(Reading time: 25 - 50 minutes)

கார்த்திக் "வாட் ?" என ஒன்றும் புரியாமல் விழிக்கவும், "குட் கார்த்திக்.. இப்படி ரியாக்ட் பண்ணினிங்கனா தான் மேல சொல்ல விறுவிறுப்பா இருக்கும். ஆனா இண்டர்வியூ.. பாடி லேன்குவச்.. என் அட்வைஸ்.. மறந்துடாதீங்க!.. ஹ்ம்ம்.. இப்போ கும்கி படத்துக்கு வரலாம். அந்த கதையின் கருத்து என்னன்னா வேல வேணும்ன்னு fake போடலாம் .. ஆனா பிகரு வேணும்னு fake போடுறது உங்க தலைல நீங்களே துண்ட போடுற மாதிரி. எதுவுமே மிஞ்சாது! பிகரும் தான். இந்த படத்த பாத்தீங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா புரியும்.. "

 

கார்த்திக் மேலும் கடுப்புடன் "சோ வாட்? இப்போ எதுக்கு தேவ இல்லாம மொக்க போட்டுகிட்டு இருக்கீங்க சந்தியா?"

 

"கார்த்திக், என்னது இது மொட்டை தாத்தா குட்டைல போன மாதிரில கேக்குறேங்க. இப்படி என் அரிய கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் ட்வீட் பண்ணிருந்தேனா லட்சகணக்கான பேரு பாலோ பண்ணி இருப்பாங்க... பேஸ்புக்ல போட்டு இருந்தேனா அத்தன பேரும் லைக் போட்டு இருப்பாங்க...." என சந்தியா விடாத மழையிலும் அடாது ஒலித்து கொண்டிருந்தாள்.

 

ஏற்கனவே பொங்கி கொண்டிருந்த கார்த்திக், "லுக் சந்தியா நீங்க  ட்வீட் பண்ணுவீன்களோ ஸ்டேடஸ் அப்டேட் பண்ணுவீங்களோ ஐ டோன்ட் கேர்  ..  ஜஸ்ட் லீவ் மீ .. மை  ஈயர்ஸ் ஆர் ப்ளீடிங்!!"

சந்தியா மேலும் தொடர்ந்தாள் "எப்படி ட்வீட் பண்ணுவேன்.. எப்படி பேஸ்புக் பார்ப்பேன் ..  எங்க அப்பா தான் எனக்கு  'ஸ்மார்ட் போன் ' வாங்கி கொடுக்கலையே! அப்படியே கொடுத்தாலும் இந்த மாதிரி டைமிங்கா தோன்றுவதை எல்லாம் அப்டேட் பண்ண 3g.. 4g..  பிளான் எல்லாம் வேற வேணுமே?. அது எதுக்கு தெண்ட செலவு? அதான் நீங்க இருக்கீங்களே?"

 

கார்த்திக், "ஓ..அதுக்கு தான் பேஸ்புக் நான் பாக்கவே மாட்டேன்...இட் இச் ஜஸ்ட் எ வேஸ்ட் ஓப் டைம் ன்னு உங்க ப்ரெண்ட் யாதவ்ட்ட சொன்னீங்களா?"

"ஹும்ம் .. நான் மத்தவங்ககிட்ட பேசுறப்ப  உங்க ஈயர்ஸ் ஆர் ஹியரிங்.  உங்க கிட்ட நேர்ல வந்து பேசினா உங்க ஈயர்ஸ் ஆர் ப்ளீடிங்கா? உங்கள மாதிரி வேல தேடுறவங்களுக்கு என்  அட்வைஸ்களை அள்ளி விட்டா, கோவில்ல ஒடைக்கிற தேங்காய் சில்ல பொறுக்கிற மாதிரி அவன் அவன் ஓடி வந்து பொறுக்குவான். நீங்க அதன் மதிப்பு தெரியாம பேசுறீங்க."

 

கோவில்ல தேங்கா சில்லு பொறுக்கிறவன் சொன்னவுடனே கார்த்திக்கிற்கு மேலும் கடுமையாக கோபம் கொப்பளிக்க அவளை ஒருமையில் விளிக்க ஆரம்பித்தான் "மைண்ட் யுவர் வோர்ட்ஸ் சந்தியா. நான் உன்கிட்ட அட்வைஸ் கேட்டேனா? "

 

"நான் உங்கள போட்டோ எடுக்க சொன்னேனா? " - சந்தியா

 

"உன்னை யாரு எடுத்தா? லைட் எபக்ட்க்காக எடுத்தேன்" - கார்த்திக்

"லைட் எபக்ட்ல தக தகன்னு தங்க சிலையாட்டும் ஜோளிச்சேன்ல  அதுக்குதானே?" - சந்தியா

 

கார்த்திக் கோபத்துடன் "இல்ல லக லகன்னு கன்னி பேய்யாட்டும் முழிச்சே"

 

"பேயோ.. பிசாசோ.. லைட்டிங்  எபக்ட்டால  நீங்க என்ன எடுத்த போட்டோ எப்படியோ  அப்படிதான் என்  மெல்ட்டிங்  ஹார்ட்டால  நான் உங்களுக்கு  கொடுத்த அட்வைஸ்"  என கலங்காமல் சொன்னாள்.

