(Reading time: 32 - 63 minutes)

ன்னுடன் வாழு….” என்று சொன்னதும் தன்னை அறைந்துவிட்டு இனி தன் முகத்திலே விழிக்க மாட்டாள் என்றெண்ணியிருந்தவனுக்கு அவளது வார்த்தைகள் பேரிடியாக அமைய, அவனும் அவள் போக்கிலே அவளை சரி செய்ய எண்ணினான்…

“ஓ… குட்… அப்போ ஒரு கண்டிஷன்… ஒருநாள் மட்டும் நீ வாழப்போற வாழ்க்கைக்கு ரெடியா இரு… அது எப்போன்னு யோசிச்சு சொல்லு…” என அவன் சொன்னதும்,

“ஒருநாளா?...” என யோசித்தவள், அவனுடன் ஒரு நிமிடம் அவனருகில் இருந்தாலே அது தனக்கு கோடி ஜென்மம் வாழ்ந்த நிறைவை கொடுத்திடுமே… இதில் அவன் முழுதாக ஒருநாள் தருகிறானே… தன் இந்த ஜென்மத்திற்கு இதுவே போதும்… என நினைத்தவள், அவனிடம்,

“நீங்களே சொல்லிடுங்க என்னைக்குன்னு….” என சொல்ல, ஒரு முறைப்புடன் அவளை பார்த்தவன், இவ்வளவு சொல்லுறேன்… இன்னமும் சரின்னா சொல்லுற?... என்ற கோபத்தில், அவளிடம் நாளைக்கே என சொல்லிவிட்டு நிற்காமல் சென்றதும், அப்படியே தொய்ந்து அமர்ந்தாள் அவள்…

அவனிடம் சரி என்று சொல்லிவிட்டாள் தான்… ஆனாலும் அது அவள் வளர்ந்த முறைக்கு எதிரானதே… அவள் கற்றுக்கொண்ட கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அவனுக்காக தூக்கி ஏறியப்போகிறோம் என நினைத்ததுமே மனதில் கலக்கம் உண்டானது… பெண் என்ற அவளின் அடிமன உணர்வுகள் வெளியே வந்தது… இரவு முழுவதும் தூங்காமல் இருந்தவள், அடுத்த நாளை யுகமாய் ஒவ்வொரு நொடியும் கழித்தாள்…

மனதில் பாரங்கள் ஏறி அழுத்த, கோவிலுக்கு சென்றாள்… அந்த நேரம் அவனது அழைப்பு வர, அவனது வீட்டிற்குச் சென்றாள்… வந்தவளை உள்ளே கூட விடாது அவன் விரட்டியடிக்க, கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தவளை வீட்டிற்கு அனுப்பி வைக்க விரைந்தவன், அவள் பேசிய பேச்சில் கைஒங்கியவன் அவள் மயக்கமடைந்ததும் துடிக்க, அவள் அழுதுகொண்டே சொன்ன வார்த்தைகள் நிஜமாகவே அவனின் மனதை அந்நேரம் மாற்றி அவளுடன் வாழ வைத்துவிட, அடுத்த நாளே குற்ற உணர்வில், அவள் முகத்திலே விழிக்காது அவ்விடம் விட்டு சென்றுவிட்டான்…

மறுநாள் அவனைத் தேடி வந்தவள், அவன் இல்லாது போகவே, மனதிற்குள் வெம்பினாள்…

“எங்க போனீங்க?...” என்ற கேள்வியை நொடிக்கொரு தரம் தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள் அவள்… அவனையே நினைத்து அன்னம், தண்ணீர் இல்லாமல் கிடந்தவள், ஒருநாள் மயங்கி சரிய, தாய் தகப்பனில்லாத தன் அண்ணன் மகளை தன் மனைவியின் அனுதாபத்தில் ஹாஸ்டலிலாவது வளர்க்க முடிந்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தவர், திடீரென்று உடல் நலம் குன்றிவிட்ட மகளின் நிலையைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வர, அங்கே அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது…

“நீங்க இந்த பொண்ணுக்கு என்ன வேணும்?...” என கேட்ட நர்ஸிடம், அவர் அவளது சிறிய தந்தை என சொல்ல,

