(Reading time: 22 - 44 minutes)

ன்மா நீயே இப்படியெல்லாம் பேசுற? உனக்கே நான் மூணு வருஷம் கழிச்சுதான் பொறந்தேன்னு சொன்னல்ல நீ? அப்பறம் என்னை மட்டும் எதுக்கு இப்படி குத்தி காட்டி கொல்லுற?” கடந்த இருபது நிமிடங்களாய் தன் தாயார் பேசும் பேச்சை தாங்க முடியாமல் அழுதாள் அவள்.

“ஏன்டீ இப்போ அழுது வடியுற? என் கல்யாணம் என்ன உன் கல்யாணம் மாதிரியா நடந்தது? உன் புகுந்த வீட்டுல இன்னமும் உன்னை முழுசா ஏத்துக்கல.. நீ நல்ல செய்தி சொன்னாலாச்சும் ஒரு விடிவு காலம் வரும்னு சொன்னது தப்பாடீ? நாளைக்கே குழந்தை பெத்துக்க வக்கில்லைனு சம்பந்தி வீட்டுல ப்ரச்சனை பண்ணா உன் கதி என்னடீ ? ஆம்பளைங்கள பத்தி உனக்கு என்ன தெரியும்? உன் புருஷன் உன் பக்கம்தான் கடைசிவரைக்கும் நிற்பாருன்னு கனவு காணாதே..அம்புட்டுத்தான் சொல்லிட்டேன்!”என்று அவர் கூறவும், மைதிலிக்கு கோபம் தலைக்கேறியது!

“அம்மா, கடைசியா சொல்லுறேன்.. என் மாமாவ பத்தி தப்பா பேசுற வேலைய வெச்சுக்காதே ! நீங்க எல்லாரும் மிரட்டியோ கெஞ்சியோ அவர் என்னை கட்டிக்கல. ஒரு பொண்ணோட பேரும் வாழ்க்கையும் கெட்டுட கூடாதுன்னுதான் என்னைக் கட்டிக் கிட்டார். அப்படி பட்டவரா என்னை விட்டுட்டு போக போறாரு? அதே மாதிரி உன் சம்பந்தினு, சொல்லி என் புகுந்த வீட்டை பத்தி தப்பா பேசுற வேலை வெச்சுக்காதே .. நல்லா கேட்டுக்கோ எனக்கு உன்னைவிட இந்த வீட்டு ஆளுங்க விட, என் புகுந்த வீடுத்தான் பெருசு.. இன்னொரு தடவை என்கிட்ட இப்படி பேசின அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்! உனக்கு பேர புள்ள தானே வேணும். பொறந்ததும் சொல்லி அனுப்புறேன்! அதுவரைக்கும் என்னை பார்க்க முயற்சி பண்ணாதே!” என்று வீரவசனம் பேசிய மைதிலி அன்றிரவே தன் கணவனுடன் கிளம்பிவிட்டிருந்தாள்.

திலி.. இங்க என்னடீ பண்ணுற?” என்று கேட்டப்படி அங்கு வந்த இனியவேல், வயிற்றில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மனைவியை பார்த்து பயந்தே போனான்.

“ ஏய்.. மைதிலி.. மைதிலி.. என்னம்மா?” என்று அவளை உலுக்க,

“ஆங்.. மாமா..” என்றவள் நொடியும் தாமதிக்காமல் அவனது மார்பில் தஞ்சமடைந்து கண்ணீர் விட்டாள்.

“ என்னடீ பண்ணுது ? ஏன் அழுவுற? வயிறு வலிக்கிதா? டாக்டர் பார்க்க போலாமா?” என்று தவிப்புடன் தன் யூகத்தை கூற பதில் பேசாமல் அழுதாள் மைதிலி.

“ என்னன்னு சொல்லுமா!” என்று அவன் கெஞ்சவும்,

“ மாமா நமக்கு குழந்தையே பிறக்காதா மாமா?” என்று கேவலுடன் கேட்டாள் மைதிலி. அவளை தன்னிடமிருந்து பிரித்து எடுத்து கூர்ந்து நோக்கினான் இனியவேல். அவள் விழிகளில் எதைக் கண்டானோ சட்டென, மைதிலியை இழுத்து அணைத்துக் கொண்டு,

“ச்சீ லூசு! என்ன பேச்சுடீ இதெல்லாம்!” என்றான்.

“ நான் சொல்லல மாமா.. என்னை பெத்தவங்கத்தான் சொன்னாங்க!”

“ அத்தையா மாமாவா?”

“ ஹும்கும் இப்போ அவங்களுக்கு உறவு முறைதான் ரொம்ப முக்கியம்!” என்று சிலுப்பிக் கொண்ட மைதிலி, “ உங்க அத்தை தான்!” என்று கூறி நடந்ததை சொன்னாள். அவனிடம் சொல்லி முடித்ததும் பெரும் பாரம் நீங்கியது போல அழுகையை நிறுத்தியிருந்தாள் மைதிலி.

“ அத்தை பெரியவங்க.. ஏதோ ஒரு இதுல சொல்லியிருக்கலாம்.. அதுக்குனு இப்படியா பொசுக்குனு சண்டை போடுவ நீ ? பாவம்தானே அவங்க?”

“இதுக்காகத்தான் மாமா சண்டை போட்டேன்.. உங்களை போயி புரிஞ்சுக்காம தப்பா பேசலாமா?” என்று ரோஷமாய் அவள் வினவவும் இனியவேலுக்கு சிரிப்புதான் வந்தது. தனக்காக பெற்ற தாயிடம் சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்று நினைக்கும்போது அவனையும் மீறி மனதிலிருந்து கர்வம் பொங்கியது. அதை அடக்கியவன்,

“ இருந்தாலும் நீ அப்படி பேசியிருக்க கூடாது திலி!” என்றான்.

“ ஆமா மாமா. யாரு என்ன தப்பு பண்ணாலும் நீங்க என்னைத்தான் சொல்லுவீங்க.. போங்க மாமா” என்று முகத்தை திருப்பிக் கொண்டவளைப் பார்த்து,

“ நீதானே டீ என் பொண்டாட்டி. நான் மத்தவங்க கிட்ட என் மனசுல தோணுறதை சொல்ல முடியுமா? நீங்க பேசுனது தப்பு அத்தைன்னு அவங்க கிட்ட கூட நான் சொல்ல முடியாது. ஆனா நீ எனக்கானவள்.. எனக்கு என்ன தோணினாலும் நான் சொல்லுவேன்!” என்றான் இனியவேல். அவன் தன்மீது காட்டிடும் உரிமை காதலின் பிரதிபிம்பம் அல்லவா? உடனே மைதிலியின் முகம் மலர்ந்து விட்டது. அவள் அதரங்களை ஆசையுடன் சிறைபிடித்து விடுவித்தான் இனியவேல்.

“ இது பாரு திலி ..  வாழ்க்கையில உறவுகள் ரொம்ப முக்கியம்தான். ஆனா அதுக்காக நம்ம சந்தோஷத்தை பலி கொடுத்து இருக்க கூடாது! நீயும் நானும் சந்தோஷமா இருக்கனும்னு தானே நாம தனியா வந்தோம்? ஆனா நீ அத்தை சொன்னதை மனசுல வெச்சுக்கிட்டு சோகமா இருந்தால் எனக்கு கஷ்டமா இருக்காதா?”

“..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.