(Reading time: 17 - 33 minutes)

"த்தை நீங்களும் எங்க கூட வாங்க மாமாக்களும் அக்கா எல்லாரும்  போய் வீட்ல எல்லாம் ரெடி பண்ணுவாங்க " என்று கூறிய மஹி அவனுடை மூத்த அக்காவுடைய வீட்டுக்காரரிடம் தனிமையில் சில நேரம் பேசினான்  

இங்கு நடப்பவை எதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என இருந்த இந்துவை யாரும் கவனிக்கவில்லை ஆனால் இரு ஜோடி கண்கள் அதை கவனித்தது.

"சேரி மஹி நீ சொல்ற மாறியே பண்ணிரலாம் அண்ணி மதுவையும் மஹியையும் கூட்டிட்டு வாங்க நான் பின்னாடி வரேன்"

"அம்மா ஏன் மா இன்னும் அந்த காலத்துலயே இருக்க ப்ளீஸ் மா என் கூட என்   கார்ல வாம்மா" என்று மஹி சினுங்க அவன் அன்னான் விக்ரமோ "மஹி அம்மா என் கூட என் கார்ல தான் வருவாங்க இனிமேல் நீ கொஞ்ச நாளைக்கு அம்மாவை தொந்தரவு பண்ணாம இந்துவா தொந்தரவு பண்ணு அம்மா கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்டா ....."

"அண்ணா யூ டூ புரூட்டஸ் எனக்கு பெருத்த அவமானம்.........."

"இந்து ஏன் டா பேசாம இருக்க நீ பயப்புடாத நான் அவனுக்கு அண்ணனா இருந்தாலும் எப்பவுமே நான் உனக்கு ஒரு அண்ணனா தான் டா இருப்பேன். எப்பவும் போல நார்மலா இரு டா "

"சேரி அண்ணா"

"ஹ்ம்ம் கால கொடுமை என்று பெரிதாய் வருத்தப்பட்டான் மஹி.

"சேரி சேரி நல்லா நேரம் முடிறதுக்குள்ள வாங்க இந்த தேவதையை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என மஹியின் அண்ணி ராதா இடை சொருக இந்துவின் கன்னங்கள் சிவந்தன வெட்கத்தால் , ஆடை பார்த்த மஹியின் உள்ளம் மகிழ்ந்தது, அனைவரும் புன்னகையுடன் மண்டபத்தை விட்டு கிளம்பினர்.

யார் தடுத்தும் கேட்காமல் மஹி அவனது காரை அவனே ஒட்டி சென்றான் இந்துவுடன் தனியாக, அவன் காரை தொடர்ந்துவருமாறு கூறி சென்றான்.

அவன் கார் நின்ற இடம் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்,

"மாப்பிள்ளை முதல் முறை நாம் முதலில் உங்கள் வீட்டுக்கு தான் போக வேண்டும், பிறகு வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் "என்று தயங்கி தயங்கி இந்துவின் அம்மா கூறியவுடன் "அத்தை என்ன புதுசா மாப்பிளைன்லாம் கூப்டுகிட்டு போங்க எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க அது இல்லாம வேற மாறி கூப்பிட்டா என்னமோ மாறி இருக்கு "

"சேரி டா மந்தி மொதல்ல எங்க எல்லாரையும் எதுக்கு இங்க கூட்டிட்டு விந்தனு சொல்லு , ஒரு நிமிஷம் இரு அண்ணா ஏன் மொபைல் கொடு "மாமா எல்லாம் ரெடியா நாங்க வரலாமா ஓஹ் ஓகே அப்போ நான் கூட்டிட்டு வரேன்"

அண்ணா வாங்க போலாம் என்று லிப்ட் பக்கம் கூட்டிக்கொண்டு போய் லிப்ட்டில் ௧ தளம் செல்லும் என்னை அழுத்தினான் பிறகு அங்கே சென்றவுடன்

 143  என்ற எண் பலகையுடன் mrs  & Mr Mahendran என்ற பெயர் பலகை கொண்ட வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழைத்தவுடன் கதவுகள் தானாக திறந்து ஒரு காணொளி அவர்களை வரவேற்றது .

இதை பார்த்த அனைவர் உள்ளங்களும் மகிழ்ச்சியில் கூத்தாடியது ஆனால் அவன் யாருக்காக இதை எல்லாம் செய்தானோ அவள் விழி விரித்து அவனை பார்த்தாள் கண்களில் இருந்து நான் எப்பொழுது விழ வேண்டும் என்று கண்ணீர் அவனிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தது அதற்கு அவனது பதில் புன்னகையால் வேண்டாம் இனி ஒருபோதும் உன் கண்ணில் இருந்து விழ அதற்க்கு அனுமதி இல்லை என்பதை இருந்தது அதற்கு பதில்.

பிறகு அவன் குரலில் ஒரு கவிதை ஒலித்தது "எல்லாரும்ஆ இந்த கவிதையை கேட்டுட்டு பாராட்றதுனா என்ன பாராட்டலாம் ஆனால் திட்றதுனா இந்துவை திட்டனும் ஏன்னா அதை எழுதியது இந்து அவளது  16ம் வயதில் அட பத்தாவது படிக்கும் பொழுது நமக்கு எல்லாம் தமிழ் பாடத்துல ஒரு பகுதி வருமே கவிதை எழுதுறது கட்டுரை எழுதுறதுனு அதுல நான்லாம் அந்த போர்டின்அ சாய்ஸ் ல விட்ருவேன் பட் இவை அடையும் விடாம பில் பண்ணுவா அதுல என்னக்கு புடிச்ச ஒன்னு உங்களுக்காக  

இருக்கரை தொட்டு ஓடியது மலையில் இருந்து ஓடிய அருவி  

மறுகரையில் பசேலென விளைந்த வயல்வெளி......

புன்னகையுடன் பூத்துக்குலுங்கின மலர்கள் தோட்டத்தில் ..........

இவை அனைத்தும் நிஜம் அல்ல அவை வரைபடமாய் தொங்கின என் சுவரில் மரசட்டத்தினுள்.........

என் வாரிசுகளுக்கு செழிமையான உலகத்தை கட்ட இந்த சட்டத்தையேனும் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்தேன் .

இந்தூவிற்கே அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அன்றைய நாட்கள்  அதை  அவள் ஆசை போடும் முன் அனைவரும் அவளை புகழ ஆரம்பித்து விட்டனர் . அதற்கு பதிலாய் வெட்கப்படுவாள் என்று பார்த்தாள் அவள் அனைவரிடம் நன்றி கூறிவிட்டு ஆவணி பார்த்து சுட்டெரிப்பவள் போல் முறைத்தாள் ஏன் என்று புரியாமல் மஹி விழித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.