 

"நேத்து மிட்நைட்ல நல்ல ஆட்டமா சந்தியா?" கார்த்திக் கேட்க

 

"ஆமா! எப்படி கரெக்டா கெஸ் பண்ணேங்க?" அவள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பற்றி தான் கேட்கிறான் என ஆர்வத்துடன் சந்தியா வினவ

 

"இதுல கெஸ் பண்ண என்ன இருக்கு? நடு ராத்திரில தான  பேய் ஆட்டம் போடும். ஆனா நீ ஏன் விடிஞ்ச பிறகும் விடாம முழுவீச்சுல  இருக்க? " என்றான் கார்த்திக்.

அதற்கு சந்தியா "நீங்க முன்ன பின்ன பொண்ணுங்களையே  பாத்தது இல்லைன்னு நல்லா தெரியுது  கார்த்திக். அப்படி பார்த்து இருந்தீங்கன்னா தெரியும்  நான் எவ்ளோ அழகன்னு. ஹூம்.. நீங்க எடுத்த போட்டோலே தெரியுதே உங்க லட்சணத்தை! பூவ, போக்கேவ, துப்பட்டாவ ஏன் தரையை கூட விடாம வளச்சு  போட்டோ எடுக்குறீங்க. இந்த அழகான முகத்தை எடுக்க தெரியல! சரியான ..." சந்தியா அடி மனதின் ஓரத்தில் அந்த அற்புதமான படத்தில் தன் முகம் தெரியவில்லையே என்ற ஏக்கத்தை வாய் தவறி வெளியிட்டாள்.

 

"ஹே.. வெயிட்.. என்னை என்ன மாப்ளை வீட்டுக்கு போட்டோ அனுப்புறதுக்காக உன்ன  போட்டோ எடுக்க வந்த போடோக்ராபர் ன்னு நினசிட்டியா? முதல்ல ஏன் போட்டோ எடுத்த எடுத்தன்னு கேட்ட... இப்போ ஏன் என்னை நல்லா எடுக்கலைன்னு கேக்குற? இது எல்லாம் உனக்கு ஓவரா இல்ல எது எப்படியோ...என் கண்ணுக்கு அழகா தெரியுரத மட்டும் தான் நான் போட்டோ எடுப்பேன். அப்படியே எடுத்தாளும் உன் முகம் எல்லாம் போட்டோல வராதம்மா!. எத்தன பேய் படம் பாத்து இருப்பேன்?!" என்றான் கார்த்திக் காரமாக.

"இப்படி பேய்ப் படம்மா  பாக்கிறதுனால தான் உங்களுக்கு அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியுது! லவ்வு  ரொமான்ஸ்ன்னு பாத்தீங்கனா தெரியும் ஒரு பொண்ணுட்ட எப்படி பழகணும்னு தெரியும். உங்களுக்கு கார்த்திக் ன்னு பேரு வச்சதுக்கு பழனின்னு பேரு வச்சிருக்கலாம்.

 

"எதுக்கு?" என கார்த்திக் கேட்க

"ஏன்னா அப்போ தான "பழம் நீயப்பா... ஞான பழம் நீயப்பா ..." ன்னு பாட பொருத்தம்மா இருக்கும் என்றாள் சந்தியா.

கார்த்திக் இதை கேட்டவுடன் அலுத்து கொண்டவனாய்  "உன்னை பேய் ன்னு சொன்னா அவுங்க பழமா? அப்பா ....நான் மட்டும் பிரதமரா இருந்தா சந்தியா உனக்கு தகவல் ஒலிபரப்பு துறைய தான் கொடுத்து இருப்பேன். உனக்கு மைக், மீடியா என எதுவுமே தேவ இல்ல. உன் வாய் ஒன்றே போதும்"

 

சந்தியா " ரெம்ப  தேங்க்ஸ் கார்த்திக். ஆனா நான் உங்களுக்கு அவ்ளோ பெரிய போஸ்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். நம்ம கேப்டன் சாருக்கு உதவியா எதிரி நாட்டு ரகசியங்களையும் டெரர்ரிஸ்ட் சதி வேலைகளையும்  ஒட்டு கேட்டு சொல்ற வேலைய கொடுத்திருப்பேன்."

கார்த்திக்கிற்கு அவள் சொன்னது சிரிப்பூட்டியது. அப்படி சிரித்து விட்டால் அப்புறம் அவ்வளவு தான் என நினைத்து கொண்டே "அப்படியே உன்னை  டெரர்ரிஸ்ட் ன்னு  சொல்லி ஸெல்ப் ப்ரொமோட் பண்றியா? நீ டெரர் இல்ல ஹோரர்!"

 

சந்தியா உடனே "ஹூம்... ஒரு fake ரெசுமே வைச்சு வேல தேடுரீங்கலேன்னு" அவள் மறுபடியும் தொடங்க அவளை மேலும் பேச விடாமல் தடுத்தான் கார்த்திக். அப்புறம்?விட்டால் அத சொல்லியே  கஜினி படத்தில் அசின் சூர்யாக்கு உள்ளாடை விளம்பரத்துக்கு மாடல்லா வேல வாங்கி கொடுத்த மாதிரி இவளும்  எடா கூடமா செய்திட கூடாதே! தான் யாருன்னு சொல்ல வேண்டியதுதான் என முடிவு செய்தவனாய்  "சட் அப்  சந்தியா. நான்  யார்ன்னு தெரியுமா?" என சொல்லி அவன் செய்த ஒரே தவறு அடுத்த வாக்கியம் ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன இடைவெளி விட்டது தான்.

 

நம்ம சந்தியா சைக்கிள் கேப் ல ஆட்டோ ஓட்டுவாளே? விடுவாளா? "நீங்க சொல்லாமலே நீங்க ஒரு பழுத்த பழம்னு தெரியுது. உங்கள இப்போ நான் தெரிஞ்ச அளவுக்கு இல்லனாலும் இந்த கம்பெனிய ஓரளவுக்கு நல்லாவே   தெரியும். இது  முளைச்சு இன்னும் முழுசா ரெண்டு வருஷம் கூட ஆகல. இங்க வந்து வேல பாக்க ஹர்ட்வர்ட் ல படிச்சு பத்து வர்ஷ எச்பீரியன்ஸ்ட் வருவாங்களா என்ன? இவங்க கொடுக்கிற சாலரிக்கு ஒரிஜினல் ஒன்னும் வராது .. ஒன்லி செராக்ஸ் தான் வருவாங்க - உங்களை மாதிரி!" என்று சொல்லியவாறே  புருவங்களை உயர்த்தி லேசாக தலைய சாய்த்து மெல்லிய குரலில் ரகசியமாய்  "என்ன? உங்கள யார்கிட்டயும் போட்டு கொடுத்துடுவேன்னு பயமா?" அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கியவாறே!

 

அவள் பேசப்  பேச கோபமாய் கொந்தளித்து கொண்டிருந்த அவன், அவள் கடைசியாக குழந்தை போல சொன்ன இரகசிய பேச்சில் லேசாக தணிந்ததான். ஆனாலும் இன்னும் அவன் கண்களில் அனல் வீசிக் கொண்டு தான் இருந்தது!

அவன் சினந்த முகமும் கண்களும் சந்தியாவிற்கு தான் ஏதோ தவறாக பேசி விட்டோம்  என்பதை தெளிவாகவே உரைத்து கொண்டிருந்தது. இந்த  நிறுவனத்தை பற்றி சொன்னதற்கு கோபப்படுகிறான் என்றாலும் 'அதற்கு ஏன் அப்படி ஒரு கோபம் வர வேண்டும்?'  என்ற  எண்ணம் அவளுக்கு தோன்றத்தான் செய்தது. ஆனால் அவளால் அதற்க்கு மேல் யோசிக்க முடியவில்லை

.

யோசிக்க எப்படி முடியும்? அவள் மூளையை  சில நொடிகள் இளைப்பாற வைத்து விட்டு அவள் மனதள்ளவோ அவளை ஆட்சி செய்து கொண்டிருந்தது. அது அவன்  சினத்தை பார்த்து அஞ்சவில்லை!   மாறாக அதை ரசித்தது. "சும்மா சொல்ல கூடாது, கார்த்திக் கோபத்தில் தான் எத்தனை அழகு! உங்கள இதுக்காகவே  உசுப்பேத்தி உசுபேத்தி ரசிக்கணும்  போல  இருக்கே" என அது தன்  வாய்க்கு வந்தவற்றை  உளறி க்கொண்டிருந்தது! மனம் போன போக்கில் நிஜமாகவே வாயை திறந்து  உளற ஆரம்பித்தாள் சந்தியா.

