(Reading time: 25 - 50 minutes)

வளோ கொஞ்சம் கூட அசைவின்றி அதே ஆராயும் பார்வையுடன் அவனின் ஐ போன்னை பார்த்த படி இருந்தாள்.  "இவ விட்டா பார்வையாலே போட்டோவை  மட்டும் இல்ல போன்னையே காலி பண்ணிடுவாள் போல இருக்கே!" என்று கேலியாக நினைத்த படி அவளை அழைக்க அவன் எத்தனிக்கும் பொழுது அவள் ஆள்காட்டி விரலின் அசைவை கண்டு பதறினான். "அடி பாவி..அழகான ஷாட்..இவ்ளோ நேரம் உத்து உத்து பாத்த.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம டெலீட் பண்ண போறியே?" மனதுக்குள் நினைத்த படியே அவள் அருகில் சென்றான்.

 

அவள் மின்னஞ்சல் உருவத்தில் விரல் பதித்து அடுத்து தோன்றிய திரையில் அவளின் பெறுநர் முகவரியில் அவளின் மின்னஞ்சல் முகவரியை பதித்தாள். வேகமாக

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

என அவள்  பதித்ததை பார்த்த அவன் லேசான கேலி சிரிப்புடன் "ஒ.. நீ தான் அந்த சந்தியாவா ... 'ஸ்மார்ட் ' சந்தியா?!!!" மனதுக்குள் சொல்லிக் கொண்ட கார்த்திக் அவளிடம் , "ஒ... உங்களுக்கு ஈமெயில் பண்றீங்களா? நான் நீங்க டெலீட் பண்ணிடுவீன்களோ ன்னு பயந்துட்டேன் சந்தியா"

அவன் சொல்லிகொண்டிருக்கும் வேளையில் சந்தியா  மின்னஞ்சலை அனுப்பி விட்டு, சிக்கியிருந்த துப்பட்டாவை வெற்றிகரமாக ஸ்கூட்டியின் பிடியில் இருந்து கைப்பற்றினாள் ஒரு சின்ன ஓட்டையுடன். அவளுக்கு கிழிந்த துப்பட்டாவைவிட அவன் அவளின் பெயரை சொல்லியது அதிர்ச்சி தந்தது.

"ஒட்டு கேட்டான், போட்டோ எடுத்தான், இப்போ என் ஈமெயில் அட்ரஸ் பாத்து பேர் சொல்லி கூப்பிடுறானே?" என நினைத்தாள் சந்தியா.

 

அவள் மெதுவாக எழுந்தவாறே  "என்ன சொன்னீங்க?" என கேட்டாள்.  அவனும் அவளோடே  எழுந்தவாரே மீண்டும் "இல்ல...நீங்க டெலீட் பண்ணிடுவீன்களோ ன்னு பய..." அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே அவள்  ஐபோனில் அந்த புகைப்படத்தின் கீழே  தோன்றிய குப்பை தொட்டி உருவத்தை தட்டி அதை 'டெலீட் ' செய்தாள்.

"ஹ்ம்.. சொல்லுங்க ஏன் நிறுத்திடீங்க" என நக்கலாக சொன்னாள் சந்தியா.

 

கடுப்பான கார்த்திக் "அதான் டெலீட் பண்ணிடீங்களே? அப்புறம் என்ன சொல்ல" என சலிப்புடன் போன் ஐ வாங்க கையை நீட்டிக் கொண்டே மனதுக்குள் "நீ ஸ்மார்ட் ன்னா நான் சூப்பர் ஸ்மார்ட். நீ என் அக்கௌன்ட்ல இருந்து போட்டோவ ஈமெயில் பண்ண காபி இருக்குமே! அதுல இருந்து எடுத்தா போச்சு " என திட்டம் தீட்டினான்.

 

சந்தியாவோ விவரமாக  போன் ஐ அவனிடம் கொடுத்தவாறே  "அப்படியே உங்கள் அக்கௌன்ட்ல "சென்ட் ஐடம்ஸ்"ல உள்ள காபியையும் இப்பவே  என் கண் முன்னாடி டெலீட் பண்ணிடுங்க"

இதை எதிர்பார்க்காத கார்த்திக் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாது இயந்திரமாய் அவள் கோரியதை  நிறைவேற்றினான். அவன் அருகில் நின்று அதை பார்த்த சந்தியா அவன் பாணியிலே அவனுடைய மின்னஞ்சல் முகவரியில் karthik.sadasivam என இருந்ததை பார்த்து   "உங்க பேரு கார்த்திக்? நீ பணக்காரனா? கிளாஸ் ல லாஸ்ட்டா? அடிக்கடி பெயில் ஆவியா? ஏன்னா இந்த மாதிரி பணக்கார பசங்க தான் இந்த மாதிரி முட்டாத்தனமா எல்லாத்தையும் விட்டுட்டு பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்க"

 

திடீரென்று அவள் சரமாரியாக தாக்க திகிலடைந்த கார்த்திக் அவள் சொன்னதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என யோசித்த படி விழிக்க சந்தியா தொடர்ந்தாள் - "நீங்க சினிமா பாக்க மாடீங்களா? நான் சொன்னது அலைபாயுதே டயலாக். ஈமெயில் அட்ரஸ் ல உங்க பேரை பார்த்தவுடனே தோணுச்சு. அதுக்கு இப்படி ஷாக் ஆஹிடீங்க?"

