(Reading time: 44 - 87 minutes)

“என்னை அடிக்கனும்னாலும் அடிச்சுடு... ஆனா அவங்கிட்ட பேசுடி! சஞ்சயைப் பார்க்கவே பயமாயிருக்கு.  வந்தப்போலிருந்து இப்படியேதா உட்கார்ந்திருக்கா.  ப்ளீஸ் சௌமி!”

சரயூவின் இந்நிலைக்கு வேதிக்தான் காரணமென்பதைத் தவிர வேறேதும் ரூபின் சொல்லியிருக்கவில்லை.  அதனால்,

“வேதிக் ஏன்டா இப்படி பண்ணி தொலச்சா? அவனுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று நொந்துகொண்டாள்.

“வசந்த் வீட்டு தோட்டக்காரரோட மகன்தான் வேதிக்.  இரண்டு பேரும் ஒரே நாளில் பிறந்து, ஒன்னா விளையாடி வளர்ந்தவங்க.  வசந்துக்கு வேதிக்கை ரொம்பவும் பிடிக்கவும் அவனையும் இவனோடவே ஸ்கூலுக்கு அனுப்பியிருக்காங்க.  வேதிக் தூங்குறது கூட வசந்தோடதா.  இப்படி ஒன்னாவே சுத்திக்கிட்டிருந்த ஃப்ரெண்ட், காம்பிடிடிவ் எக்சாம்ல கால்குலேட்டர் யூஸ் செய்து மாட்டிக்கிட்டு, திடீர்னு ஒருநாள் தற்கொலை பண்ணிக்கிட்டானு ஒத்துக்க முடியலை.  வசந்த் செய்தது தப்புங்குறத விட அவனை மாட்டிவிட்ட சரயூதா இதுக்கு காரணம்னு நம்ப ஆரம்பிச்சவ அவளை பழிவாங்க முடிவெடுத்திருக்கா.  மகனை இழந்த துக்கத்துல வசந்தோட அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க.  அவங்க இன்னொரு மகனா வளர்த்த வேதிக்குக்கே எல்லா சொத்தையும் எழுதிவச்சிட்டாங்க.  அதுக்கப்றம்தா சரயூவை தேடி நம்ம காலேஜுக்கு வந்திருக்கா.  அவனோட ப்ளானெல்லாம் சொதப்பவும், கிரணை வழிக்கு கொண்டுவந்திருக்கா.  கூர்குல சாக கிடந்த கிரணைக் காப்பாத்தினவ, அவ குடும்பத்தை இவனோட கட்டுப்பாட்டுல எடுத்திருக்கா.  கிரண் சரயூவை பத்தி கேட்டப்பெல்லாம் எதையாவது சொல்லி சமாளிச்சிட்டிருந்திருக்கான்.  வேதிக் வெளிநாடு போறதுக்கு முன்னாடி அவளை கிரண்ட்ட ஒப்படைக்குறதா கடைசியா சொல்லி அவனையும் ஏமாத்திட்டு சரயூவை கொல்ல முடிவெடுத்திருக்கா”

சரயூவிற்கு மருத்துவமளித்த மருத்துவர் வெளிவரவும் இருவரும் அவரிடமாக நகர்ந்தனர்.

நடந்தவைகளை தெரிந்து அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து, “என் ஃப்ரெண்டு எப்படியிருக்கா? விஷம்னு தெரிஞ்சதுல இருந்து நிக்கக் கூட முடியலை.  அவளுக்கு ஒன்னுமில்லையே?” படபடத்தாள் சௌம்யா.

“நீங்க கவலைபடாதீங்கம்மா... அவங்களை காப்பாத்தியாச்சு.  அவங்க உயிருக்கிப்போ எந்த ஆபத்துமில்ல.  நீங்க பெரிய மனசு பண்ணி எங்க மேல கேஸ் எதுவும் வரமா பார்த்துக்கிட்டா நல்லாயிருக்கும்” என்றபடி ரூபினைப் பார்த்தவர், “நாங்க அந்த மருந்தை பொதுமக்களுக்கு விக்கிறதில்லை.  வேதிக், அரண்மனையை சேர்ந்தவருங்குற காரணத்துக்குதா கொடுத்தோம்.  எங்களோட இந்த ஆயுர்வேதிக் சென்டர் இன்னைக்கு வளர்ந்து நிக்குறதுக்கு காரணமே அரண்மனைக்காரங்கதா.  அந்த விசுவாசத்துலதா... அது கூட பயிருக்கு தேவைபடுதுனு சொன்னதுனாலதா கொடுத்தோம்.  இந்த மருந்தை பயிருக்கு பாய்ச்சுர தண்ணில சரியான அளவு கலந்தா நல்ல விளைச்சல் காணும்.  அதே நேரத்துல கொஞ்சம் அதிகமா கலந்துட்டாலும் பயிரே கருகி போறதோட இல்லாம நிலத்தையும் பாழாக்கிடும்.  இந்த சுத்துபட்டு கிராமங்களுக்கெல்லா சோறு போட்ட குடும்பத்துக்கு மருந்தோட வீரியம் தெரியும்.  அவங்க ஜாக்கிரதையா இருப்பாங்கனுதா கொடுத்தோம்.  தயவு செய்து இதுல எங்க பேரு அடிபடாம பாத்துக்குங்க” என்று ரூபின் காலில் விழாத குறையாக அவர் கெஞ்சவும்....

“அதெப்படி இதை சும்மா விட முடியும்? மருந்தோட வீரியம் தெரிஞ்சுதானே இதை அரசாங்கம் தடை செய்திருக்கு.  அதையும் மீறி நீங்க இதை வித்திருக்கீங்க.  சட்டப்படி நா....” கடமைத் தவராத காவல்துறை அதிகாரியாக பேசிக்கொண்டிருந்தவனை இடையிட்டாள் சௌம்யா.

“அய்யோ ரூபின்! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்பவும் உன் போலீஸ்க்கார புத்தியை காட்டுற.  சரயூவை பார்க்கலாமா கேளு” என்று அவன் காதை கடிக்கவும்

“இதை பத்தி நாம அப்றம் பேசலாம்.  நாங்க சரயூவை பார்க்கலாமா?” என்று கேட்டான்.

“தாராளமா பார்க்கலாம்.  இன்னும் பத்து நிமிஷத்துல முழிச்சுக்குவாங்க.  மருந்து மூளையை எட்டியிருப்பதால குறஞ்சது ஒரு மாசமாவது வைத்தியம் பார்க்கனும்.  அதுவரைக்கும் அவங்க இங்கதா இருக்க வேண்டியிருக்கும்.  செலவு பத்தி யோசிக்காதீங்க.  அதை நாங்களே பார்த்துக்குறோம்.  ஆனா இந்த கேஸ் மட்டும்....” என்று அவர் மறுபடியும் அங்கேயே வந்து நிற்க

அவருக்கு பதில் சொல்ல தயாரானக் கணவனை கண்டவளுக்கு கடுப்பாக இருந்தது. 

“நீ அவர்ட்ட பேசிட்டு வா ரூபின்.  நான் போயி சரயூவை பார்க்குற” என்று காரமாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

சௌம்யாவின் கோபம் புரிந்தாலும் பொறுப்பான காவல்துறை அதிகாரியாக ரூபின் அவரிடம் தொடர்ந்து பேசினான்.

சரயூ படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியில்தான் உட்கார்ந்திருந்தான் ஜெய்.  சௌம்யா உள்ளே சென்று தோழியை பார்த்துவிட்டு வந்தது கூட தெரியாது உட்கார்ந்திருப்பவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.