(Reading time: 7 - 14 minutes)

" து சாப்பிட்டு டெஸ்டு பார்த்து சொல்லுறேன் டீ "

" டேய் மக்கு .. "

" என்ன ?"

" என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன் " என்றாள்  ரூபினி கண்களில் நிறைந்த காதலுடன் ..

" விளையாடாதே ரூபினி  உன்னைய நான் அப்படி நினைச்சதே இல்லை .. இன்னொரு வாட்டி இப்படி சொன்ன ?" என்று அவன் பற்களை கடிக்க அவளுக்கே அவனது தோற்றம் பயத்தை அளித்தது .. உண்மையை சொல்லி அவனது நட்பினை இழப்பதைவிட , மனதை மறைத்து விடுவதே சிறந்தது என்று தோன்றவும்

" உனக்கு ஆசைதான் டா .. ஏதோ விளையாட்டுக்கு சொன்னா ..ரொம்பதான் கோபப்படுறியே " என்று பேச்சை மாற்றினாள் .. அன்று முழுவதும் அவனுடம் சிரித்து பேசி நினைவுகளை மனதில் தேக்கிவிட்டு வீடு திரும்பினாள்  .. சில நிமிடங்களிலேயே , அவள் வீட்டு பகுதியில் திருடர்கள் புகுந்துவிட்டனர் .. தனது வீட்டின் பின்பக்கமாய் யாரோ நுழைவதை உணர்ந்தவள் உடனே  மாதவை  அழைத்தாள் ..

" ஆதவ் "

" என்ன டீ "

" எங்க வீட்டுல யாரோ இருக்காங்க "

" என்ன டீ சொல்லுற ?"

" திருடன் நினைக்கிறன் "

" அம்மு நீ பயப்படாதே ..நான் இப்போவே வரேன் ..போலிஸ் கு போன்  பண்ணு " என்றவன் பைக்கை எடுத்துகொண்டு  பறந்தான் .. ஆனால் அவன் வரும்போது வாசல் திறந்திருக்க ரத்த வெள்ளத்தில் இருந்தாள்  ரூபினி ..

" ரூபி ..ரூபி .. "

" தவா நீ ஏன் டா என்னை பார்க்க இவ்வளவு லேட்டா வந்த ?" இதுதான் கடைசியாய் அவள்  பேசிய வார்த்தைகள் .. குளித்துக்கொண்டே நடந்ததை மாதவ் நினைத்து முடிக்க அவன் குளியலறை கதவு தடத்தடவென தட்டபட்டது ..

" வரேன் .. வரேன் " என்று அவன் குரல் கொடுத்தான் தட்டும் ஓசை நிற்கவில்லை ..

" யாரு " என்று கோபமாய் அவன் வெளியில் வர அவன் எதிரில் இருந்த கண்ணாடியில் ரூபினியின் உருவம் தெரிந்தது .. முதுகு தண்டு சிலிர்க்க அப்படியே உறைந்து நின்றான் மாதவ் .,. அவன் கரங்கள் தன்னிச்சையாய் அவளை நோக்கி நீண்டிட , கண்ணாடியில் இருந்த அவளின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை அடைந்தது .. விசை போட்ட பொம்மையை போல ஒரு காகிதத்தில் சுய நினைவு இன்றி ஏதோ எழுதி முடித்து அப்படியே மயங்கினான்  மாதவ் .. அவனது செல்போன்  அலறிய வேகத்தில் கண் விழித்தவனின் எதிரில் இருந்தது சற்றுமுன் அவன் எழுதிய கடிதம் ..!

உயிருக்குள் உயிரான  ஆதவ்,

உன்கிட்ட என்னால பேச முடியல ..அதுனாலத்தான் உன்னை பயன்படுத்தி இந்த கடிதம் எழுதுறேன் .. எதை நினைச்சு நீ என்ன இப்போ அணைக்கணும்னு  நினைச்ச தெரியல, ஆனா உயிரோடு இருந்தப்போ உன் அணைப்பில் என்னை தொலைக்கனும்னு எவ்வளவு ஆசைபட்டேன் தெரியுமா ? அன்னைக்கு என் மேல காதல் இல்லன்னு நீ சொன்னப்போவே  என் முடிவு எழுதப்பட்டது நினைக்கிறேன் .. என் வீட்டு பின்னால் நுழைந்தது திருடன் இல்ல , அருண் ! நம்ம காலேஜ் சீனியர் .. அவனுக்கு நம்ம சேர்ந்து இருக்குறது எப்பவும் பிடிக்காதே .. என்னை மானபங்கம் படுத்த அவன் முயற்சி தந்தான் .. என் மனசே உனக்கில்லைன்னு ஆனபிறகு உயிர் எதுக்கு ? அதான் அவன் கையில் சிக்காமல் என் முடிவை நானே தேடிட்டேன் .. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா என்  காதலை சொல்லியே செத்து போயிருப்பேன் .. எல்லாருக்கும் மரணம் என்பது முடிவு .. ஆனா எனக்கு இதுவே ஆரம்பம் .. இந்த மூணு மாசத்துல என்னால உனக்கு நிறைய தலைவலின்னு எனக்கு தெரியும் ,.. ஆனா , உன்னால் நான் ரொம்பவே சந்தோஷமாய் இருந்தேன்  ஆதவ் ... நான் எப்பவும் உன்னை சுத்தி இருப்பேன் ..என்னை மாதிரி உன் மேல உயிராய் இருக்குற பெண்ணை உன் லைப்ல அனுப்பி வைப்பேன் .. அதுக்கு பிறகு உனக்கு மகளாய் பிறப்பேன் .. அதுவரைக்கும் என்னை உன்னருகில் இருக்க உரிமை கொடு .. நீ எப்போ நினைச்சாலும் நான்  உன் பக்கத்துல இருப்பேன் .. லவ் யூ ஆதவ் "   

திக்பிரம்மை பிடித்தவனாய் அமர்ந்திருந்தான் ஆதவ் .. இப்போது வரவேற்பறையில் சத்தம் கேட்டது..

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ?

என்னைவிட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா ?

பழைய பாடல் ஒலிக்க  , அவன் இதழில் கசப்பான புன்னகை உருவானது .. " நீ உயிரோடு இருந்தப்போதான் உன் காதலை புரிஞ்சுக்கல .. இப்பவும் அதே தப்பை பண்ண மாட்டேன் டீ " என்றான் ஆதவ் ..

"ட் ..ஷாட் ஓகே .. பேக் அப் " என்றார் டைரக்டர் .. கண்ணீருடன் அமர்ந்திருந்த கதாநாயகன் முகத்தை துடைத்து கொண்டான் ..

" சூப்பர்  ஆக்டிங் மனோஜ் .. " என்றான் இந்த படத்தின் இயக்குனர் மாதவன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.