(Reading time: 22 - 44 minutes)

டாக்டர்.. அவளுக்கு ஒன்னும் ஆகாது! நீங்க ஆபரேஷன் ஆரம்பியுங்க!” என்றுவிட்டு மைதிலியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அந்த கோவிலுக்கு ஓடினான் இனியவேல்.

காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் ஓடியவன் அப்படியே கடவுளின் முன் மண்டியிட்டு சரணடைந்துவிட்டான். அவனுக்கு சர்வமும் அடங்கி போயிருந்தது.

“ நான்தானே உன்னை நம்பலன்னு சொன்னேன்? என்னை வேணும்னா தண்டிச்சிக்கோ .. எனக்கு மைதிலி வேணும். இதுவரைக்கும் சேர்த்து வெச்ச அவநம்பிக்கை, கொள்கை எல்லாத்தையும் உன்கிட்டயே கொடுத்திடுறேன்.. உன்னை மட்டும் நம்பி கேட்குறேன்! எனக்கு என் மைதிலியும் குழந்தையும் வேணும்!” என்று கெஞ்சி வேண்டியவன் குங்குமத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

ழகின் மொத்த வடிவமாய் பிறந்திருந்த குட்டி வேலனும், மைதிலியும் இனியவேலுக்காக காத்திருந்தனர்.

“மைதிலி…” உயிரை தேக்கி வைத்த குரலில் இனியவேல் அழைத்திட சோர்வாக புன்னகைத்தபடி பேசினாள் அவள்.

“மாமா உங்க பையன் உங்களை மாதிரி தான்! எதிர்ப்பார்க்குறதை செய்யாமல் அதிரடி ஷாக் கொடுத்திட்டான்.. ஆபரெஷனுக்கு ரெடி பண்ணும்போதே சுக பிரசவமாய் பிறந்துட்டான் தெரியுமா?” என்று மைதிலி கூறவும், இனியவேலும் இயல்பாகினான்.

“ அப்படியா? நீ எதிர்ப்பார்க்காத இன்னொரு விஷயம் பண்ணவாடீ?” என்று அவன் கேட்க,

“என்ன ?” என்றாள் மைதிலி. உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை காட்டியவன், “ கோவில் குங்குமம்.. இரு வெச்சி விடுறேன்!” என்று அவள் நெற்றியில் திலகமிட்டு அழுத்தமாய் முத்தமிட்டான்.

“ என்ன மாமா இதெல்லாம்.. என்னால நம்பவே முடியல !” என்று வாயைப் பிளந்தாள் மைதிலி.

“ஆனால், என்னால நம்ப முடியுது திலி.. உனக்கு கடவுள் ஒசத்தி.. எனக்கு நீதான் ஒசத்தி.. அதான் உன் உயிர் எனக்கு வேணும்னு கடவுள் கிட்ட கேட்டேன்!” என்றான் இனியவேல்.

“ஓஹோ இப்போ உங்களுக்கு நான் ஒசத்தியா? இல்ல கடவுளா?”

“எப்பவுமே நீதான்டீ ஒசத்தி! உன் கடவுளே கட்டின பொண்டாட்டியை கண்கலங்காம பார்த்துக்கணும்னு சொல்லியிருக்கார்ல? சோ இப்பவும் நீதான் எனக்கு பர்ஸ்ட்!” என்றான் இனியவேல்.

தன்னுடைய கொள்கையில் இருந்து இறங்கி வந்துவிட்டோமே என்ற வருத்தமோ கூச்சமோ அவனுக்கு இல்லை! அதே போல உன்னை நான் மாற்றி விட்டேனே என்று மைதிலியும் கர்வம் கொள்ளவில்லை.

உண்மையான அன்பினில், சில நேரம் தழைந்து போவதும் உன்னதம் தானே! ஆக மொத்தம் இருவருமே ஜெயித்திருந்தனர். மனைவியை ஆசைத்தீர முத்தமிட்டவன், அதன்பின் தான் தனது மகனையே கொஞ்ச ஆரம்பித்தான். சில நிமிடங்களில் குழந்தை பசியில் அழ, மைதிலி அவனுக்கு தாய்பால் ஊட்டிட, அப்போதுதான் ஒரு ஓரம் ஆசுவாசமாய் அமர்ந்தான் இனியவேல். உயிர் போய் வந்தது போல இருந்தது அவனுக்கு.

“ எவ்வளவு திடமாய் இருந்தேன் .. ஆனால் ஒரு நாளில் இப்படி மாறிட்டேனே! எனக்குள் இவ்வளவு பலகீனம் இருப்பதே இன்னைக்குத்தான் ஃபீல் பண்ணுறேன்.. மைதிலி.. என் பலமும் அவதான் பலகீனமும் அவதான்! எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்று மானசீகமாய் அவன் சொல்லிக்கொள்ள இனியவேலின் உள்மனம் நிதர்சனத்தை எடுத்து சொன்னது.

கணவன் என்பவன் திடமானவன். தனது ஆக்ககர சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவன். சில நேரங்களில் மனைவியின் எண்ணதிற்கு கூட மதிப்பளிக்காதவன் போல இருப்பான் ! ஆனால் இது அவனது ஒரு பக்கம் தான்!

கணவனின் மறுபக்கமே அவனது மனைவிதான்! அவன் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலுமே தனது மறுபக்கமான மனைவி இல்லாமல் போய்விட்டால்?? அவன் மொத்தமுமாய் உடைந்து போய் விடுவான்.

இனியவேலும் அப்படித்தான். இதோ தனது மறுபாதி மீண்டு வந்ததும் அவனும், தைரியமாகிவிட்டான். இனி தன் வாழ்வில் எப்போதும் வசந்தம்தான்! என்று எண்ணிக்கொண்டான். அவனது எண்ணம் ஈடேற வாழ்த்தி நாமும் விடைப்பெறுவோமே!

ஹாய் ப்ரண்ட்ஸ்! “கணவனின் மறுபக்கம்” என்ற தலைப்பிற்காக இனியவேல்- மைதிலியின் மூலமாக அதிக நெளிவுசுளிவுகள் இல்லாத கதையை சமர்ப்பித்ததில் மகிழ்ச்சி.

“ ஒரு ஆண் எத்தனை வைராக்கியமானவன் என்றாலும், அவனது மறுபக்கம் மிகவும் மென்மையானது! அந்த மென்மையை பெண்மையால் மட்டுமே காத்திட முடியும். மனைவி எனும் பெண் இல்லையேல் அந்த கணவனுக்கு சர்வமும் அடங்கிவிடும்!” என்பதை கதை மூலமாக சொல்ல முயற்சித்திருக்கிறேன். மேலும், கடவுள் எனும் சக்தி இருக்கிறதா இல்லையா என்ற வாதத்திற்கு இக்கதை ஒரு தீர்வு இல்லை என்பதையும் நண்பர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இறைபக்தி இல்லாவிடினும் இனியவேலிடம் நேர்மை இருந்தது. நேர்மை கொண்ட எந்த மனிதனுக்கும் வீழ்ச்சி என்பதில்லை என்ற பார்வையுடன் கதையை முடிக்கிறேன்.. பாய் பாய்.. மீண்டும் சந்திப்போம்!

 

This is entry #15 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுப்பக்கம் 

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.