(Reading time: 16 - 32 minutes)

2017 போட்டி சிறுகதை 39 - சுகமான கனவுகள்! சுடும் நிஜங்கள்!! - மது

This is entry #39 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - மது

Nature 

டிசம்பர் 31 ,2019 நேரம்:15:30

டோக்யோ, ஜப்பான்.

டோக்யோ நகரத்தின் சாலைகளில் அதிவேகமாக அந்தக் கருப்பு நிற கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

“இண்டர்நேஷனல் கிளைமேட்டாலஜி மீட்” ( International Climatalogy Meet )நடந்து கொண்டிருந்த அந்த பெரிய அரங்கத்தின் வாயிலை சென்றடைந்தது அந்தக் கருப்பு நிறக் கார்.

“பேபி இட்ஸ் கெட்டிங் லேட்” காரில் அமர்ந்திருந்தவன் பொறுமையின்மையுடன் மணியைப் பார்ப்பதும் பின் அந்த பெரிய நுழைவாயிலை நோக்குவதுமாய் இருந்தான்.

“ஸ்பான்சர்ஸ் வி.எம் க்ரூப்ஸ்” என்ற பெரிய பெயர் பலகைகள் ஆங்காங்கே.

அதனை ஒரு முறை ஆழமாய் நோக்கியவன் காரின் சீட்டில் தலை சாய்த்து கண் மூடினான்.

“மை லாஸ்ட் மொமண்ட்ஸ்” அவன் முகத்தில் வேதனை.

டிசம்பர் 31 , 2016  நேரம்: 16:00

ஹெர்குலஸ் லைட்ஹவுஸ்

கலிசியா, ஸ்பெயின்

ன் முன்னே கண் எட்டும் தூரம் வரை பரந்து விரிந்த அந்த நீல வண்ண சமுத்திரத்தை கண் கொட்டமால் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரகதி.

கடலும் வானமும் ஆதி அந்தம் காணக் கிடைக்காத சங்கமத்தில்.

“எல்லாத்துக்கும் ஒரு நாள் முடிவுன்னு ஒன்னு இருக்கு தான். ஆனா இவ்வளவு சீக்கிரமா அது நடக்கப் போகுது. என் முடிவ பத்தி எனக்கு பயமில்ல வருத்தமில்ல. ஆனா உன்னோட முடிவை நான் கண்கூடா பார்க்க போறேன்னு நினைக்கும் போது தாங்கவே முடியல”

முழங்கால்களை மடித்து தலை புதைத்து கண்ணில் நீருடன் தன் முன் விளையாடிக் கொண்டிருந்த அலைகளிடமும் காற்றிடமும் தான் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

“எல்லோரும் சரி சரின்னு தலைய தலைய ஆட்டி கேட்டுக்கிட்டாங்க. ஆனா உண்மையில் ஒருத்தருக்கும் அக்கறையே இல்ல. அதோ அந்த வானத்துல கண்ணுக்குத் தெரியாத பிரபஞ்சத்துல கடவுள் இருக்கார், அவர் அவதாரம் எடுத்து வந்து காப்பாத்துவார்ன்னு  சின்ன வயசில் கேட்ட கதை நிஜமா இருக்க கூடாதா”

“சின்னதும் பெருசுமா 195 நாடுகள். அதுல எத்தன மனுஷங்க. என்னை மாதிரி ஒருத்தர் கூட யோசிக்க மாட்டாங்களா”

“தேர் இஸ் நாட் கோயிங் டு பீ எ டுமாரோ....கேன் எனிபடி ஹியர் மீ...அழிய போறோம் எல்லோருமே...டாம்மிட்” அந்தப் பாறையில் இருந்து எழுந்து நின்று உரக்க கத்தியவள் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி

“காட்....ப்ளீஸ் சேவ் அஸ்... ப்ளீஸ்” உயர்த்திய கைகளை கூப்பி அப்படியே தரையோடு மடித்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் அவளது கூக்குரல் கேட்டு கடலும் காற்றும் வானும் தான் ஆர்பரித்தன.

சட்டென வானம் தூறல் போட, அலைகள் கொந்தளிக்க, காற்றும் சுழற்றி வீச, இயற்கை சீற்றம் கொண்டது ப்ரகதியைப் போலவே.

டிசம்பர் 31, 2013 நேரம்: 10:30

குளோபல் வார்மிங் சம்மிட் ( Global Warming Summit)

ஒஸ்லோ, நார்வே.

(ஆங்கில உரையாடல் தமிழில்)

குளோபல் வார்மிங் சம்மிட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட ஒன்று சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய கிளைமடாலஜிஸ்ட் (climatologist) டாக்டர் ப்ரகதியின் புத்தகம் “எர்த் 2020 கருவறையா!! கல்லறையா!!” (Earth 2020:  Womb or Grave??!!)

இதோ டாக்டர்  ப்ரகதியின் பிரத்யேக நேர்காணல்.

“டாக்டர் ப்ரகதி!! பிபிசிக்கு ப்ரேத்யேக பேட்டி அளிக்க முன் வந்ததற்கு முதலில் நன்றிகள்.

உங்கள் புத்தகம் இந்த குளோபல் வார்மிங் சம்மிட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு பிபிசிக்கு எனது நன்றி.

“நம் பிரபஞ்சத்தில்  எத்தனையோ கிரகங்கள், நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் பூமி மட்டுமே சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இயற்கை வியாபித்திருப்பது இங்கு தான்”

“ஐம்பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். பூமியில்  எல்லாம் சரிவிகிதமா இருப்பதால் இங்கே முதல் உயிர் ஜனித்தது. அதுவே உயிர் சங்கிலியாக தொடர்ந்து இன்று மனிதர்கள் வரை விரிந்துள்ளது”

“உயிர் தோன்றிய காலம் தொட்டு எத்தனையோ பிரளயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாமே இயற்கையின் மாறுதல்கள். அந்த மாறுதல்கள் புது ஜனனங்களுக்கு வழி வகுத்தன”

“ஆனால் இன்று நாம் மிகப் பெரிய அச்சுறுத்தலின் முன்னே இருக்கிறோம். இதற்கு மொத்த பொறுப்பு மனித குலத்தையே சாரும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.