(Reading time: 21 - 42 minutes)

ந்த ஒரு கிலோ மீட்டர் பயணம்  எனக்கு ஓராயிரம் நினைவுகளை கொண்டு வந்தன .. என் தந்தையுடன் பைக்கில் அதே சாலையிலபல முறை சென்று வந்திருக்கிறேன் .. எப்போதும் என்னை பயமுறுத்தும் கால்நடைகள் , அதை விரட்டிவிட்டு என்னை நன்றி கடனுக்கு ஆளாக்கும் சில நல்லவர்கள் , "உங்கள்  வீட்டில் யாரெல்லாம் இருக்கிறீர்கள் ?"என்று கதை பேசும் சில முதியவர்கள் , அடர்ந்து வளர்ந்திருக்கும் முருங்கை மரம் இப்படி எதுவுமே  மாறவில்லை அங்கு .. இனிய நினைவுகள் என்னை சிலிர்க்க வைத்தன.. என் தந்தையின் குரலை கேட்டது போல இருந்தது .. வேண்டியதை வாங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனிக்கும்போது கடைக்காரர் கேட்டார் ,"பெண்ணாய் ஏன் சிரமப்படுகிறாய் ? அண்ணன் ,அல்லது தம்பியை அனுப்பி இருந்தால் இப்போது இதை நீ கற்றுகொண்டிருக்க வேண்டாமே "என்று ,..சுருக்கென வலித்தது ..

ஆண்மகன் இல்லாத குறை தெரியாமல் தைரியமாய் தான் வளர்த்தார் என் தந்தை .. அவரோட இணைத்து மோட்டார் வண்டி பழுது பார்க்கும் அளவிற்கு  அப்போது திறன் இருந்தது !! இப்போது அவை எங்கே ? அப்பா பொய் விட்டார் என்ற சாக்கை பிடித்து கொண்டு அவரின் போதனையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டேனோ என்று தோன்றியது .. இந்நேரம் என் அப்பா கண்ணீர் விட்டிருப்பாரோ ? அவரை ஏமாற்றிவிட்டேனோ ? முதல் முறையாய் எழுந்தது குற்ற உணர்ச்சி ..மானசீகமாய் மன்னிப்பு கோரினேன்..

என் குறுகிய உலகத்தில் இருந்து வெளிவர தொடங்கிவிட்டேன்.. என் தந்தை தந்த  நினைவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க , ஒரு பயணத்தை தொடங்கிவிட்டேன்.. வீடு திரும்பும்போது விடுவிடுவென நடந்து போகாமல் , முடிந்த அளவு பொறுமையாய் நடந்து அந்த சூழலை உணர முயன்றேன் .. என் தந்தையின் அருகாமையில் உணர்ந்து விட்டது போல ஒரு அமைதி எனக்குள் பிறந்தது.. அப்போதுதான் உணர்ந்தேன்!

நமக்கு பிடித்தவர்கள் , நம்மை பிரிந்ததுமே , என் உலகமே மாறிவிட்டது என்று எண்ணி , அவர்கள் விட்டு சென்ற அனைத்தையும் மறந்து போவது எவ்வளவு பெரிய பாவம் ? அவர்களை நாம் உண்மையில் நேசித்து இருந்தால் , அவர்களின் நினைவுகளுக்கு உயிர்கொடுத்து,அவர்கள் விட்டுச் சென்றதை பேணி காக்க வேண்டும் அல்லவா ? அவர் இல்லாத உலகம் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த கூடாது என்பதை உணர்ந்தேன்.. அதையே லாவண்யாவின் வாழ்விலும் காட்டினேன் ..

இது என் நினைவு எழுதிய கதை  ..நன்றி நண்பர்களே .. 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.