(Reading time: 21 - 42 minutes)

" ன் கற்பனைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..நான் உன்னை காதலிச்சேன் தான் ..! அதுக்காக உனக்கு அடிமையாய் இருக்கனுமா?  விட்ருன்னா,விட்டுடு .. என்னை காரணமாய் காட்டி உன்னை நீயே அழிச்சுக்காதே ! லாவண்யா இப்படி மாறி போனதுக்கு கார்த்தி தான் காரணம்னு கண்டவனும் பேசுறதை என்னால கேட்க முடியாது.."

"ஆனா அது உண்மைதானே !"

"என்ன உண்மை ? உலகத்துலேயே நீ மட்டும்தான் காதல் தோல்வியில் இருப்பவளா ? வேற யாருக்கும் வலியே  இல்லையா ? உன் கோழைத்தனத்துக்கு என்னை சாக்காய்  பயன்படுத்தாதே " கார்த்திக்கின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் தன்மானத்தை சீண்டி பார்த்தது, அதே நேரம் சுக்குநூறாய் உடைத்தும் போட்டது .. அவன் குரலை கேட்க ,போன செய்தவள் , அவன் பேச்சினை தாங்கி கொள்ள முடியாமல் தானே துண்டித்து விட்டாள் ...

"லாவண்யா இப்படி மாறி போனதுக்கு கார்த்தி தான் காரணம்னு கண்டவனும் பேசுறதை என்னால கேட்க முடியாது" கார்த்தியின் குரல்ஒலித்து  கொண்டே இருந்தது .. அடுத்த சில மாதங்கள் இயந்திரத்தன்மையாய்  வேலை செய்து முன்னேறி கொண்டிருந்தாள் அவள் .. அவ்வபோது கார்த்தி பொய்யாய் பேசினானோ ? என்று குழப்பம் எழும் மீண்டும் அவனுக்கு போன போட்டு பேசுவாள் , அவன் மீண்டும் வார்த்தைகளை அனலாய் கக்குவான் ..

அவள் தைரியம் எனும் மணல் வீடு கார்த்தி என்றவனின் பேரலையால் அடிக்கடி உடைக்கபட்டது .. "இதற்கு மேல் என்னால் முடியாது " என்று துவண்டு போயி அவன்மனத்தை புரிந்து கொள்ளும் முயற்சியை அவள்கைவிட்ட நேரம் அவளைதேடி வந்தான் விக்னேஷ் ..

கொஞ்சமும் நேரத்தை விரயமாக்காமல் விக்னேஷ் நடந்த உண்மையை சொல்ல ,கொஞ்சமும் சலனமில்லாமல் அதை கேட்டு முடித்தாள்  லாவி ..

" இப்போ நான் என்ன பண்ணனும் விக்கி ?"

" என் கூட வா லாவி "

"எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் !"

"லாவி "

" நீ போ நான் வரேன் "

" இது பழி வாங்க வேண்டிய நேரம் இல்லை லாவி .. சொல்லபோனா , நம்ம கையில இப்போ நேரமே இல்லை "

" அதான் வரேன்னு சொல்றேன்ல ? என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் ..நீ போ " என்று அவள் கூறிட கோபமாய் வெளியேறினான் விக்னேஷ் ..!

ருத்துவமனை  ..புற்றுநோய் பிரிவு !

அந்த அறையில் மரணபடுக்கையில் இருந்தான் கார்த்திகேயன் .. அவன் அருகில் கவலையே உருவாய் அமர்ந்திருந்தான் விக்னேஷ் .. ஒரு புற்றுநோய் நோயாளிக்கு இருக்க வேண்டிய அத்தனை தோற்றமும் மாறாமல் ஆளே பாதியாய்  இருந்தான் கார்த்திக் .. அவனுக்கு தானும் சளைத்தவள் இல்லை என்பது போல , பொலிவில்லாமல் ,இத்தனை நாட்கள் ஏனோ தானோ என்று வாழ்ந்த நாட்களில் அடையாளமாய் கருகி சருகாய் அறைக்குள் நுழைந்தாள்  லாவண்யா..

ஆனால் முகத்தில் மட்டும் உணர்ச்சிகளே இல்லை ! விக்னேஷ் தன்னை பற்றிய உண்மைகளை சொன்னதுமே அவள் உடைந்து விடுவாளே என்று பயந்து கொண்டிருந்தான் கார்த்திக் .. அவளின் கண்ணீரை எப்படி துடைப்பது என்று மருகினான் .. ஆனால் அவன் எதிரில் நின்றவளோ , கையில் பூங்கொத்தை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள் ..

"கெட் வெல் சூன் முட்டாள் !!!!" என்று எழுதி இருந்தது அதில் ..

" லவ்ஸ் " உயிரே இல்லாத குரலில் அவன் பேசவும் ,அவள் மனம் லேசாய் நடுங்கியது ... கைகளை இறுக மூடியவள் , புன்னகையுடன்

" சொல்லுங்க கார்த்திக் "என்றாள் ..

" என்னை மன்னிச்சிரு "

"மன்னிப்பா எதுக்கு ? நீ செஞ்ச கொலைக்கா ?" என்றாள் ..

"லாவி !!"என்று விக்னேஷ் அதட்ட

" நீ வாய மூடு ,முடிஞ்சா வெளில போ " என்று கிட்டதட்ட கத்தினாள்  அவள் ... நண்பனை விடுவதாய் இல்லை என்பது போல அவன் கையை பிடித்து கொண்டான் விக்னேஷ் ..

"சொல்லு கார்த்திக் ! நீ எப்போ கொலை பண்ணின பார்க்கறியா ?நம்ம காதலை கொன்னது நீ தான் ! என் நிம்மதியை கொன்னதும் நீதான் ! நம்மள சுத்தி இருந்து ,நம்ம பார்த்து சந்தோஷப்பட்டவங்களோட சந்தோஷத்தை கொன்னதும் நீதான் " என்று அவள் கூற கண்களை மூடி கொண்டான் கார்த்திக் ..

" கண்ணை திற கார்த்திக் ..கண்ணை திறந்து என்னை பாரு ... உச்சியில இருந்து பாதம் வரைக்கும் அளந்து பாரு ..எனக்கு வாழணும்னு ஆசை போய்  பல மாசம் ஆச்சு .. என் கண்ணுல ஜீவனே இல்லை கார்த்திக் அதை பாரு .. நான் என்ன தப்பு பண்ணேன், என்ன நடந்துச்சு ? நீ ஏன் என்னை விட்டுட்டு போனன்னு நான் நினைச்சு தினமும் அழுது வீங்கி போன என் மூஞ்சிய பாரு !  தியாகியா கார்த்திக் நீ ? இல்லவே இல்ல ! நீ கோழை !!"

அதிர்ந்து அவளை பார்த்தான் கார்த்திக்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.