(Reading time: 32 - 63 minutes)

ண்பனின் பார்வை இன்னும் அங்கேயே இருப்பதை கவனித்த கிருபா,

“டேய்… அவங்க போயிட்டாங்கடா… இன்னும் என்ன அங்க பார்வை… வா நாம உள்ள போகலாம்…” என சொல்லிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன், பின்னே திரும்பி பார்க்க,

அவனோ அந்த ஆட்டோவின் பின்னால் ஓடினான்…

“டேய்… டேய்…. எங்கடா போற?... என்ற கிருபாவின் சத்தம் அவனை எட்டியதோ என்னவோ,

விரைவாக திரும்பி வந்தவன், காரை கிருபாவின் முன் நிறுத்த, கிருபாவோ புரியாமல் நின்றிருந்தான்…

அவன் வேகமாக வண்டியை திருப்ப, கிருபா, எதுவோ இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு காரில் ஏறினான்… போக்குவரத்து நெரிசலில் கார் மாட்டிக்கொள்ள, ஆட்டோவோ முன்னேறிச் சென்றது…

“ஷிட்… ஷிட்….” என கத்தியவன், நெரிசலிருந்து விடுபட்டு ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த போது அங்கு ஆட்டோ நிற்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை… விரைந்து காரை பார்க் செய்தவன், நேரே உள்ளே சென்று விசாரித்ததும் அவள் இருக்குமிடம் தெரியவர, அங்கே ஓடினான்….

பலர் இருந்த அவ்வறையில், ஒரு ஓரத்தில் தனித்து பிரம்மை பிடித்தவள் போல் இருந்தவளைக்கண்டதும் அவன் இருதயம் வலித்தது…

அங்கிருந்த அலுவலர்களிடம் பேசி, அவளை மீண்டும் அந்த பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து வந்தான்…

இதுநாள் வரை அவளைப் பார்த்துக்கொண்ட நர்ஸிடம் அவளுக்கு என்ன ஆயிற்று எனக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது,

“என் பொண்ணு… எங்கம்மா?... இங்க யாரோ கூட்டிட்டு வந்தாங்களாமே… யாரும்மா அது?..” என அந்த பெரியவர் நர்ஸிடம் பதற்றத்துடன் விசாரித்துக்கொண்டிருந்த போது, “இவர் தான் அது…” என அந்த நர்ஸ் கைகாட்ட,

அவனைப் பார்த்தவர், “தம்பி… நீங்க?... ஏன்?...” என புரியாமல் கேட்டவர், “என் பொண்டாட்டி காஞ்சனாக்கு தெரியாமத்தான் என் பொண்ணை பார்க்க போனேன் அங்க… அங்க அவ இல்லன்னு சொன்னதும் ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு… அப்புறம் தான் நான் வந்தா இங்க வர சொல்லி சொன்னதா அங்க உள்ளவங்க சொன்னாங்க… அதான் ஓடிவந்தேன்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே எனக்கு தெரியலை தம்பி… என் பொண்ணை இங்க கொண்டு வந்து சேர்த்ததுக்கு….” என அவர் இருகரம் கூப்பி வேண்ட, அவன் அவரின் கைகளை சட்டென்று பிடித்து கீழே இறக்கினான்…

அந்நேரம், டாக்டர் வந்து அந்த பெரியவரை அழைப்பதாக நர்ஸ் சொல்ல, அவர் உடனே சென்றார்…

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவரின் முகத்தில், வேதனை அப்பட்டமாக தெரிய,

“என்னாச்சு பெரியவரே… டாக்டர் என்ன சொன்னாங்க?... ஏனிந்த வேதனை உங்க முகத்தில்?...” என அவன் பதறியபடி அவரிடம் கேட்க, அவரோ அழுதார்...

“என் பொண்ணு பிழைக்கவும் செய்யலாம்… பிழைக்காமலும் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார் தம்பி… சொல்லிட்டார்….” என அவர் கதறி அழ, அவன் அவரை சமாதானம் செய்தான்…

அவனிடமிருந்து விலகி, அவள் இருந்த அறைக்கு சென்றவர், பித்து பிடித்தவள் போல் எங்கேயோ பார்த்தபடி இருந்தவளை பார்த்ததும்,

“அந்த குழந்தை மட்டும் பொறந்திருந்தா நீ நல்லா இருந்திருப்பியேம்மா… அந்த கடவுள் அதை உங்கிட்ட இருந்து பறிச்சு உன்னை இப்படி நடைபிணம் ஆக்கிட்டாரே… அய்யோ….” என தலையில் அடித்துக்கொள்ள,

அவரின் வார்த்தைகள் அவன் காதிலும் விழ, “கு…ழ…ந்….தை?.... எ….ன்…ன சொல்லுறீங்க பெரியவரே…” என கேட்டான் திக்கி…

