(Reading time: 25 - 50 minutes)

 

"நாங்கெல்லாம் அப்போவே அந்த மாதிரி இப்போ சொல்லவா வேணும்?" சொன்னாள் சந்தியா.  

அவள் சொன்ன தொனியில் கார்த்திக்கும் சிரிப்பு வரவே இருவரும் சிரித்தனர்.  அந்த சிரிப்புடனே "நீங்க எப்படி? " என சந்தியா கேட்க

 

"ம்ம்ம் சமாளிக்கிறது கஷ்டம் தான்" அவன் சொல்லிவிட்ட பதிலில் மீண்டும் சிரித்தனர்.

 

அப்போது பாம்பு சீறுவது போல ஒலி எழுப்பி அவளுக்கு வந்த  குறுஞ்செய்தியை வாசிக்க தூண்டியது அவள் அலைபேசி. கட்டளைக்கு அடிபணிந்தவலாய்  ஒருநொடி வாசிப்பை தொடர்ந்து பட படத்த அவள் விரல்கள் தடை தாண்டி ஓட்டம் போல தாவி தாவி குதித்து கொண்டிருந்தது, அலைபேசியின் 'நம்பர் பாட்' எனும் சின்ன எல்லைக்குள் குதிக்கதானே முடியும்! ஓடுவதற்கு இடம் உண்டா என்ன?"

 

அது ஒரு புறம் நடக்க, அவள் பேச்சை தொடர்ந்தாள். "உங்கள பார்த்த பிரெஷேர் மாதிரி தெரியலயே?"

 

அவன் இல்லை என உதட்டோரம் ஒரு ரகசிய சிரிப்புடன்  தலையாட்டினான்.  

 

அதை கவனித்த சந்தியா "இவன் ஏன் கள்ளத்தனமா சிரிக்கிறான். ஒரு வேளை fake ஓ?  ( முன்அனுபவம் உண்டு என பொய் சொல்லி வேலை தேடுபவர்கள்) கார்த்திக் நீ என்கிட்ட வசமா மாட்டின. " தனது சிறிய மூளையை கசக்கி அந்த அரிய உண்மைய கண்டுபிடித்தாள்.

 

சந்தியா அலைபேசியில் குறுஞ்செய்தி பறக்க விரல்களால் கட்டளையிட்டு  அவனை நோக்கி, "நீங்க மார்க்கெட் ரிசெர்ச் அனலிஸ்ட் டா?"

 

கார்த்திக் யோசனையோடே "ஹ்ம்... அப்படியும் சொல்லலாம்"

அதற்கு சந்தியா "அப்போ நீங்க fake தான?"

கார்த்திக், அவள் கேள்வியை சற்றும் எதிர்பாராது ஒரு நிமிடம் திகைத்து, "என்ன fake?"

 

"இந்த சந்தியா யாரையும் பாத்தவுடனே எடை போட்டிடுவா. கும்கி படத்தில ஒரு கோவில் யானை வைச்சுக்கிட்டு கும்கி யானைன்னு ஏமாத்துற மாதிரி, நீங்க பொம்மை விக்கிறது, சரோஜா தேவி சோப்பு டப்பா விக்கிறது அப்படி இப்படின்னு எதாவது மார்க்கெட்டிங் ஜாப் பாத்துட்டு இங்க  MR analyst  வேலைக்கு இண்டர்வியூ க்கு வந்து இருக்கீங்க"

 

அவன் அவள் சொல்வது புரியாமல் விழித்தான். அதைப் பார்த்த சந்தியா,

"இப்படி  திரு திருன்னு முழிச்சா  ஊத்திக்கும். இண்டர்வியூக்கு பாடி லாங்குவேஜ் ரெம்ப முக்கியம்"

 

அதை கேட்ட கார்த்திக்கிற்கு "எனக்கேவா? திருநெல்வேலிக்கே அல்வாவா .. திருப்பதிக்கே லட்டா?" என நினைத்து சிரிப்பு வந்தது.

