(Reading time: 24 - 47 minutes)

ங்கு காரில் "காதி, அப்படி என்ன அவ ஹெல்ப் பண்ணவான்னு நீ இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற?" என்றாள் மது, கார்த்திக் சொல்வதை கேட்டு சமாதானமடைந்தவளாய்.

கார்த்திக் மதுவிடம், "சந்தியா ரெம்ப புத்திசாலி மது. ஒரு முட்டாளை வச்சு வேல வாங்குறது எவ்வளோ கஷ்டமா அதை விட கஷ்டம் புத்திசாலிய வேல வாங்குறது. அவங்களுக்கு பொறுப்பை தான் கொடுக்கணும். வேலைய கொடுக்க கூடாது. "

"நீ கவனிச்சயான்னு தெரியல.....மஹாவால கொஞ்ச நாளா வேலைல கான்சென்ட்ரேட் பண்ண முடியல. டெலிவரிக்கு பிறகு அவங்க குழந்தைய மாமியார்கிட்ட விட்டுட்டு வர்றாங்க. அதுதான் ரீசன்னான்னு தெரியல. அது அவங்க சொந்த விஷயம். ஆனா எண்டு ஆப் தி டே நமக்கு வேல நடக்கணும். அவங்க கூட இன்னொரு ஆளு வொர்க் பண்ணா நமக்கும் வேல நடக்கும். அவங்களுக்கும்  அது ஈசியா இருக்கும். இன்னொரு ஆளை போட்டு இருக்காங்க நாம சரியா வேல பாக்கலையோன்னு பயமும் வரும்... "

"சரி.... நீ சொல்கிற மாதிரி இன்னொரு ஆளை போட்டா போச்சு. அதுக்கு எதுக்கு சந்தியா தான் வேணும்ன்னு அடம்பிடிக்கிற?" என்றாள் மது.

“போன வருஷம் பாங்காக்ல ஒரு கான்பரன்ஸ்ல காலேஜ்  ப்ரொபஸர் ஒருத்தரோட  ரிசெர்ச் பேப்பர் பார்த்து அசந்துட்டேன். மலேசியால நிரஞ்சனோட சேர்ந்து நாம   பண்ற சாப்ட்வேர் ப்ராடக்ட்ல அந்த ப்ரொபஸர் சொன்ன  விசயங்களை சேர்த்தோம்ன்னா அதை பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளோட ப்ராடெக்ட்ஸ்சை சவால் விடும் அளவுக்கு கொண்டு வரலாம். ஆனா அதை பத்தி தெரிஞ்சவங்க கிடைக்கிறது கஷ்டம். அதனால அந்த ஆசையை நானும் நிரஞ்சனும் அப்படியே விட்டுடோம். “

“கொஞ்சம் நாள் கழித்து...ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி,  நம்ம ராஜ் பெரிப்பாகிட்ட எதேட்சையா என்னோட ப்ரொபெஷன் (தொழில்) ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (புள்ளியியல்... ஒரு வகை கணிதம்)பேஸ் பண்ணதுன்னு சொன்னப்போ அவர் சந்தியாவை பத்தி சொன்னாரு. அவ  மெடிக்கல் காலேஜ்ல கிடைச்ச சீட்டை வேண்டாம்னு உதறிட்டு ஸ்டேடிஸ்டிக்ஸ்  எடுத்து படிக்கிற அளவுக்கு அதில்  ஆர்வம் அதிகம்னும், அவ MBA  ப்ராஜெக்ட் வொர்க் கூட அது சம்மந்தமா தான் தேடிகிட்டு இருக்கான்னும் சொல்ல, அவளோட ரெஸ்யூமை எனக்கு அனுப்பி வைக்க சொன்னேன். ஆனா அப்பா கான்சர்க்கு கீமோ  ட்ரீட்மெண்ட்..... பாரின் ட்ரிப்புன்னு....  எல்லாம் அடுத்தடுத்து வர அதை மறந்தே போயிட்டேன். ஒரு நாள், ஏதோ தேடுறப்போ அவளோட ரெஸ்யூம் என் கண்ணுல பட்டது. அதுல ஒரு சர்ப்ரைஸ்..........கெஸ் வாட்?.... பாங்காக்ல நான் பாத்த ரிசர்ச் பேப்பர் இவளும் இவ பிரண்டும் அவங்க காலேஜ் ப்ரொபசர் கூட கோ ஆத்தர் பண்ணது....அதாவது  அவர் கூட இணைந்து செய்தது” என்று சொல்லும் போதே அவன் முகம் பிரகாசமானது.

