(Reading time: 25 - 50 minutes)

 

"மே பி  யு ஆர் அன் எக்ஸ்பெர்ட் இன் போட்டோக்ரப்ஹி.  உங்கள்ட்ட உள்ள க்ரியேடிவிட்டிய மதிக்கிறேன். ஆனாலும் அடிப்படையில் உங்க அட்டிட்யுட் சரியில்ல"  என்றாள் சந்தியா.

"இப்படி புளிய மரத்த விட்டு இறங்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறாளே.. சரி பேசாம வெள்ள கொடிய காமிப்போம்.. லாஸ்ட் ட்ரை" என எண்ணியவாறே கார்த்திக் அவளிடம்

 

"அப்படியா? இட் இஸ் மை ப்ராப்ளம். அதை நான் பாத்துக்கிறேன். பழச பத்தி பேசாம ச்சியர் அப் அண்ட் பி ஹாப்பி சந்தியா! டுடே இஸ் யுவர் பர்த்டே! மெனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஓப் தி டே!" நிதானமாக ஆரம்பித்து உற்சாகமாய் சிரித்த படி முடித்தான்.

"தேங்க்ஸ்" என பதிலுக்கு சிரித்தாள்.

"அப்பாடி ஒரு வழியா புளிய மரத்திலிருந்து இறங்கிட்டா!" என கார்த்திக் நினைத்தான்.

 

"நான் இறங்கி வந்துட்டேன்னு நினைக்குறியா கார்த்திக் ? நான் சண்டைன்னு சொன்னா  நீ சமாதானதுக்கு வழி காட்டுறியா ?" என வெளியில் சிரித்து  உள்ளுக்குள் கொதித்த சந்தியா, தனது கைப்பையில் இருந்து கேட்பர்ரி டைரி மில்க் சாக்லேட்டை அவனிடம் நீட்டி "ப்ரெண்ட்ஸ் ?" என கேட்டாள்,

"பகையாளி குடியை உறவாடி கெடு ன்னு சொல்லுவாங்க. உன்னை அதமாதிரி தான்  டீல் பண்ணணும்" என்று எண்ணிய படியே.

 

கார்த்திக் "எனக்கு சாக்லேட் பிடிக்காது. ஆனா உங்க ப்ரெண்ட்ஷிப்? மிஸ் பண்ண முடியுமா? வாட் எ ப்ளசென்ட் சர்ப்ரைஸ்!" கண்களில் வியப்பு காட்டினான்.

 

அவன் மனதிற்குள் "இப்போ  தான் என் அட்டிட்யுடே சரியில்லன்னு சொன்னா, நான் பர்த்டே விஷ் பண்ணவுடனே ப்ரெண்டா? நீ கண்டிப்பா  நண்பேன்டான்னு என் தோள்ள கைய போட்டு, காலை வாரி விடுற சிவாக்கு தங்கச்சியா தான் இருப்ப. உன்கிட்ட அலெர்ட்டா தான் இருக்கணும்."

 

அவள் கொடுத்த சாக்லேட்டை வாங்கி கொண்ட கார்த்திக்,

"இந்த போக்கே ரெம்ப கிழிந்து இருக்கே. இப்போதைக்குள் நல்லா சேர்த்து பிடிச்சுகொங்க.மேல போன எதாவது வழி இருக்கானு பார்க்கலாம்". என சொல்லியவாறே  அதை சந்தியாவிடம் கொடுத்தான். இருவரும் அந்த கட்டத்தில் மாடியில் இருந்த அந்த அலுவலக வாயிலை எட்டினர்.

இவ்வாறாக இவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் சந்திப்பின் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் அறிமுக படலம் எந்தவித கைகலப்பின்றி சுமூகமாக (?) நடைபெற்று நட்பினில் முடிந்தது.