அவரும் நடந்த நிகழ்வுகளை சொல்லிவிட்டு அழுது ஓய்ந்த போது அவரை கைத்தாங்கலாக நாற்காலியில் அமர வைத்த போது, அவரின் செல்போன் ஒலி எழுப்ப, பதறிக்கொண்டு அதில் மின்னிய பெயரை பார்த்தவர், “தம்பி… என் பொண்டாட்டி தான் கூப்பிடுறா… நான் இப்போ இங்க இருக்குறேன்னு சொன்னா அவ்வளவுதான்… நான் போறேன் தம்பி… கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்க சொல்லுங்க தம்பி அந்த நர்ஸை…” என்றபடி ஓட்டமும் நடையுமாக சென்றவரின் திசையையே பார்த்துக்கொண்டிருந்தவன், தட்டென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து குனிந்து தலையைப் பிடித்துக்கொள்ள, அதுவரை அமைதியாக இருந்த கிருபா, அவனருகில் வந்து அவன் தோளில் கைவைத்தான்…

“என்னடா சொன்னார்?... அந்த பெரியவர் உங்கிட்ட உள்ள வச்சு?...” என அவனை தட்டி எழுப்பியவன், அவனிடமிருந்து அசைவு வராது போக,

“நீ ஏண்டா இப்போ இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்க?... என்னடா ஆச்சு?... சொல்லித்தொலை…” என நண்பனின் முகம் நிமிர்த்தியவன் அவனது சிவந்திருந்த கலங்கிய விழிகளைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான்…

“டேய்…. என்ன இது?...” என அவனிடம் கேட்டவனிடம்,

“என்னால தாங்க முடியலைடா… தாங்க முடியலை அவளை இப்படி பிரம்மை பிடிச்சவ மாதிரி பார்க்க….” என கூறியவன் துடித்தான் மிக…

“யாருடா அந்த பொண்ணு… உனக்கு தெரிஞ்சவளா?..” என கேட்ட பிரபாவிடம் மௌனம் சாதித்தான் அவன்….

“சொல்லுடா… சொல்லுன்னு சொல்லுறேன்ல….” என பிரபா அவனை உலுக்க, அவன் சொன்னான்…

அவள் தன்னை விரும்பியவள் என்று…

“வாட்?...” என அதிர்ந்தவனிடம் அவளின் கதையை சொல்லத்துவங்கினான் அவன்…

‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு….” என பல முறை அவள் சொன்ன போதிலும், அவனின் பதில் என்னவோ ஒன்று தான்…

“ஓ… ஒகே…”

அந்த பதில் அவளுக்கு எரிச்சல் மூட்டிய போதிலும், அவனிடம் அதை சொன்ன போதிலும்,

“நான் இப்படித்தான்…” என்பான் அவன்… அவளும் அதற்கு மேல் அதை தோண்டித்துருவாமல் விட்டிடுவாள்…

அவள் அவன் மேல் பைத்தியமாய் இருக்க, அவன் எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தான்… அவள் கேட்கவில்லை… இது நடக்காது… தேவை இல்லாது ஆசை வளர்க்காதே என பலமுறை எச்சரித்தும் அவள் கேட்டாள் இல்லை…

“நடக்காதுன்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது…. ஆனா என் மனசுக்கு என்னால புரிய வைக்க முடியலை… அது ஒவ்வொரு நிமிஷமும் உங்களோட வாழணும்னு மட்டும் தான் துடிக்குது…” என்றவளை கோபமாக பார்த்தவன், ஒரு முடிவோடு, அவள் தன்னை வெறுத்திடுவாள் என்ற நம்பிக்கையில்,

“அப்படியா?... அப்போ என்னோட வாழ்ந்திடு….” என்றான் அவன்…

“வாழ வேண்டுமா?... எனில் என்னை திருமணம் செய்து கொள்வானா?... என் காதலை ஏற்றுக்கொண்டானா?...” என மனதில் எழுந்த சந்தோஷத்தை அவள் முகம் தெரிவிக்க,

“உனக்கு என்னோட வாழணும்னு தான ஆசை… வாழு… அதே நேரத்துல அன்னைக்கு சொன்ன என் முடிவிலேயும் எந்த மாற்றமுமில்லை…” என அவன் அவளின் சந்தோஷத்தை தூள் தூளாக்கினான் தன் வார்த்தைகளால்…

அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ள அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது… புரிந்ததும், இதயத்தை யாரோ இறுக்கி பிழிவது போல் இருக்க, அவன் சொன்ன வார்த்தைகள் பொய்யாக இருக்க வேண்டும்… என பலமுறை அவள் நினைத்துக்கொண்டிருந்த போது,

“என்ன உன் முடிவு என்ன?... சொல்லு?... என்னோட வாழப்போறீயா?... இல்லை பேசாம உன் பாதையில ஒதுங்கி போக போறீயா என்னை விட்டு தூரமா?...” என அவன் கேட்ட நொடியில் அவளுக்கு தெளிவானது அனைத்தும்…. அது தன்னை ஒதுங்கி போக சொல்வதற்காக அவன் தன்னிடம் கடைசி யுக்தியாக பயன்படுத்தும் ஆயுதம் தான் இது என….

“என்னை விலக சொல்லுகிறாயா?... செத்தாலும் முடியாது….. உன்னை ரொம்ப காதலிக்கிறேண்டா… அது ஏண்டா உனக்கு புரியமாட்டிக்குது…” என மனதிற்குள் புலம்பியவள், அவனிடம், சரி வாழுறேன் என்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.