(Reading time: 11 - 22 minutes)

"ர் திரும்பினதும் என் உடல் நிலை ரொம்ப மோசமாச்சு, என்னை யாரும் கவனிக்கவும் இல்லை, மற்ற யார் கூடயும் பேசவும் கூடாதுன்னு சொல்லி வீட்டிலேயே அடைச்சு வச்சிட்டாங்க. ஒன்னுமே புரியலை. அப்போதான் தேடிப் பிடிச்சி என்னோட மெடிக்கல் ஃபைலை கண்டு பிடிச்சேன். எனக்கு அதில என்ன எழுதியிருந்ததுன்னு ஒன்னுமே புரியலை அதான் பக்கத்து ஊருக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லிட்டு போய் டாக்டரைப் பார்த்தேன். அப்போ அவர்தான் அந்த உண்மையைச் சொன்னார்."

பெருமூச்செறிந்தவளை இருவரும் விழி இமைக்காமல் பார்த்திருக்க,

"என்னோட ஒரு கிட்னியை எனக்கு தெரியாமலே எடுத்து என்னோட கணவருக்கு பொருத்தியிருக்காங்க……."

கேட்டுக் கொண்டிருந்தவர்களை அதிரச் செய்தது அந்த உண்மை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? தன்னுடைய சுயலாபத்துக்காக ஒரு பெண்னை திருமணம் செய்து, அவலுடைய விருப்பம் இல்லாமலே அவளின் உடலில் இருந்து உறுப்பை எடுத்து........மனமே பதறுகின்றதே.....

"வீட்டுக்கு வந்து சண்டைப் போட்டேன். அதெப்படி என்னோட சம்மதம் இல்லாம என் கிட்னியை எடுக்கலாமின்னு கேட்டேன். என் மாமியார் இதெல்லாம் ஏற்கெனவே உன் அப்பாக்கிட்ட பேசி தான் திருமணம் செஞ்சோம், இல்லன்னா உன்னை மாதிரி ஏழைப் பட்டவளை என் பையனுக்கு திருமணம் செஞ்சிருப்பேன்னா நீ நினைக்கிற……..நாங்க 20000 ரூபா தர்றதா சொன்னதுக்கு மெல 30000 சேர்த்துப் போட்டு 50000 ரூபாய் வேணும்னு உன் அப்பா கேட்டாரு, ஒரு நயாபைசா பாக்கியில்லாம கொடுத்திருக்கோம் வேணும்னா உன் அப்பனுக்கிட்ட போய் கேட்டுக்கோன்னு சொல்லிட்டார்."

விசும்பினாள்….மறுபடியும் நில்லாமல் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

“என் அப்பா என்னையே விலைக்கு வித்துட்டாருடா ரித்தி”

…தொடர்ந்தாள்.

"நானும் கோபத்தோட அப்பாக் கிட்ட போனேன். அவர் செஞ்சது நியாயமான்னு கேட்டேன். போலீஸ்க்கு போவேன்னு சொன்னது தான் தாமதம் என்னைக் கொல்றதுக்கு என் கழுத்தை பிடிச்சிட்டார்………..அன்னிக்கு நான் எப்படி தப்பிச்சேன்னே தெரியலை அதான் ஊரை விட்டே ஓடி வந்துட்டேன்."

"கடவுளும் இவளை இதுக்கு மேல சோதிக்க வேண்டாம்னு நினைச்சாரோ என்னவோ தெரியலை, இங்க வந்து சேர்ந்துட்டேன். என்னால முடிஞ்ச வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். இவங்க மட்டும் எனக்கு புகலிடம் தரலைன்னா நான் எப்பவோ மண்ணுக்குள்ள மண்ணா போயிருந்திருப்பேன்………”

அழுதுக் கொண்டிருப்பவளை பரிவுடன் அணைத்துக் கொண்ட அந்த அருட்சகோதரி,

“மந்திரா ஆசிரமத்துக்கு வந்தப்போது அவளோட உடல் நிலை ரொம்ப மோசமா இருந்தது. அவளுக்கு இத்தனைப் பிரச்சினைகள் இருக்குன்னு இன்னிக்குதான் தெரிய வந்தது” என்றார்.

"நீ ஊருக்கு மறுபடி வந்திடுறியா மந்திரா, நான் உனக்கு வேண்டிய உதவி செய்றேன்". என்கிற ரித்விக்கின் அழைப்பை மறுத்தாள்.

“வேண்டாம் ரித்விக், நீ வந்து பார்த்ததே எனக்கு ரொம்ப தெம்பா இருக்கு. இப்படி நீ அடிக்கடி வந்துப் பார்த்துட்டு போவியா?”

சரியென தலையசைத்தான் அவன்.

“ நான் அதிகம் படிப்பறிவு இல்லாததனால் தானே இவ்வளவும் நடந்தது , மேலும் படித்து என்னோட அறிவை வளர்த்துக்க போறேன். ஏழை என்கிறதால தானே அவங்க எனக்கு அநியாயம் செஞ்சாங்க…நான் அவங்களுக்கு எதிரா போராடப் போறேன். எனக்கான நியாயம் கேட்கப் போறேன் என்றவள் கண்ணில் கனல் தெரித்தது. 

அவளுக்கு நியாயம் கிடைக்குமா? அவளுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு ஏற்ற தண்டனை தவறு செய்தவர்களுக்கு கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஹாய் ஃபிரண்ட்ஸ், இந்தக் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நிஜத்தில் நீதிக் கேட்டு கொந்தளித்த அந்த பெண்ணின் உயிர் அவளுடைய தந்தையாலே போக்கப் பட்டதாக அறிந்தபோது மிகவும் அதிர்ந்தேன். இப்போதெல்லாம் பெண்களுக்கெதிரான கொடுமைகள் வித விதமாக பற்பல ரூபத்தில் பார்க்க நேரிடுவது மனதை வருத்துகின்றது.

நிஜம் கசப்பாக இருக்கும் போது கற்பனைகளில் சுவை தேட வேண்டியிருக்கின்றதே. ஆதலால், என்னுடைய கதை என்னும் கற்பனையில் அந்த பெண்ணை உயிர்ப்பித்து இருக்கின்றேன் மந்திராவாக........... :)

This is entry #38 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ஜான்சி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.