“உங்க பொண்ணு கர்ப்பமா இருக்குறாங்க… ரொம்ப வீக்கா இருக்குறாங்க… இந்த மாதிரி நேரத்துல அவங்களை ஏன் தனியா விடுறீங்க?... இந்த பொண்ணோட ஹஸ்பெண்ட் எங்க?...கொஞ்சம் நல்லா பார்த்துக்கோங்க… சரியா… இப்போ நீங்க கூட்டிட்டு போகலாம்…” என கூற, தன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார் அவர்…

கோடிமுறை திட்டி தீர்த்த மனைவியிடமிருந்து அவளை காப்பாற்றியவர், அவளின் கர்ப்பத்திற்கு காரணமானவனைப் பற்றி கேட்க அவள் வாயே திறக்கவில்லை…

“என்னவனின் உயிர்… என்னவன் எனக்கு கொடுத்த காதல் என் வயிற்றில் வளரும் கரு…” என பொத்தி பொத்தி அவள் அதனை பாதுகாத்தாள்…

“வீக்காக இருக்குறாங்க… இப்படியே இருந்தால் கர்ப்பத்தை தாங்கிக்கிற தெம்பு அவங்களுக்கு இருக்காது… கர்ப்பம் கலையவும் வாய்ப்பிருக்கு….” என்று டாக்டர் சொன்ன வார்த்தைகளே அவளுக்குள் திரும்ப திரும்ப ஒலிக்க,

“நின்றால் கலைந்திடுமோ, உட்கார்ந்தால் கலைந்திடுமோ, படுத்தால் கலைந்திடுமோ…” என அணுக்ஷனமும் தன் வயிற்றில் வளரும் அவனது உயிரினை அடைகாத்தவள், அந்த குழந்தைக்காக சாப்பிட ஆரம்பித்தாள்… நேரத்திற்கு சாப்பிட்டு மருந்து உண்டு வர, ஒருநாள் மசக்கை காலத்தில் மயக்கத்தில் பக்கத்தில் இருந்த திண்ணையில் அவள் சரிய, அவள் வயிற்றில் இருந்த நான்கு மாத கருவின் மேல் மோதியது அது…

ஒரு நிமிடம் நிகழ்ந்துவிட்ட நிகழ்வில், பல போராட்டங்களுக்குப் பிறகு தன்னவனால் கிடைத்த உயிர் கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் சிதைந்து விட, அப்படியே பிரம்மை பிடித்தவளானாள் அவள்,,,

கண்களில் இருக்கும் உயிரோட்டம், அவள் பேச்சிலும் இல்லை, வாழ்க்கையிலும் இல்லை…

ஆரம்பத்தில் என் குழந்தை… என் குழந்தை என்று சொன்ன வார்த்தைகள் கூட நாள்பட நாள்பட காணாமல் போனது…

எப்பொழுதாவது அவளது சிறிய தந்தையை அடையாளம் காணும் அவள் மனது, தன்னை அறியாமலே கலங்க ஆரம்பிக்கும்…

என் உயிர், என் பையன்…. என முணுமுணுக்கும் உதடுகள் அதோடு தன் வேலையினை நிறுத்திக்கொள்ளும்…

உங்க பொண்ணுக்கு இருக்குற நிலைமை மாறவும் வாய்ப்பிருக்கு… அதே சமயம் அது அவங்க உயிரை பறிக்கவும் வாய்ப்பிருக்கு… அவங்க மூளைக்கு போற நரம்புகள் ரொம்ப பாதிச்சிருக்கு… அதனால தான் அவங்க இப்படி இருக்குறாங்க… ஒரு மேஜர் சர்ஜரி பண்ணி பார்க்கலாம்… 50% சான்ஸ் இருக்கு அவங்க க்யூர் ஆக… அதே டைம் அவங்க சரி ஆகாமலும் போகலாம்.. என அவளின் வளர்ப்பு தந்தையிடம் டாக்டர் சொல்ல, அவ்வளவு பணம் எல்லாம் எங்ககிட்ட இல்லை, நீங்க அவளை டிஸ்சார்ஸ் பண்ணிடுங்க… நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறோம்… என அவரின் மனைவி சொல்லிட, மனைவியிடம் கெஞ்சி அவரும் கூத்தாட, கடைசியில் மனைவியின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து அவளை அநாதை போல் இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்திட, நண்பனுடன் அங்கு வந்தவன் எதேச்சையாக அவளை அங்கு பார்த்துவிட்டு அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றிட, தகவல் அறிந்து ஓடிவந்தவர், அவள் வாழ்வில் நடந்தவைகளை சொல்லிவிட்டு செல்ல, இப்போது தன் நண்பன் பிரபாவிடமும் அனைத்தையும் கொட்டிவிட்டு குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்து நின்றான் அவன்…

“ஏன் அன்று நண்பன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றான்…” என இப்போது பிரபாவிற்கு தெளிவாக, அமைதியாக நண்பனை பார்த்தான்…

ஏற்கனவே காதல் தோல்வியில் துவண்டிருந்தவனிடம் தானாக அறிமுகமானவள் தான் அவள்… அவள் நெருங்க நெருங்க அவன் விலகினான்… எவ்வளவோ தனக்கு விருப்பமில்லை என்று அவன் எடுத்துக்கூறியும் அவள் விட்டால் இல்லை…

தன்னையே சுற்றி சுற்றி வருகிறாள்… ஒருவேளை எனக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கவில்லை என்றால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது… என்னாலும் தான்… அதனால் தான் அவளிடம் எப்போதும் எறிந்தே விழுகிறேன்… ஆனாலும் அவள் அதை நினைத்து மனதிற்குள் அழுதாலும் மறுநிமிடம் என் அன்பை நாடுகிறாள்… எனக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லைடா… ஆனால், அவள் வாழ்வை பாழாக்க நான் விரும்பவில்லை… நான் ஒரு ராசியில்லாதவன், எனக்கு எதுவும் அமையாது… என்னை விரும்பிய பாவத்துக்கு அவள் ஏண்டா துன்பம் அனுபவிக்க வேண்டும்… அவளாவது என்னை மறந்துவிட்டு சந்தோஷமாக இருக்கட்டும்டா… அதற்குத்தான் அவளிடம் எப்பவும் எறிந்து விழுகிறேன்… வேண்டுமேன்றே… அவள் என்னை விட்டு விலக வேண்டும் என்பதற்காக்த்தான் அத்தனையும்… என பிரபாவிடம் அவன் ஒருமுறை சொல்லிய தருணம் நினைவு வர, அந்த அவள் இவள் தான் என்ற எண்ணமும் இப்போது சேர்ந்து கொள்ள, பிரபாவிற்கு அவனை அடிப்பதா இல்லை அரவணைப்பதா என தெரியவில்லை…

முற்றிலும் ஓய்ந்து அமர்ந்திருந்த நண்பனின் தோள்களில் கைவைக்க, அவன் எழுந்தான்….

வந்த கோபத்தில் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தவன், “விலகிப்போனவன் அப்படியே இருந்து தொலையவேண்டியது தானடா… அவ மனசை மாத்துறேன்ற பேரில் அவளை வரவைச்சு, மனசு கேட்காம நீ அவளை விரட்டி, கடைசியில் அவ உன் மேல வச்ச காதல் தான ஜெயிச்சது… வைராக்கியம் பிடிச்சவ உன் மனசை மாத்தி வாழ்ந்துட்டாளேடா உன்னோட… அப்பவே அவ கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டி ஆக்காம, அவளுக்கு துரோகம் பண்ணிட்டோம்னு குற்ற உணர்ச்சியில செத்து அவளை விட்டு விலகி போய், இப்போ பித்து பிடிச்சு இருக்குறவ முன்னாடி உசுரே இல்லாம வந்து நிக்குறீயேடா… சொல்லுடா… இப்போ மட்டும் எது உன்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கு?... அவ உன் மேல வச்ச கண்மூடித்தனமான காதல் தாண்டா பாவி….” என நண்பனை கண்டபடி திட்டி தீர்த்தவன், அவன் எதுவும் பேசாமல் கண்ணாடி வழியே அறைக்குள் இருந்த அவளை பார்ப்பதை உணர்ந்தவன், சட்டென்று அவனை இழுத்து அணைத்துக்கொண்டான்…

பின்னர் மெல்ல அவனை விடுவித்தவன், “உன்னைப் பார்த்தாலே அவ தெளிவாயிடுவாடா… அவ கிட்ட பேசுடா… நீ பேசினா, உன் குரல் கேட்டாளே அவ குணமாயிடுவாடா… போ… பேசு….” என நண்பனை அவன் உள்ளே போக சொன்ன தருணம், உள்ளே மூச்சுக்குப் போராடினாள் அவள்…

அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்த மருத்துவர்கள் அவளை காப்பாற்ற போராட, திணறிய மூச்சின் வேகத்தில் அவளது நரம்புகள் புடைத்து எழுந்தன… ஒவ்வொன்றாக அவளுக்கு நியாபகம் வர, கடைசியில் “கிருஷ்…………..ணா………………………..” என்ற கதறலுடன் குலுங்கியது அவள் உடல்..

அவளின் குரல் அறைக்கு வெளியே இருந்த இருவரின் காதிலும் விழ, ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக்கொண்ட போது, டாக்டர் உள்ளே இருந்து வெளியே வந்தார்…

“கிருஷ்ணான்னு கத்துனாங்க… அது அவங்க ஹஸ்பெண்டா?... வெளியூரில் இருந்து அவர் வந்துட்டாரா?... இந்த பொண்ணோட அப்பா எங்க?... அவர்கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன்… இந்த பொண்ணு ஹஸ்பெண்டை வர சொல்லுங்கன்னு… மாப்பிள்ளை வெளிநாட்டுல இருக்குறார்னு இத்தனை நாள் சொல்லியே சமாளிச்சார்…. இன்னைக்கு அந்த பொண்ணே அவ ஹஸ்பெண்ட் பேர சொல்லி கூப்பிடுறா… அவரை எவ்வளவு சீக்கிரம் வர சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர சொல்லுங்க…. என்ன ஹஸ்பெண்ட் அவர்?... வொயிஃப் சீரியஸா இருக்கும்போது என்ன பிசினெஸ் முக்கியமாம் அவருக்கு?... அந்த பொண்ணு உயிர் அந்த பாசமே இல்லாத மனுஷன் கிட்ட தான் இருக்கு… வர சொல்லுங்க அந்த ஆளை…” என்றபடி கோபமாக பேசிவிட்டு சென்ற டாக்டரின்  வார்த்தைகள் அவனின் இதயத்தை குத்தி கூறு போட, அதற்கு மேலும் தாமதிக்காது அவள் இருந்த அறைக்குள் நுழைந்தான்….

அவன் காலடித்தடத்தின் ஓசை அவள் செவிகளை எட்டியதோ என்னவோ, அவள் உடல் அதிர்ந்து தூக்கி போட்டது…

“கிருஷ்ணா ன்னு உங்களுக்கு பேர் வச்சது எனக்காகத்தான்… ஆமா இந்த சர்வஸ்வ தாயினிக்குத்தான்…” என அவள் சொல்லும் நேரத்தில், அவன் அவளை முறைத்திருக்கிறான்…

“முறைக்காதீங்க… ஆனா அதுதான் உண்மை…” என அவள் சொல்லும்போது அதை கண்டுகொள்ளாமல் இருந்தவன்,

அவள் அவனுடன் வாழ்ந்து முடிந்த நொடியில், “அன்னைக்கு சொன்னப்போ நீங்க நம்பலைல்ல… இன்னைக்கு நம்புறீங்களா?... கிருஷ்ணனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிச்சவ மட்டும் இல்ல எல்லாத்தையும் கொடுத்தவள் தான் சர்வஸ்வ தாயினி… அதே போல தான் இன்னைக்கு நானும் என் வாழ்க்கையை மட்டுமில்ல, என்னையும் கொடுத்துட்டேன்… இப்போ புரியுதா?... இந்த கிருஷ்ணன் தான் இவளோட பிராணன்னு….” என அவள் அன்றைக்கு சொல்லிய தருணங்கள் நினைவுக்கு வர,

இன்று அவளின் பிராணனைப் பிடித்து வைத்துக்கொண்டிருப்பதே தனக்காகத்தான் என்ற உண்மையும் அவனுக்கு விளங்க, மொத்தமாய் அவளின் அர்த்தமுள்ள அர்ப்பணிப்பான காதலில் தன்னை தொலைத்தான் அவன்…

“ஸ்வதாயினி….” என் ஆழ்ந்த பெருமூச்சோடு அழைத்தான் அவன்….

காற்றைவிட வேகமாக சென்று அவளின் மூச்சுக்குழலை அடைந்தது அவனின் சுவாசம்… அவளது செவிக்குழலை எட்டியது அவனின் அழைப்பு…

“ஒரு தடவை என் பேரை சொல்லுங்களேன்…. ப்ளீஸ்…” என அவள் கெஞ்சிய போதெல்லாம்,

“எனக்கு தோணுறப்போ, கூப்பிடுறேன்… இப்போ என்ன பேர் சொன்னா தான் ஆச்சா?...” சும்மா சும்மா எல்லாம் என்னால கூப்பிட முடியாது….” என்று அவன் எறிந்து விழ, அவள் ஊமையாகிடுவாள்…

இன்று அவள் கேட்காமலே அவன் அழைக்க, மூடியிருந்த விழிகள் பட்டென்று திறந்தது,, அவனது சுவாசத்தை நுகர்ந்தவளின் விழிகள் பெரும் அலைப்புறுதலுடன் அங்கும் இங்கும் அலைய, தலையை சரித்து மெல்ல பார்வையை செலுத்த, முதலில் மங்கலாய் தெரிந்த உருவம் பின் கொஞ்சம் கொஞ்சம் தெளிவாகையில், “ஸ்வதாயினி……………….” என அவன் மீண்டும் அழைக்க, அவள் விரல்கள் அசைந்தது… விழிகள் அவனது ஆதி முதல் அந்தம் வரை உராய, அவனை கண்கள் வலிக்கும்வரை கண்டு ரசித்தாள் அவள்….

அவனைக் கண்ட நொடியில், எங்கிருந்து தான் வந்ததோ, அவளின் உதட்டில் நிறைந்த புன்னகை உதித்திருந்தது… 

அவளின் புன்னகையைக் கண்டவனுக்கு சென்ற சுவாசம் திரும்ப தன்னிடம் வருவது போல் இருக்க தன்னையும் அறியாமல் அவளைப் பார்த்து புன்னகைத்தான் விழிகளில் வழிந்து கொண்டிருக்கும் நீரோடு…

அவனின் கண்ணீர் அவளது நெஞ்சை உலுக்க, இடம் வலமாக தலை அசைத்தவள், கைகளை அவனை நோக்கி உயர்த்த,

அவனுக்கு அப்போது தான் சுவாசமே திரும்ப கிடைத்த திருப்தி எழ, ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவன், அவளை நோக்கி கைகளை நீட்டிய வண்ணம் சென்ற போது, அவளது நெஞ்சம் அவனது நிறைந்த சுவாசத்தினால் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து குதூகலித்து அவள் உடம் முழுதும் பரவி அவளை மகிழ்ச்சியின் உச்சத்தில் வீழ, அவளது இதயத்துடிப்பும் அதிகரித்து, துடிதுடிக்க,

அவள் கைகளைப்பிடிக்க சென்றவன் அவள் கைகளைப் பற்றும் முன்னரே அவள் கைகள் பட்டென்று கட்டிலில் விழுந்தது, கி……ரு…ஷ்…….ணா என்ற முணுமுணுப்போடு அவளது இதயமும் துடிப்பை நிறுத்த, ஊசலாடிக்கொண்டிருந்த அவளது பிராணனும் சட்டென நின்று போனது சத்தமே இல்லாமல்…

தன்னை சுற்றி சுற்றி வந்த பட்டாம்பூச்சி இன்று சிறகொடிந்து பிராணனை இழந்து நிற்க,

“ஒரே ஒரு நிமிஷம் உங்க கையைப் பிடிச்சுக்கவா… ப்ளீஸ்…” என பலமுறை கெஞ்சிய நிமிடங்கள் அவன் நெஞ்சில் உதிக்க, அப்படியே தரையில் விழுந்தான் அவன்….

அன்று அவள் கெஞ்சிய கெஞ்சல்களை அவன் நிராகரித்தான்… இன்று அவன் பலமுறை அவள் பெயரை மட்டுமே உச்சரித்து மொத்தமாய் தரையில் சரிந்து அவளது கையோடு கை கோர்க்க கைகளை உயர்த்திய வண்ணம் இருக்க அவனது எண்ணங்களை கடவுள் நிராகரித்தார்…

இருக்கும்போது தெரியாத அருமையும், புரியாத காதலும், இறந்தபின் தெரிவதால் புரிவதால் யாருக்கு லாபம்?... இருக்கும்போதே நேசிப்பதற்கு தான் என்ன??... அன்றே அவளை தானும் நேசிப்பதை சொல்லியிருந்தால், அவளை விட்டு விலகாமலிருந்திருந்தால் இன்று அவளது பிராணனும் பறிபோயிருக்காது… அவனுக்கும் இந்த வலி நேர்ந்திருக்காது…

ஹ்ம்ம்… இயற்கைக்கு ஏது முரண்பாடு, பாகுபாடு எல்லாம்???… ஆம்… இயற்கைக்கு யாரும் விதிவிலக்கானவர்கள் அல்ல…

ஹாய் பிரெண்ட்ஸ்… இன்றோடு சில்சீ வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது…

சில்சீயில் எனது முதல் பயணம் நெஞ்சத்திலே நிறைந்தவனே என்னும் சிறுகதை மூலம் ஆரம்பித்தது… ஆம்….

அதே நாளில் ஒரு சில விஷயங்களை சொல்ல விரும்பினேன்… அதனால் தான் இந்த கதை… இதனால் பலருக்கு கோபம் எழுந்திருக்கலாம்… என்னடா இப்படி ஒரு சோகக்கதையா என்று…

ஆனாலும் சில விஷயங்களைப் புரிய வைக்க சோகங்கள் தேவைப்படுகிறது… வலிகள் தான் வாழ்க்கையை புரிய வைக்கும்… அப்படி ஒரு வலி வருவதை தடுக்கவும் நம்மால் முடியும்… ஆனால் அதை யாரும் அப்போதே உணர்வதும் இல்லை… அதற்கு தீர்வையும் கண்டெடுப்பதில்லை…

ஒருவரின் நேசத்தை, அக்கறையை, உணர்வுகளை அவர் அருகில் இருக்கும்போது நம்மில் எத்தனை பேர் உணருகிறோம்?... இன்று வந்து பேசுகிறவர் நாளையும் நம்மிடம் பேசுவார், அதனால் இன்று நாம் பதில் பேசாமல் ஊமையாய் இருந்தால் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது என்று எண்ணுபவரும் உலகில் இருக்கின்றனர்… அவர்களுக்கு அப்போது புரிந்திடுவதில்லை அந்த உறவுகளின் உணர்வுகள்… நாய்க்குட்டி போன்று தன் பாசத்திற்காக சுத்தி சுத்தி வந்த ஜீவன் இல்லை என்னும்போது எழும் வலி மரணத்தை விட கொடுமையானது… அதை தான் உதாசீனம் என்ற பெயரில் அதை அவர்கள் தம்மை சுற்றி வரும் அந்த உயிருக்கு கொடுக்கிறார்கள்… எனில் அவர்களுக்கும் வலிக்கும்தானே?...

வாழ்க்கை ஒருமுறை தான்… அதை வாழ்ந்திடுங்கள் எந்த வித வெறுப்புமின்றி… எனில் நாளை நீங்கள் தேடினாலும் ஒரு உறவு கிடைக்காதெனும்போது வாழும்போதே அந்த உறவுக்கு மதிப்பு கொடுக்க ஏன் தயக்கம்?...

அப்படி தயங்கினால் நாளை நீங்கள் தேடும்போது இயற்கை கூட உங்களுக்கு கைகொடுக்காது…

ஏதோ மனதில் பட்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்…. சொன்ன கருத்து தவறென்றால் மன்னித்துவிடுங்கள்…

சிறுகதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீக்கு என் நன்றி…

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.