 

கார்த்திக் ஒரு பெருமூச்சுடன் "ஓ..நான் கொஞ்ச வருஷமா சினிமா பாக்கிறது இல்ல. அதுலயும் தமிழ் படம் பாத்து பல வருஷம் ஆச்சு. பாட்டு மட்டும் கேட்பேன். அலை பாயுதே முந்தி பாத்து இருக்கேன். நீங்க சொன்னது பிறகு தான் ஞாபகம் வருது"

 

சந்தியா, "சினிமா பாக்க மாட்டீங்களா? ஆச்சர்யமா இருக்கே? ஏன் Mr. சதாசிவம் ரெம்ப ஸ்ட்ரிக்ட்டா?"

போன்னை தன் பாண்ட் பாக்கெட்டில் வைத்த படி கார்த்திக் "சோ, என் அப்பா பேரையும்  கண்டுபிடிச்சிடீங்க. அவ்வளவு தானா? முக்கியமான விஷயத்தை மிஸ் பண்ணிடீங்களே" கார்த்திக் கேட்டான்.

"வேற எதையும் நான் பாக்கல. நான் சும்மா உங்க பேரை கேட்டு தெரிஞ்சுக்க பிடிக்காம தான் பாத்தேன். அதுவே பெரிய தப்பு பண்ண மாதிரி இருக்கு. ஏன்னா எனக்கு ஒட்டு கேக்குறது, தெரியாம போட்டோ எடுக்குறது, மத்தவுங்க டைப் பண்றது எட்டி பாக்குறது இந்த மாதிரி மத்தவுங்க ஸ்பேஸ்ல துப்பு துளக்குற வேலையெல்லாம் தெரியாது. பிடிக்கவும் செய்யாது." என சந்தியா சூடாக பதில் கொடுத்தாள்.

 

"ஆனா மத்தவங்களுக்கு இடஞ்சலா போன்ல சத்தமா பேச தெரியும், மத்தவங்க ஈமெயில்  அக்கௌன்ட்ட யுஸ் பண்ண தெரியும் ஹப்பா..... நான் செஞ்ச ஒரே தப்பு உங்கள போட்டோ எடுத்தது. கண்ல பாக்கிறத உடனே காப்சர்  பண்ணா தான் அந்த மொமென்ட்ல இருக்கிற பீல் படத்தில் கிடைக்கும்னு கிளிக் பண்ணேன். நான் பூ, மரம் செடி ன்னு நேச்சர மட்டும் தான் பிக்ச்சர் பண்ணுவேன். பொண்ணுங்கள இல்ல. என்னோட கேமரா கையில் இருந்திருந்தா பாக்க்ரௌண்ட்ல உங்கள மங்கலாக்கி இருப்பேன். ஐபோன்னில் அதற்கு செட்டிங்க்ஸ் இல்லாததுனால உங்களை அவாய்ட் பண்ண முடியல. அப்படி எடுத்ததையும் தான் என்ன நம்பாம டெலீட் பண்ணிடீங்க. ஜஸ்ட் ஸ்டாப் டாகிங் அபௌட் இட் எனி மோர்" நிதானமான குரலில் அழுத்தமாக கார்த்திக் சொன்னான்.

 

அவன் சொன்னது சந்தியாவை ஏனோ வருத்தியது. ஏற்கனவே அந்த அழகான படத்தில் தன் முகம் தெரியவில்லையே என்று மனதின் ஓரத்தில் ஒரு ஏக்கம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. தன்னை படம் பிடித்த போது தன் பின்னால் அலைபவன் என கோபம் கொண்ட மனது அவன் விளக்கம் கொடுத்த பின் தன்னை அலட்சிய படுத்துபவன் என ஏக்கம் கொண்டது. பெண்ணின் மனதின் ஆழத்தை அறிந்தவர் எவறேனும் இப்பூவுலகில் உண்டோ?  அப்படி ஒருத்தர் இருந்தால் மட்டுமே அவளின் மனமாற்றத்தின் காரணத்தை சொல்ல முடியும். அந்த ஏக்கம் அவளிடம் எரிச்சலாய் வெளிப்பட்டது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.