(Reading time: 21 - 42 minutes)

கார்த்திக் ஏதோ சொல்ல வரவும்

'மறுபடியும் என்னை ஏமாற்றாதே டா" என்று அவள் கெஞ்சிட

" எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ?" என்றான் !

அதன்பின் கார்த்திக்- லாவண்யாவின் இல்வாழ்க்கை சில நாட்கள் ஆரம்பித்து முடிந்தே போனது .. அன்று அறையில் இருந்து வெளிவந்த விக்னேஷ் அதன்பின் கார்த்திக்கை பற்றி தெரியாமல் போகவும் இன்னமும் கோபமானான் .. அவன் கடைசி நொடிகளில் தான் மீண்டும் சந்தித்து கொண்டனர்.. அப்போதும் அவன் லாவண்யாவிடம் பேசி இருக்கவே இல்லை .. !

எட்டு வருடங்கள் கடந்தும் அந்த நினைவுகள் மாறவே இல்லை ! கண்ணீரை துடைத்து கொண்டு நிமிர்ந்தான் விக்கி..

" இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருப்ப நீ ?'

"எப்படி ?"

"ப்ச்ச்ச்"

"நான் சந்தோஷமாய் இருக்கேன் விக்கி .. முன்பை விட இப்போத்தான் ..இந்த வீடுதான் எனக்கு எல்லாமே ..நானும் கார்த்தியும் வாழ்ந்த நாட்கள் என்னோடு நினைவுகளாய் இருக்கு "

"இருந்தாலும் உனக்குன்னு ஒரு துணை வேணும் லாவி "- அஞ்சலி

"என் நினைவுகள் தான் எனக்கு துணை .. "

" கார்த்திக்காக கல்யாணம் பண்ணிக்கோ !" என்று அவளை மடக்க பார்த்தான் விக்னேஷ்..

"ஹா ஹா கார்த்திக் பத்தி என்னனு நினைச்ச நீ ? அவனுக்குத் தெரியும் அவன் இருந்த இடத்தை நான் இன்னொருத்தருக்கு தரவே மாட்டேன்னு... என்னை பார்த்து கார்த்திக் சந்தோசம் தான் படுவான் விக்கி .. நான் இப்பவுமவனோடு சந்தோஷமா வாழுறேன் ..எனக்கு என்னமோ கார்த்தி வேலை விஷயமா வெளிநாடு போயிருக்குற மாதிரி இருக்கு ..ரொம்ப மிஸ் பண்ணும்போது , அவன் குரலை கேட்டுப்பேன் .. அவன் எனக்காக நிறைய விடியோ ரெடி பண்ணி இருக்கான் ...வா காட்டுறேன் "என்றாள்  அவள் ..

"இது மட்டும் போதாது லாவி "

"எனக்கு இது போதும் டா ..அவன் என்னோடவே இருக்கான்னு ஒரு உணர்வு தான் என்னை உயிரோட வெச்சு இருக்கு .. அது போதும் .. ப்ளீஸ் என்னை பார்த்து பரிதபப்படாதிங்க..அது ரொம்ப தப்பு .. உங்க பரிதாபத்தை பார்த்து தான் கார்த்தி கவலை படுவான்.. டோன்ட் டூ தெட் ..." என்று தெளிவாய் சொன்னபடி லாவண்யா கார்த்தியின் புகைப்படத்தை வருட , அழகாய் சிரித்தான் கார்த்திகேயன் ..

-முற்றும்-

ஹாய்  ப்ரண்ட்ஸ்  ..எப்பவும், ஏதாவது விஷயம் மனசை உறுத்தினா அதை கதையாய்  உங்கள் பார்வையில் வைப்பது என் பழக்கம் ..இந்த கதைக்கு பின்னாலும் இரண்டு சம்பவங்கள்  இருக்கு .

முதல் சம்பவம் , வாழ்வே மாயம் மற்றும் 3 படத்தை பார்த்த தாக்கம்.. நோயும் மரணமும் ஒரு காதல் உற\வை துண்டிக்க ஆயுதமாய் இருக்குறதை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியல .. நம்ம அப்பாவோ அல்லது அம்மாவோ , ஒரு நோயை காரணம் காட்டி பிரிஞ்சு இருக்காங்களா ? ஆனா காதலிப்பவர்கள் , அல்லது இளம் ஜோடிகள் மட்டும் ஏன் இப்படி சிந்திக்கணும் ? நோயை எதிர்த்து போராடி தோற்றாலும் பரவாயில்லை ,ஆனா போராட்ட குணமே இல்லாமல் , பொதுநலமாய் சிந்திக்கிறேன் என்ற பெயரில் பிரிவை கொடுப்பது நியாயமா ?

எல்லாரும் ஒரு நாள் மரணத்தை தழுவத்தான் போறோம் ! பிரிவு என்பது நிச்சயம் ஒரு நாள் வரத்தான் போகிறது ! என்றோ வரப்போகும் நாளுக்காக,இன்றே பிரிவது என்னை பொருத்தவரை கோழைத்தனம் தான் ! அதை கதையில் முதல் பாதியில் சொல்ல வந்தேன் ..

அதே போல இரண்டாவது காரணம் என் தந்தையின் மரணம் ..என் தந்தை இறந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன .. நானும் என் அம்மாவும் , எங்களது உலகை முடிந்த அளவு சுருக்கி கொண்டோம்.. கோவில் , நூலகம் வீடு..என்றாவது சினிமா! இவ்வளவுதான் எங்கள் உலகம் .. இதுவரைக்கும் உறவினரோ, அல்லது வேறு யாரோ 4 மணி நேரங்களுக்கு மேல்  எங்கள்  வீட்டில் தங்கியதில்லை ! அதனாலோ என்னவோ , புதியவர்களை சேர்த்து கொள்வதற்கே ஒரு தயக்கம் தோன்றுகிறது !

சிறிய உலகத்தில் அமைதியாய் வாழ்வதில் சுகம் கண்டுவிட்டோம் ..வெளிவருவது பெரும்பாடு .. இதனால் அருகிலுள்ளவர்கள் எங்களுக்கு வைத்த  பெயர் "போர் " .. எங்கே அழைப்பு விடுத்தாலும் எனது பதில் "நோ" அதில்  எனக்கு பெரிதாய் எந்தவொரு குற்ற உணர்வும் இல்லை .. சில கட்டயங்களுக்காக வெளியில் போயிருக்கேன் என்பதை தவிர விருப்பப்பட்டு ஊர் சுற்றும் எண்ணம் எழவே இல்லை ..அப்படி இருக்கையில் , வீட்டில் "எலெக்ட்ரிக் செர்கிட்" பழுதடைந்து விட்டது.. 13 வருடங்கள் சிவனே என்று கடமையை செய்தது ,அன்று என் கண்களை திறப்பதற்காக  பழுதடைந்ததோ  தெரியவில்லை..வேறு வழி இன்றி என் வீட்டிற்கு அருகில் 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்கடைக்கு நடந்து போனேன் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.