(Reading time: 10 - 20 minutes)

ரிஷிகுமார் மூன்று வருடங்களுக்கு முன் மதுவிற்கு வீட்டில் பார்த்த வரன்..ரிஷி இங்கு மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞனாக இருக்கிறான்.மூன்று வருடங்களாக அவளின் சம்மதத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறான்.

“மதுவந்தி உனக்கு வைட் ரோஸ் பிடிக்கும்னு காலைல தேடி அலைஞ்சு வாங்கிட்டு வந்தா நீ வாங்காமையே போற”என அவள் பின்னாடியே வந்தான்.அவள் சிலையாக அப்படியே நிற்க..”மதுவந்தி என்னாச்சு.? ஏன் இப்படி நிக்கற.. என்னமா.?”என கேட்டு அவள் கண் சென்ற திசையை நோக்கி அவனும் பார்த்தான்.அங்கு ஒரு ஆண் அவனின் வயது இருக்கும், அவளையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த இளைஞன் கூட ஒரு கர்ப்பினி பெண்ணும் இருந்தாள்.

“ரிஷி அவன் தான்..”என வார்த்தை வராமல் திணறினாள்.. அவள் அவனை முதல் முறையாக உரிமையுடன் பேர் சொல்லி அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும்.. அவளின் அதிர்ச்சி முகபாவனை அவனை சிந்தனையில் ஆழ்த்தியது.

“அது தான்.. யாரு மா.. உனக்கு தெரிஞ்சவங்களா..?”என கேட்டன்.. அதற்கு அவள் சொன்ன பதில் அவனையும் அதிர்ச்சி ஆக்கியது.. தொண்டையை சரி செய்துக் கொண்டு”அது தான் சரண்”என கூறினாள். அதிர்ந்து சரணை நோக்கினான்..ரிஷிக்கு சரணைப் பற்றித் தெரியும்..ஆனால் அவன் சரணை பார்த்ததில்லை ..சரண் இன்னும் இங்கு தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள பூங்காவில் மதுவந்தி ரிஷி சரண் மற்றும் அவனின் மனைவி ஷாலினி கூடியிருந்தனர்.மது அவளது பார்வையால் சரணை துளைத்து எடுத்தாள்..ரிஷி மற்றும் ஷாலினி கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டார்கள்.

“சாரி மது.. இது சொல்லக் கூட எனக்கு அருகதை இல்ல.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. அதான் இப்படி ஒரு ட்ராமா பண்ணேன்.. எனக்கு உன்னை எப்பவுமே பிடிக்கும்.. பட் ஒரு லைஃப் பார்ட்னரா நான் என்றைக்கும் யோசிச்சது இல்ல.. நானும் ஷாலினியும் காலேஜ்ல இருந்தே லவ் பண்றோம்.. வீட்ல அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரியும்.. எல்லை’ல குண்டு வெடிப்பு நடந்ததுல எனக்கு அடிப் பட்டது உண்மை தான்.. ஆனா உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்ல.. அப்போ தான் எனக்கு இந்த யோசனை தோணுச்சு.. அப்புறமா என் கூட வேலை செய்றவன வெச்சு இப்படி சொல்ல வெச்சேன்.. டெத் செர்டிஃபிகேட் கூட போலியா ரெடி பண்ணி அவன் மூலமா உங்க கைக்கு கிடைக்கற மாதிரி செஞ்சேன்.. நான் பூனே’ல இருந்தப்போ ஷாலினி என்னை தேடி வந்தா.. அப்புறமா நாங்க கல்யாணம் பன்ணிக்கிட்டோம்.. ஒரு வாரம் முன்னாடி தான் மும்பைக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆகி வந்தோம்.”என நீளமாக தன்னிலை விளக்கமளித்து முடித்தான்.

மது ஒரு பெருமூச்சை விட்டு..”நீ நல்லா இருக்கல..அது போதும்..எனக்கு ஏதாச்சு செய்யனும்னு நினைச்சா போய் அத்தை மாமாவ பாரு..அவங்க தான் ரொம்ப ஒடைஞ்சு போய்ட்டாங்க..டேக் கேர் ஷாலினி.. நான் வரேன்”என சுருக்கமாக கூறி ரிஷியிடம் வந்து

“சாரி ரிஷி இவ்ளோ நாள் உங்கள வெய்ட் பண்ண வெச்சுடேன்.. மாமாவ வீட்ல வந்து பேச சொல்லுங்க..”என்று கூறிவிட்டு வீடு நோக்கிச் சென்றாள்..

சரண் தான் குற்றவுணர்ச்சியில் துடி துடித்து போனான்.. மது நான்கு வார்த்தை திட்டியிருந்தால் கூட அவன் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கும்..ஆனால் அவள் இப்படி அமைதியாக பேசி விட்டு சென்றது தான் அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது.

ரிஷி அவள் சொன்னதைக் கேட்டு ஆன்ந்த அதிர்ச்சியில் உறைந்து போனான்.. எனினும் அவளிடம் இன்னொரு முறைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள அவள் வீடு நோக்கி விரைந்தான்.

ங்கு மது ஹால் தரையில் கிழே அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்தாள்..அங்கு சரணிடம் தைரியமாக பேசிவிட்டு.. இங்கு தன்னவள் தனிமையில் அழுதுக் கொண்டிருப்பது அவன் இதயத்தை வலிக்கச் செய்தது.

“மதி அழாதே டா.. அவன் செஞ்ச தப்புக்கு நீ ஏன் அழற.?ஒரு வேளை அவனை மறக்க முடியலையோ.?”என வேண்டும் என்றேக் கூறினான்..

படக்கென்று அவன் எதிர்பார்த்தைப் போல நிமிர்ந்து கண்களில் நீர் வழிய அவனை முறைத்தாள்..”நான் ஒன்னும் அதுக்காக அழல.. இந்த அஞ்சு வருஷம் நான் எவ்ளோ மனக்கஷ்டப் பட்டிருப்பேன்னு எனக்கு தான் தெரியும்.. நான் படிச்சப் பொண்ணு தான் இருந்தாலும் அத்தையோட என்னால தான் அவங்க பையன் இறந்துட்டாங்கர குற்றச்சாட்டை என்னால தாங்கிக்கவே முடியலை.. அதனால கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு அவெர்ஷன்(aversion).. உங்களை புடிச்சு இருந்தும் அதான் நான் ஒத்துக்கவே இல்லை..என்ன பார்க்கறிங்க உண்மையா தான் சொல்றேன்.. சரண் மேல எனக்கு என்னிக்குமே பாசம் இருக்கு.. அந்த பாசம் தான் இன்னிக்கி அவனை திட்ட விடாம செஞ்சுது..அவனை மிஸ் பண்ணிட்டேன் அப்படினு ஒரு எண்ணம் எனக்கு வந்ததே இல்லை.. உங்களப் பார்த்தவுடனேப் பிடிச்சு இருந்தாலும் உங்களுக்கு நான் ஏற்றவளில்லையோனு ஒரு எண்ணம்..அதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை.. அம்மா அப்பா என்னை நினைச்சு ரொம்ப வருத்தப்படுவாங்க.. அதப் பார்க்க முடியாம தான் நான் மும்பை வந்துட்டேன்.. இங்க வந்தா நீங்களும் இங்க தான் இருக்கீங்க.. ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் உங்கள விட்டுத் தள்ளி இருக்கனும்னு முடிவு பண்ணேன். அதான் நீங்களா வந்து பேசுனாலும் எரிஞ்சு விழுந்தேன்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.