(Reading time: 15 - 29 minutes)

"ன்னடா?"

"அசோக் தம்பி போன் பண்ணுச்சு!இன்னிக்கு மதியம் ஊரிலிருந்து கிளம்பி வருதாம்!"

"நிஜமாவா?என் பையன் வரானா?"

"ஆமா..!"-மகனின் வருகை மனதை குளிர்விக்க,அவனிடம் சிறிது பணத்தை கொடுத்து,

"எல்லோருக்கும் 2 நாள் விடுப்புன்னு சொல்லு!என் பையன் வரான் எல்லோருக்கும் ஒரு மாசம் சம்பளத்தை இலவசமா கொடுக்க ஏற்பாடு பண்ணு!"

"சந்தோஷம் ஐயா!"

"டேய் மாணிக்கம்!நீ போய் கௌரிக்கிட்ட அசோக்கிற்கு பிடித்த எல்லாத்தையும் சமைக்க சொல்லு!கௌரியோட சமையல்னா அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.போ!"

"சரிங்க ஐயா!"-என்று ஓட்டம் பிடித்தான் மாணிக்கம்.

நற்செய்தி ஒன்றால் செய்ய வேண்டிய அடுத்தடுத்த வேலைகளை எல்லாம் புரியாமல் நின்றார் செந்தில்நாதன்.

என்ன தான் மேலைநாடுகளில் வசித்து,அந்த நாகரிகத்தை கிரகித்திருந்தாலும்,பயணத்தின் போது இளையராஜாவின் அருமையான காதல் பாடல்களை ரசிப்பது என்பது ஒவ்வொரு தமிழனின் பிரியத்திற்குரிய ஒன்று என்றே கூறலாம்.தனது ஐ-பாடில் பதிவிறக்கி வைக்கப்பட்ட இளையராஜாவின் பாடல்களை எல்லாம் கண்கள் மூடி கேட்டப்படி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் அசோக்.

மனம் ஏதேதோ சிந்தனைகளில் ஆண்டது.

"என்ன தைரியத்துல என் பொண்ணைக் கேட்டு என் வீட்டுப்படி ஏறி இருப்ப?வெளியே போ!"-கடுமையான வார்த்தை மனதின் கோபத்தை உசுப்பிவிட,அதனை அடக்க தனது ஐந்து விரல்களையும் அழுந்த மடக்கினான் அசோக்.

"கடவுளே!அந்தக் குடும்பத்தை சேர்ந்த யாரையும்,நான் பார்க்க கூடாது!"-மனதார வேண்டிக் கொண்டான் அவன்.விமானம் புறப்பட்டது!!மனதோரத்தில் ஒரு நம்பிக்கையும் உடன் வந்தது,அது அவனது காதலின் நம்பிக்கை!!

நாள் ஒன்று முழுதும் கழிந்தது...

அன்று மாலை தனது மகனின் வருகைக்காக காத்திருந்தார் செந்தில்நாதன்.

சென்னை விமான நிலையத்திற்கும்,கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும்,தஞ்சை ரயில் நிலையத்திற்கும் கார்கள் பறந்தன.

எனினும்,இன்னும் ஒருவரும் வரவில்லை.

"என்ன இன்னும் வரலை?என்னாச்சுன்னு தெரியலையே..!"-என்றப்படி அப்படியும்,இப்படியும் நடந்தார் அவர்.

"ஐயா!பதற்றப்படாதீங்க!தம்பி வந்துடும்!"

"மணி ஏழாச்சு!இன்னிக்கு தானே வரேன்னு சொன்னான்!"-அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு மாட்டிவண்டி அவர்களை கடந்து நின்றது!!அதிலிருந்து தொப்பென்று குதித்தான் அசோக்.

"ரொம்ப தேங்க்ஸ் தாத்தா!"

"ஆ...ஜாக்கிரதையா வீடு போய் சேரு!!"-என்று அறிவுறுத்திவிட்டு வண்டியை கிளப்பினார் அந்த மாட்டுவண்டியில் இருந்த முதியவர்,

அடுத்த இரண்டு நொடிகளில் அனுப்பிய மூன்று காரும் வரிசையாக நின்றது.

"அப்பா!"-என்று செந்தில்நாதனை நோக்கி இரு கரங்களையும் நீட்டினான் அசோக்.

"தம்பி!"-என்று அவனருகே ஓடிவந்தார் அவர்.

"எப்படி இருக்கப்பா?என்னய்யா இப்படி வந்து இறங்குற?"

"பழைசை மறக்க கூடாதுல்ல அதான்!நீ உடனே இவங்களை திட்ட ஆரம்பித்துவிடாதே!"

"இல்லைப்பா!நீ முதல்ல உள்ளே வா!"-என்று அவனை உள்ளே அழைத்து சென்றார் செந்தில்நாதன்.வாயிலின் முன்புவரை வந்தவன்,ஒரு பெண்ணின் கரத்தால் தடுக்கப்பட்டான்.புருவத்தை சுருக்கி அவளை உற்றுப் பார்த்தான் அசோக்.

"ஏ..வள்ளி!"

"கண்டுப்பிடிச்சிட்டீங்களே!"

"குட்டை கத்திரிக்காய் நல்லா வளர்ந்துட்ட போல!"-என்று கண்ணடித்தான் அசோக்.

"போங்கய்யா!இருங்க...நான் உங்களுக்கு ஆரத்தி எடுக்குறேன்!அப்பறம்,உள்ளே போங்க!"

"பார்டா!விருந்தாம்பலா!சரி கன்ட்டின்யூ!"-வள்ளி அவனுக்கு ஆரத்தி எடுத்து அவனது நெற்றியில் திலகமிட்டாள்.

"ம்..இப்போ போங்க!"-என்றதும்,அவன் உள்ளே சென்றான்.

"போய் குளிச்சிட்டு வாப்பா!சாப்பிடலாம்!"

"நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்பா!அப்பறம் சாப்பிடுறேன்!"

"சரிப்பா!"-என்று தனது அறைக்கு சென்றான் அசோக்.

வீடு மிக நேர்த்தியாக இருந்தது.

அதைவிட அவனது அறை மிக நேர்த்தியாக இருந்தது.

பெட்டியை தரையில் போட்டுவிட்டு நேராக வந்து கட்டிலில் விழுந்தான் அவன்.மெல்ல கண்கள் சொருக ஆரம்பிக்க,சில நிமிடங்களில் உறங்கிப் போனான்.

இத்தனை வருடம் அமெரிக்காவில் இதுபோன்ற நிம்மதி கிடைத்ததில்லை.இன்று தாய் மண்ணில் வந்த உறக்கம் தாயின் மடியில் வந்த உறக்கமாக இன்பம் தந்தது.

அவன் எழுகையில் நன்றாக விடிந்துவிட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.