 

ஆட்டம் - 3

 

மூன்று மாடி கட்டத்தின் முதல் தளத்தில் அமைந்திருந்தது அந்த 'NVision maX Inc" நிறுவனத்தின்  அலுவலக கட்டிடம். அந்த அலுவலகம் இன்னும் திறக்கபடாமல் இருக்கவே, கார்த்திக் சந்தியாவிடம் "ரெம்ப சீக்கிரமாவே வந்து விட்டோம். ஆபீஸ் ஓபன் பண்ண டைம் ஆகும். அது  வரைக்கும் காரிடர் ல தான் வெயிட் பண்ணனும். கால் வலிச்சா அந்த பெஞ்ச்ல கூட உட்காந்துக்கோங்க" என கூறிய படி அலுவலகத்தை ஒட்டி இருந்த இருக்கையை காண்பித்தான்.

சந்தியா,  "சோ, நீங்களும் இண்டர்வியூக்கு தான் வந்தீங்களா?"

"ஆமா.. 9:30க்கு தான இண்டர்வியூ? நீங்க என்ன எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டீங்க?" என கேட்டான் கார்த்திக்.

"நான் மட்டுமா? நீங்களும் தான் சீக்கிரம் வந்திருக்கீங்க." என்றாள் சந்தியா புருவத்தை உயர்த்தியபடி.

 

"ஆமா. என் ப்ரெண்ட்ட மீட் பண்ணலாம்னு சீக்கிரம் கிளம்பி வந்தேன். அது முடியல.  சரி வீட்டுக்கு போயிட்டு வரணும்னா இன்னொரு ஒரு மணி நேரமாகும். இன்னைக்கு சண்டேன்னு நினைவு இல்லாம, ஆபீஸ் ஓபன் பண்ணி இருப்பாங்கன்னு நினைச்சிட்டு இங்க வந்துட்டேன் " என்றான் கார்த்திக்.

 

"ஆமா.. இருந்து இருந்தும்  சண்டேல போய் இண்டர்வியூ வச்சு இருக்காங்க. எல்லா பர்த்டே க்கும் காலன்காத்தால  குளிச்சு கோவில் போயிட்டு வந்து எங்க அம்மாவின் கைமணத்தில் சிக்கன் பிரியாணிய கட்டு கட்டுன்னு கட்டுவேன். MBA படிக்கிறப்ப கூட பர்த்டேன்னா எங்க பாட்டி ICU ல அப்படி இப்படின்னுட்டு காலேஜ்க்கும் ஹாஸ்டல்லுக்கும் கட் அடிச்சிட்டு அம்மா சிக்கன் பிரியாணிய மிஸ் பண்ணவே மாட்டேன். இப்போ தான் பர்ஸ்ட் டைம்மா மிஸ் பண்றேன். ஹும் நினச்சாலே பசி எடுக்குது." என்றாள் சந்தியா.

அதை பார்த்த கார்த்திக் "சரியான சாப்பாட்டு ராமியா இருப்பா போல. கொஞ்சம் கூட இண்டர்வியூ டென்ஷன் இல்லாம சாப்பாட்ட பத்தியே யோசிக்கிறாளே" என நினைத்தான்.

அவன் அவளிடம் "சந்தியா, நீங்க அப்போ சாப்பிடலையா?"

 

அவள் "நான் சாப்டேன் ஆனா, பிரியாணி சாப்பிடல. கோவிலுக்கு போயிட்டு அப்படியே இங்க வந்துட்டேன். USல இருந்து ப்ரண்ட் 8 மணிக்கு மேல கால் பண்றேன்னான். முக்கியமான டிஷ்கஷன். வீட்ல வைச்சு பேச முடியாது. சரி எப்படியும் சண்டே மார்னிங் யாரும் ஆபீஸ் பில்டிங்ல இருக்க மாட்டாங்க பேச வசதியா இருக்கும்ன்னு ஒரு அனுமானத்தில் இங்க வந்தேன்" என்றாள்.

 

கார்த்திக், "சரி, இண்டர்வியூ க்கு தயார் பண்ணிடீங்களா சந்தியா?"

"இண்டர்வியூ எல்லாம் எனக்கு சாதரணமப்பா . நாங்கல்லாம் " என சந்தியா  வடிவேல் மாதிரி சொல்ல

வந்த சிரிப்பை அடக்கி கொண்டு "நாங்கெல்லாம் ...." என அவளது வசனத்தை தொடர தூண்டினான் கார்த்திக்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.