 

"சும்மா சொல்லக் கூடாது கார்த்திக்  கோபத்தில் தான் எத்தனை அழ...." என்ற பின் சுதாரித்த அவள் மூளை நொடிபொழுதில் ஆட்சியை பிடித்து மனதை தன் வசத்திற்கு கொண்டு வந்தது. சுறுசுறுப்பாக இயங்கிய அவள் மூளை துரிதமாக ஒரு சமாளிப்பு வசனத்தை தயார் செய்து வாயை இயக்கியது. இவை எல்லாம் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிக்க, லேசான தடுமாற்றத்துடன் அவள் தனது வசனத்தை தொடர்ந்தாள். "அழ... அழகாய்  ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி கண்கள் சிவக்க பாத்து நம்ம கேப்டன் விஜயகாந்த் சாரையே மிஞ்சிடீங்க?!!!" என ஏற்ற இறக்கத்துடன் கூறி ஒருவாறு சமாளித்தாள்.

அவனோ சற்றும் சலனமின்றி இருகிய முகத்துடன் அவளையே  பார்த்த படி இருப்பதை பார்த்த அவளுக்கு "ஹூம்... இவன் என்ன எரும மாட்டில் மழை பெஞ்ச மாதிரி அப்படியே நிக்கிறானே.. எப்பா கார்த்திகேயா எதாவது ரியாக்ட் பண்ணப்பா " என அவளுக்குளே எண்ணும் பொழுது அவன் கடுமையான் குரலில் "அப்படிப்பட்ட கம்பெனில நீ ஏன் வேல பாக்கணும்னு நினைக்குற?"

அவன் கேட்டு முடிக்கும் பொழுது அவள் அலைபேசி  "மீட் மை ...மீட் மை பாய் ப்ரெண்ட் .. " என அழைக்க தன் அலை பேசியில் அழைப்பவரை பார்க்க  பார்வையை திருப்பியவளை கார்த்திக், "அன்ச்வர் மீ சந்தியா " என மிரட்டிவது போல  கட்டளையிட்டான்.

 

அவனை பார்த்த சந்தியா "எதுக்கா..... சாப்பிடுறதுக்கு " என தோளை குலுக்கி  ஒரு வரியில்  நிதானமாக  விடை அளித்து விட்டு அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்தாள். "ஹே வினோத் ஹோல்ட் ஆன் போர் எ மினிட்" என 'mute' பட்டனை அழுத்தினாள்.

 

கார்த்திக்கை நோக்கி "கார்த்திக், இந்த காலுக்காக தான் சீக்கிரம் வந்தேன். என்னால இதை  மிஸ் பண்ண முடியாது. நாம அப்புறம் பேசலாம்"  என உறுதியான குரலில் மிடுக்காக சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பாராமல் தன் ஒரு  கையில் கைப்பையையும் அந்த பௌக்கே வையும்  அணைத்தவாரே மறு கையில் அலைபேசியின்  'mute' ஆப் செய்து அதை காதில் வைத்தவாறே  நடக்க ஆரம்பித்தாள்.  அந்த கட்டிடத்தின் மறு பக்கத்தை நோக்கி நடந்தவாரே   "ஹே வாத்து.. நேத்து எப்படி போச்சு?"  என மறு முனையில் பேசிய வினோத்திடம் பேச்சை தொடர்ந்தாள்.

 

கார்த்திக்கின் கோபத்தை அவள் அவ்வளவு சாதரணமாக எதிர்கொண்டது அவனக்கு வியப்பாக இருந்தது. அவள் அவன் கண் பார்வையிலிருந்து அகலும் வரை அவளையே வெறித்து  பார்த்து கொண்டிருந்த அவன் "appetizer மாதிரி ஒரு பதில் சொல்லிட்டு மெயின் கோர்ஸ் அப்புறம்  என்பது போல போறாளே? எப்பா.. இவ கூட பேசி நானும் சாப்பிடுறதயே நினைக்குறேனே?!!...உனக்கு எதிரி உன் வாய் தான் சந்தியா. நீ இவ்வளவு பேசியதுக்கு உன்னை என்ன செய்றேன் பாரு" என தொலைக்காட்சி தொடர் நாடக வில்லி தோரணையில் கருவிக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, இன்னும் சற்று நேரத்தில் அவளிடம் சிக்கி திணற போவது தெரியாது!

 

இவ்வாறாக கார்த்திக்-சந்தியாவின் வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த முதல் சந்திப்பின் முதற்கட்ட பேச்சுவார்த்தை  நட்பில் ஆரம்பித்து விவாதத்தில் முடிந்தது. அதுவாக எப்படி முடியும்? சந்தியாவின் நண்பன் வினோத் என்பவரின் புண்ணியத்தால் நேரம் குறிப்பிடாமல்  ஒத்தி வைக்கப்பட்டது. இவர்களின் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை எப்போது? எப்படி தொடரும்? சும்மாவா சொன்னார்கள் ரோஜாக்கள்  காதல் சின்னம் என்று - அவை தான் இவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை உருவாக்க போகிறது!

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 1       

Go to Episode 3  

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.