 

"அட பார்ரா... சொன்னவொடனே கற்பூரம் மாதிரி கப்புன்னு கப்புன்னு பத்திகிட்டேங்களே கார்த்திக்! என்ன ஒரு ஒரு ஸ்மைல். என்ன தான் fakeஆ இருந்தாலும் இப்படி தான் கண் மாதிரி ஸ்டாரங்கா நிக்கணும். ஆனா, MR analyst நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண வேல இல்லப்பா. நீங்க நெறைய ஹோம் வொர்க் பண்ணி இருக்கணும். சரி விடுங்க கடைசி நிமிசத்தில் எதுக்கு சங்கரா சங்கரா ன்னுட்டு " என சொன்ன சந்தியா மேலும்,

"fake ரெசூமே போடுரவன் இண்டர்வியூ அப்ப  பயப்பட படாது. இண்டர்வியூ ஆப்பு ஆகலேன்னா தான்   பயப்படணும்." என்றாள்.

 

"கேக்குறது கார்த்திக்குன்னா என்ன வேண்ணாலும் சொல்லுவீங்களா சந்தியா?" என்றான் கார்த்திக்

"உங்களுக்கு ப்ரீ அட்வைஸ் கேட்டா கேளுங்க கேக்காட்டின போங்க" சந்தியா தொடர்ந்தாள்.

 

கார்த்திக் "இப்படி கேப் விடாம பேசினா எப்படி தான் கேக்காம போக... சே" மனதுக்குள் அலுத்துக்கொண்டே அவள் பிரசங்கத்தை கேட்டான்.

"என்ன கார்த்திக். இதுக்கே கன்னகட்டுதா? இன்னும் எவ்ளோ இருக்கு? நீங்க 'கும்கி' படம் பாத்திருகீன்களா ?"

"இல்ல" இது கார்த்திக்

 

"ஒரு வைல்ட் லவ் ஸ்டோரி  எப்படி இப்படி மிஸ் பண்ணீங்க? சரி.. சரி  நீங்க bachelor தான?" சந்தியா கேட்க

"ஆமாம்" வேண்டா வெறுப்பாய் தலையாட்டினான்.

 

"உங்கள மாதிரி 'fake ரெசுமே' போட்டு வேல தேடும் பாச்சிலருக்கு" என சொன்ன சந்தியாவை இடைமரித்த கார்த்திக்

 

“என்ன சும்மா சும்மா  'என்ன மாதிரி?' 'என்ன மாதிரி? ன்னுட்டு  நான் ஒன்னும் fake இல்"

 

அவன் சொல்லவந்ததை தடுத்த சந்தியா 'அதான் அப்போவே ஒத்துகிட்டனே கார்த்திக் நீங்க கற்பூரம் மாதிரி ன்னு.. நீங்க இண்டர்வியூல இப்படியே  மைண்டைன் பண்ணா போதும். இப்பவே  உங்க கடமை உணர்ச்சிய காட்டி என்னோட ப்லொவ தடுக்காதீங்க. எனக்கே எப்போவாவது தான் இப்படி எல்லாம் வரும்'

 

'ஐயோ ... கடவுளே' தலையில் அடித்து கொண்டான் கார்த்திக். 'எப்போவாவதா? வந்தததுல இருந்து நான் ஸ்டாப்பா  ஆடாம ஆடிகிட்டு இருக்காளே. ' உள்ளுக்குள் புழுங்கினான். பார்த்து சில நேரமே ஆனா பெண்ணிடம் முகத்திற்கு நேரே திட்டி காய படுத்த மனது வரவில்லை. அவனுக்கு தெரியுமா என்ன கூடிய விரைவில் அவன் பொருத்தது போதும் என  பொங்கி எலப்போவது?

 

சந்தியா அவள் கண்டறிந்த அந்த கும்கி படத்தின் அரிய கருத்தை சொல்லிவிடும் ஆர்வத்தில் விடாமல் தன் பிரசங்கத்தை தொடர்ந்தாள். "Fake க்கும் பிகரும் ஒட்டவே ஒட்டாது என நம்ம பிரபு சாலமன் சொல்லி இருக்காரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.