அதை பார்த்த மது “ஐ டோன்ட் பிலீவ் திஸ் காதி. எனக்கு என்னமோ அவ ரேசுயூம்ல ஏதாவது தில்லு முல்லு பண்ணி இருப்பான்னு தோணுது.”

“இல்ல மது. நான் அந்த ப்ரொபசர் கூட பேசி கன்பர்ம் பண்ணிட்டேன். சந்தியா சாதாரண ஆள் இல்லை மது. ” என்றான் கார்த்திக்.

“நீ ஏன் என்கிட்ட  முன்னாடியே அவளை பத்தி சொல்லலை காதி?” என்றாள் மது.

“என்னதான் அந்த ப்ரொபசர் அவளை பற்றி சொன்னாலும் ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு அந்த அளவுக்கு எக்ஸ்பெர்ட்டா இருக்க முடியுமான்னு என்னால நம்ப முடியல. அதான் அவளை பற்றி உன்கிட்டயோ இல்ல நம்ம ரெக்ரூட்மென்ட் டீம் கிட்டயோ எதுவுமே சொல்லாம மத்த காண்டிடேட்ஸ் மாதிரியே எக்ஸாம், குரூப்  டிஸ்கஸன் எல்லாம் நடத்தி அவ பெர்பார்மென்ஸ கிர்ஸ்டல் க்ளியரா  தெரிஞ்சிக்கிட்டேன்” என்றான் கார்த்திக்.

“ஓ... அதுக்கு தான் அவளுக்கு மட்டும் எல்லா குஸ்டின்ஸ்ஸும் நீயே தயார் பண்ணி கொடுத்தியா?.. இருந்தாலும் என்கிட்ட நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.” என்றாள் மது.

“எனக்கு அவளை பத்தி அன்பையாஸ்ட் ரிசல்ட் வேணும் மது அதான்” என்றான் கார்த்திக்.

“ஹும்.....அவளுக்கு திறமையை விட நாம அழகா  இருக்கோம்கிற  திமிரு தான்  ஜாஸ்தியா இருக்கு.” என்றாள் மது.

“அவளா அழகு?.....” என்றான் உதட்டை சுழித்த படி ஏளனமாக.  “டேய்... அவளை நல்லா சைட் அடிச்சிட்டு சும்மா நடிக்காத. எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு.” என்றாள் அவள்.

“காது குத்தா... ஓ.....டாட் மடியில கைய சூப்பிகிட்டே அழுதியே... அதை எப்படி மொட்டை மறக்க முடியும்?” என்று அவன் மதுவை கிண்டலடித்தான். மதுவிற்கு ஓரளவிற்கு விவரம் தெரியும் வயதில் நேர்த்திகடனுக்காக அவளின் பாட்டி வலுக்கட்டாயமாக  மொட்டையை போட்டு விட, சூர்யாவும், கார்த்திக்கும் இது தான் சாக்கு என “மொட்டை மொட்டை” என்று சீண்டி அவளுடன் வம்பிழுப்பர். வளர்ந்த பின்பும் கூட அந்த அடை மொழி  எப்பொழுதாவது புழக்கத்திற்கு வரும். வழக்கம் போல கடுப்பான மது, “ஏன் பேச்சை மாத்துற காதி...உண்மைய சொல்லு.... அவ மேல உனக்கு லவ்வா  …...க்ரஷ்ஷா..... “ என்று வெளிப்படையாக கேட்டாள் மது.

அவன் மனது  “சந்தியா மேல லவ்?... கண்டிப்பா இல்லை…...” என்று மறுத்தாலும்,  பைக்கில் சந்தியாவின்  அருகாமையின் இலவச இணைப்புகளாய் கிடைத்த  அவள் மேனியின் வாசமும்,  முகத்தில் வந்து  முட்டி மோதிய அவளின் கூந்தல் உண்டாக்கிய சிலிர்ப்பும் அழியா தடமாய் பதிந்திருக்க  “இது க்ரஷ்ஷா???!!!.... மே பி” என அவள் மீது  ஈர்ப்பு உள்ளதை ஒருமனதாக ஏற்க தயாராகி கொண்டிருந்த நேரம்,  போனில் ஒலியை எழுப்பிய சந்தியாவின் குறுