாம்தாம்பா (அமைதியாக).அதவிடச் சிரிப்பு என்னன்னா திருடுனவன் வீட்ல உட்கார்ந்து நல்லா சரக்கு அடிச்சிட்டு,1 பாக்கெட் சிகுரெட்டையும் ஊத்தித் தள்ளிட்டுப் போயிருக்காம்பா.

கதிர்:ஆமாண்ணே நீங்க சொல்றதும் சரி தான்.திருடு போனது போய்டுப் போது,பாவம் அந்தப் பொண்ணு,என்ன சூழ்நிலைல தற்கொலை பண்ணுச்சோ? அந்த புள்ள போயிட்டு, இப்போ பாருங்க அது புருசனும்,அப்பாவும் கிடந்தது கஷ்டப்படுறத.

நேரம்:மதியம் 2 மணி:

டீக்கடைக்கு வந்த ஏட்டையா "டேய் பாண்டி உன்னையும் பக்கத்துக்குக் கடைக் கதிரேசனையும் சார் உடனே கூப்பிட்டார்" என்றார்.

கதிர்:ஏட்டையா மணி 2,வயிறு வேற கூவுது.சாப்டுட்டு வரட்டுமா?உங்க சார் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துப்பாரா?

ஏட்டையா:டேய் உனக்கு வர வர நக்கல் ஜாஸ்தியாயிடேப் போதுடா.ஸ்டேஷன்கு வா கவனிச்சிக்கிறேன்.

கதிர்:கவனிங்க கவனிங்க நல்லா கவனிங்க.பக்கத்துல இருக்குற பாய் கடை பிரியாணி வாங்கித் தந்து கவனிங்க.

பாண்டி அண்ணன்:டேய் கதிரு பேசாம வாய வச்சிட்டு சும்மா வாடா.

நேரம்:மதியம் 3.30 மணி:

ஸ்டேஷன் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர் கதிரும் பாண்டி அண்ணனும்.

கதிர்:ஏட்டையா எப்போ கூப்டுவாரு உங்க சாரு?மணி 3.30, போய் சாப்பிட்டு வந்துரவா?

ஏட்டையா:(சாப்பிட்டுக்கொண்டே)டேய் பொருடா, கூப்பிடுவாரு,கத்திகிட்டு இருந்தேன்னா உள்ள வச்சு லாடம் கட்டிருவேன் பாத்துக்கோ.

கதிர்:இவரு மட்டும் நல்லா முழுங்கீட்டு இருக்காரு, நம்மள பட்டினிப் போட்டுட்டு (முணுமுணுத்தான் பாண்டி அண்ணனிடம்)

சற்று நேரம் கழித்துக் கதிரை மட்டும் உள்ளே அழைத்தார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டர்:நீ தான் கதிரேசனா?

கதிர்:ஆமா சார் நான் தான் கதிரேசன் short ஆ கதிர்.

இன்ஸ்பெக்டர்:சரி அந்த பாண்டி எப்படி?

கதிர்:எப்படினா?

இன்ஸ்பெக்டர்:டேய்.அந்த பாண்டியப் பத்தின புல் டீடைல் சொல்லு.

கதிர்:பாண்டி அண்ணன் ரொம்ப நல்லவரு சார்.8 வருசமாத் தெரியும் சார்.அவருக்குச் சொந்த ஊரு திண்டுக்கல் சார்.இங்க வந்து டீக்கடை வச்சிருக்கார் சார்.கல்யாணம் முடிஞ்சு 2 பசங்க இருக்காங்க சார்.அப்றோம் வேற ஒன்னும் இல்ல சார்.டீடைல் போதுமா சார்?

இன்ஸ்பெக்டர்:வேற ஏதும் பழக்கம் உண்டாடா அவனுக்கு?

கதிர்:அவருக்கா சார்?எந்த பழக்கத்த கேக்குறீங்க சார்?

இன்ஸ்பெக்டர்:டேய் ஓத வாங்கப் போர.பீடி,சிகுரட்டு,தண்ணி,பொம்பளப் பழக்கம் இருக்காடா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.