(Reading time: 21 - 42 minutes)

"விக்கி எப்படி இருக்க ?"

".."

"டேய் ப்ளிஸ் ..சிரியல் ஆண்டிங்க மாதிரி அழாதே .. நாம எப்பவும் ப்ரண்ட்ஸ்  தான் .. இந்த கண்ணீர் மன்னிப்பு குற்ற உணர்ச்சின்னு, பேசிட்டு இருந்த அடி வாங்குவ !"

" ஹ்ம்ம் .. நீ எப்படி இருக்க ?

" நாளைக்கு வீட்டுக்கு வரும்போது நீயே பார்த்துக்க ..வருவ தானே ?"

" நாளைக்குத்தான் வரணுமா லாவி ? இன்னைக்கு வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டியா ?"

" டேய் மண்டு ...! இது உன் வீடு டா"என்று மலர்ந்து சிரித்தவள் , சந்தோஷத்தில் துள்ளுவதை அவனால் உணர முடிந்தது ..

"சரி இன்னும் அரை மணி நேரத்தில் நானும் அஞ்சலியும் வரோம் " என்று போனை வைத்தான் விக்னேஷ் ..அங்கு  லாவண்யாவிற்கு தலை கால்  புரியவில்லை..

"கார்த்திக் ...விக்கி வீட்டுக்கு வரான் டா ... தயவு செஞ்சு நீ சமைக்காத ..வந்தவன் வந்தவழி ஓடிருவான் " என்று கணவனை பார்த்து அவள் கூற , மந்தகாச புன்னகையை சிந்தி ஸ்டைலாய் பார்த்தான் கார்த்திக் ..

"அஹெம் அஹெம் .. உன் பார்வையே சரி இல்லையே .. இதுக்கு மேல நான் இங்கு இருந்தால் ரொம்ப டேஞ்சர் .. நான் சமையல் வேலையை கவனிக்கிறேன் "என்று ஓடியே விட்டிருந்தாள்  லாவண்யா..

அவள் கொடுத்த விலாசத்திற்கு வந்திருந்தனர் அஞ்சலியும் விக்னேஷும் .."மிசர்ஸ் லாவண்யா கார்த்திகேயன் " என்று  பெயர்பலகை மாட்டி இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ,காத்திருந்தான் விக்னேஷ் .. பார்வையை இங்கும் அங்கும் சுழலவிட்ட  அஞ்சலி , "ஹே வினு அங்க பாரேன் " என்று காட்டினாள் ..

அவள் காட்டிய இடத்தில் ஒரு குட்டி தோட்டம் இருந்தது .. பழைய கார் டயர் , பிளாஸ்டிக் பாட்டில் போன்றவற்றில் பூச்செடிகள் அழகாய் வளர்க்கபட்டு இருந்தது ..

" நம்ம கார்த்தி காலேஜ் படிக்கும்போது சொன்ன ஐடியா எல்லாத்தையும் அப்படியே பின்பற்றி இருக்கா பாரேன்..நீயும்தான் இருக்கியே ...டெய்லி  ஒரு பிளாஸ்டிக் பை யூஸ்  பண்ணி பூமி மாதாவுக்கு சிரமத்தை கொடுக்குற " என்று அஞ்சலி சீண்டிட , அவள் பேச்சினை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் வெறுமனே தலை அசைத்தான் விக்னேஷ்..

"டேய் கார்த்தி , அவங்க வந்துட்டாங்க " என்று குரல் கொடுத்த படியே கதவை திறந்தாள்  லாவி.. எத்தனை முயன்றாலும் எட்டு வருட பிரிவு அவர்களில் ஆறு  விழிகளிலும் அருவியாய் பெருகின.. அஞ்சலி, விக்னேஷ் இருவரையும் கட்டி அணைத்து  கொண்டாள்  லாவண்யா..

மௌனங்கள் மட்டுமே மொழியாகி போன கனத்த நொடிகள் .. அவர்களை அமர வைத்துவிட்டு கையில் ஜூசுடன் வந்தாள்  லாவண்யா.. அவளின் கோலம் அவர்களின் மனதில் இன்னமும் பாரத்தை கூட்டியது..

" ஹே என்னடா , இன்னமும் ஹனிமூன் கபல்ஸ்ன்னு நினைப்பா உங்களுக்கு.. எப்போ பாப்பா வரும் ?' என்று அவள் கண்சிமிட்டிட ,

"இப்போ மூணு மாசம் "என்றபடி முகம் சிவந்தாள்  அஞ்சலி.. அவள் கன்னத்தை ஆசையாய் வருடி முத்தமிட்டவள் , விக்னேஷை பார்க்க அவன் இன்னமும் அந்த வீட்டையும் லாவண்யாவையும் பார்த்துக்கொண்டே இருந்தான் ..

அந்த வீட்டில் ஒவ்வொரு மூளையிலும்  கார்த்தி இருந்தான் .. அதாவது கார்த்தியின் கனவு இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டானோ  அப்படியே இருந்தது அந்த வீடு ..எந்த பக்கம் திரும்பினாலும் அவனின் புகைப்படம் இருந்தது ..

" வா கார்த்திக்கை பார்க்கலாம் " என்றவாறு அஞ்சலியின் கையை லாவி பற்றி கொள்ள ,இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு  ஒரு அறைக்குள் நுழைந்தனர் .. வண்ண வண்ணா ரோஜாக்களின் நடுவில் , கார்த்திகேயனின் ஆளுயர புகைப்படம்  இருந்தது .. கண்களில் மிரட்சியுடன் இருவரும் பார்க்க, லாவண்யாவோ

புகைப்படத்தை பார்த்து "கார்த்தி , கடைசியா ரெண்டு பேரும்  நம்ம வீட்டுக்கு வந்துட்டாங்க பாரேன் "என்றாள் .. அதே  அறையில் ஒரு  மூலையில்

“ I TEND TOLIVE IN PAST. BECAUSE MOST OF MY LIFE IS THERE”

என்ற வாசகமும் அதன் அருகில்கார்த்திக்கின் தோளில்  லாவண்யா சாய்ந்திருப்பது போன்ற படமும் இருந்தது ..அஞ்சலி,விக்கி இருவருமே வார்த்தைகள் இன்றி விக்கித்து நிற்க , லாவண்யாவோ கம்பீரமாய் புன்னகைத்து நின்றாள் .. அதன்பின் மூவருமே அதிகம் பேசிக்கொள்ளாமல் அந்த அறையிலேயே அமர்ந்தனர் .. மூவரின் பார்வையும் கார்த்திக்கின் மீது நிலைக்க , அவனின் நினைவலைகள் மூவரையும் ஆக்ரோஷமாய் இழுத்து சென்றன..

கார்த்திகேயன் , லாவண்யாவின் மனம் வென்றவன் .. இருவரின் பெற்றோரின் சம்மதத்திலும் திருமணம் நிச்சயக்கபட்டு விட , காதலெனும் வானில் உல்லாசமாய் பறந்து கொண்டிருந்தனர் இருவரும் .. "லவ்ஸ் ...லவ்ஸ்"என்றுத்தான் அவளை அழைப்பான் கார்த்தி ... அதே போல "மாமா " என்றுத்தான் அவனை அழைப்பாள்  லாவண்யா .. திருமணத்திற்கு முன்னிரவு போனில் கார்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தாள்  லாவி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.