(Reading time: 15 - 29 minutes)

ன்றிரவு....

ஏதேதோ சிந்தனையில் இருந்தான் அசோக்.காலையில் அவளை போராடி வெளியே செல்லாமல் தடுத்திருந்தார் செந்தில்நாதன்.உண்மையில் கடுமையாக தான் நடந்துக்கொண்டோமோ என்று தோன்றியது அவனுக்கு!!

செய்ததற்கு மன்னிப்பு கேட்க மனம் துடித்தது.

ஆனால்,மீண்டும் அவள் மீதான காதல் வெளிப்பட்டுவிட்டால்!!

எதற்காக இந்த பிரிவு?என்று ஒருபுறம் தோன்ற,மறுப்புறமே ஏன் கூடாது?என்று தோன்றியது.

மனம் குழம்பியப்படி இருக்க,அப்படியே உறங்கியும் போனான்.

அடுத்த இரண்டு நாட்கள் மௌனமாகவே நகர்ந்தது.

மூன்று நாள்...

சீதோஷன நிலை மாற்றத்தாலோ,அல்லது ஏதோ ஒரு காரணத்தாலோ அசோக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அன்று கண்கள் கூட திறக்க முடியாமல் படுத்துக் கிடந்தான் அவன்.மருத்துவரும் வந்து பார்த்துவிட்டு,காய்ச்சலுக்கு மருந்துகளை சிபாரிசு செய்துவிட்டு சென்றார்.கௌரியின் மனமோ தவித்துக் கொண்டிருந்தது.அவனிடம் நெருங்கவும் முடியாமல்,விலகி செல்லவும் இயலாமல் துடித்துப் போனாள்.

"கௌரி!"

"மாமா!"

"அசோக்கிற்கு கொஞ்சம் மாத்திரை கொடும்மா!நான் ஒரு அவசர வேலையா வெளியே போறேன்!"

"நானா?"

"கொடும்மா!அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்!"-கௌரி வெறும் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.

சிறிது நேரம் கழித்து அவனது அறைக்குள் நுழைந்தாள்.கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன்,அவளை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

ஏதும் பேசாமல் வந்தவள்,சில மருந்துகளை பிய்த்து அவனிடம் நீட்டினாள்.

"வைத்துவிட்டு போ!"-என்றான் கடுமையாக...

அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக நகர பார்த்தாள்.

"ஒரு நிமிஷம்!"-என்ற அவனது குரல் அவளை தடுத்தது.

"நான் பேசுனதுக்கு ஸாரி!"-அவள் ஒன்றும் பேசாமல் நின்றாள்.

அங்கு சில நொடிகள் கனத்த மௌனம்!!அவள் ஏதேனும் கூறுவாள் என்று தவித்தப்படி இருந்தது அவனது மனம்.

"நான் தான் மன்னிப்புக் கேட்கணும்!மன்னிச்சிடுங்க!"

"அன்னிக்கு என் அப்பா அவமானப்பட்டு நின்றப்போது,உன்னால எப்படி அமைதியா இருக்க முடிந்தது?"-அவ்வளவு நேரம் அடங்கி இருந்த கண்ணீர் வெளியே வந்தது.

"ஏன்னா எனக்கு தெரியலை...நீங்க பெரிய படிப்பெல்லாம் படித்தவர்,உங்களுக்கு எல்லாம் தெரியும்!ஆனா,எனக்கு அப்படி இல்லை.நான் அப்பா,அம்மா,குடும்பம்னு ஒரு வட்டத்துக்குள்ள வளர்ந்தவ!மாமா அவமானப்பட்டு நின்றப்போது,என்னால தலைக்குனிந்து நிற்க தான் முடிந்தது.என் அப்பாவை எதிர்த்துப் பேசுற தைரியம் வரலை!"

"..............."

"அதையும் மீறி நான் பேசி இருந்தா,இந்நேரம் எல்லோருக்கும் தலைகுனிவு வந்திருக்கும்!உங்களால என்னிக்கும் என்னோட வலிகளை புரிந்துக்கொள்ள முடியாதுங்க!என்னை மன்னிச்சிடுங்க!"-கண்களை துடைத்தப்படி அங்கிருந்து ஓடினாள் கௌரி.அவளது மனதின் வேதனை அவனறியாமல் அவனிடமிருந்து கண்ணீராய் வெளியானது.

மனதில் அவளது வார்த்தைக் ஊசியை போல தைத்தன.

அப்படியே கண்களை மூடிக்கொண்டு,தலையணையில் சாய்ந்துக்கொண்டான்.

ன்றிரவு....

ஏதேதோ சிந்தனைகளில் தன்னை தொலைத்திருந்தான் அசோக்.

மனம் தொலைந்த அந்த காதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் கதவை திறக்கும் சத்தம்!!கௌரி கதவை திறந்து வந்தாள்.மீண்டும் சில மருந்துகளை அவனிடம் தந்தாள்.

"கௌரி!"-நீண்ட காலங்களுக்கு பின் அவளது பெயரை அவன் உச்சரித்தது அவள் மனதை வெகுவாக வீழ்த்தியது.

"சொல்லுங்க!"-சட்டென அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் அசோக்.சிறு குழந்தையை போல அவனது கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.

"ஸாரிம்மா!நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்!"-திடீரென்ற அவனது மனமாற்றம் அவளை திடுக்கிடவே செய்தது.காலமானது பகையை வளர்த்தாலும்,காதலானது அவனது வைராக்கியத்தை சுக்கலாய் உடைத்தெறிந்தது.ஏதும் பேசாமல் அவனையே அதிர்ச்சியாக பார்த்தாள் கௌரி.

சிறிது அமைதி காத்தவன் அவளிடம் வினவினான்,

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?என் கூட கடைசி வரைக்கும் துணையா வருவியா?"என்று!!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.