(Reading time: 18 - 36 minutes)

நிம்மதி பெருமூச்சு விட்ட நிகில், ‘ச்சே கொஞ்ச நேரத்தில் நம்மை கலங்கடித்து விட்டாள். தேவையில்லாமல் குழம்பி, கண்டதையும் யோசித்த தன்னையேக் குட்டிக் கொண்டான்.

குழப்பம் தீர்ந்த சந்தோஷத்தில்,... உற்சாகம் குமிழிட,... வீட்டுக்குக் கிளம்பினான்.

“ஹாய் டார்லி… எங்க இருக்கீங்க…?”

“ஸ்வே பேப்ஸ்… வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் டா.”

“ப்ச்… உங்களை பார்க்கணும்.”

தன் கடிகாரத்தை பார்த்தவன்,... “அரை மணி நேரத்தில் உங்க வீட்ல இருப்பேன்… ஓகே வா…?”

“இங்க வரீங்களா… வாவ்… வாங்க வாங்க. அப்போ நைட் இங்க தான் டின்னர். அம்மா, அம்ம்மா… அவர் வரார்” தன்னோடு பேசிக் கொண்டே, தன் அம்மாவுக்கு குரல் கொடுத்தவளின் குரலில் இருந்த சந்தோஷம், அவனையும் தொற்ற,... “பை ஸ்வீட்டி…” என்று பேசியை அணைத்தான்.

வாங்க மாப்பிள்ளை… உக்காருங்க… ஸ்வேதா மாப்பிள்ளை வந்துட்டார்.”

“மாமா, இன்னும் அவுட்டோரில் இருந்து வரலையா அத்தை…?”

“புதன்கிழமை வரார்… என்ன சாப்பிடறீங்க…?”

“இப்போ எதுவும் வேணாம் அத்தை.”

“ஹாய்…” என்று மலர்ந்த முகமாக வந்தவளைக் கண்டவனின் இதயம், க்ஷண நொடி லயம் தப்பி அடித்து, பின் சீரானது.

“நீங்க பேசிட்டு இருங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று ஸ்வேதாவின் அம்மா உள்ளே சென்று விட்டார்.

“இன்னைக்கு ரெக்கார்டிங் எப்படி போச்சு…?”

“யா… ஓகே…”

“காலையில அத்தைக் கிட்ட பேசும் போது, நீங்க ஸ்டுடியோ போயிருக்கறதா சொன்னாங்க. சரி, உங்களை நேரடி ஆக்க்ஷன்ல பார்க்கலாம்னு ஆசையா கிளம்பி வந்தேன். ப்ச்… பட் நடுவுல அந்த இமையவரம்பன் கரடி வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான்.”

“ஹ ஹா… நீ அவனோட பி.எம்.டபிள்யூ எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார் பைக்ல போறதை பார்த்தேன். என்னவாம் என்னோட எதிரிக்கு…?”

“பார்த்தவர், என்னை அவர்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கக் கூடாதா…? ரொம்ப மோசம் நீங்க…!”

“அவன் எங்க சான்ஸ் கொடுத்தான்…? காத்தைப் போலல்ல பைக்ல பறந்தான்.”

“அதென்னவோ சரி தான் நிக்கி. என்ன பைக்கோ…! முப்பத்தஞ்சு லட்சம் கொடுத்து வாங்கினாராம்…! பின்னால வசதியா உட்கார்ந்துக் கூட போக முடியலை. ‘விழுந்துடுவோம்’ன்ற பயத்துல, ‘ஹப்பா…’ எனக்கெல்லாம் பைக் செட்டாகாது.”

“ஹ ஹா ஹா… அது ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்வே… பில்லியன் ரைட்க்கு சரி வராது.”

“என் டைம் தான் வேஸ்ட்… உங்களை பார்க்க முடியலைன்னு மூட் ஆஃப் ஆகிட்டேன். இப்போ உங்களை பார்த்தப்புறம் தான் ஹாப்பியா இருக்கு” என்றவள், அவன் தோளில் சாய்ந்தாள்.

“என்ன சொல்றார் நடிப்பின் இமயம்…?” என்று வாகாக சாய்ந்து அமர்ந்தான் நிகில்.

“ம்ம்… அவரோட அடுத்த படத்துக்கு நான் காஸ்டியூம் டிசைன் பண்ணனும்னு முன்னையே கேட்டுட்டு இருந்தார். நான் எனக்கு நேரமில்லைன்னு சொல்லி மறுத்து இருந்தேன். இப்போ நடந்த நம்ம நிச்சயமும், இனி உங்களுக்கு நான் தான் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்னு, மாமா அன்னைக்கு பத்திரிக்கைக்காரங்க கிட்ட நியூஸ் கொடுத்தது எல்லாம் தெரிஞ்சவர்,... ‘ஒரே படம் எனக்கு பண்ணு’ன்னு திரும்ப தொந்தரவு பண்றார். இன்னைக்கு ஸ்டூடியோ கார் பார்க்ல எதேச்சையா பார்த்தவர், ‘பேசலாம் வா’ன்னு, பிடிவாதமா கூட்டிட்டு போயிட்டார்.”

“என்ன முடிவு பண்ணியிருக்க…?”

“இப்போதைக்கு டைம் இல்ல… புது படம் எதுவும் நான் ஒத்துக்கலைன்னு சொல்லிட்டேன். நம்ம கல்யாணத்துக்கு நிறைய ஏற்பாடு பண்ணனும். அதுல பிசியா இருக்கேன். சோ, வேற ஒரு சமயம், டேட்ஸ் ஒத்து வந்தா, அவரோட படம் பண்ணறதா சொல்லியிருக்கேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே…?”

“இல்லை ஸ்வே… நீ வேற நடிகர்கள் கூட வர்க் பண்றது எனக்கு பிரச்சனை இல்லை. பட் இமயவரம்பனுக்கு சொன்ன மாதிரி ‘நான் ரொம்ப பிசி’ன்னு எனக்கு சொல்லிடாத செல்லம்.”

“பார்க்கலாம் டார்லி…” என்றவளின் நெற்றியில், ஆசையாக முட்டினான் இளம் புயல் நிகில்.

சிறிது நேரம் பேசி விட்டு, அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியவன், அலுப்பில் உறங்கி விட்டான்.

றுநாள் பிரபல நாளேட்டின் சினிமா பகுதியில்,... ‘மலை நடிகரோடு புயலின் வருங்காலம் ஜாலி பைக் பயணம்…’ என்று ஓரமாக ஒரு கிசுகிசுவும், அவர்கள் முகம் தெரியாத வகையில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியானது.

“இந்த செய்தியை பார்த்தியா… காலம் கலிகாலம்… அவனோட நிச்சயம் செஞ்சுக்கிட்டு, இவன் கூட ஏன் போனா…” என்று அந்த செய்தியை படித்த அப்பாவி பொதுஜனம் ஒருவர், வாய்க்கு வந்ததை பேசினார்.

This is entry #70 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.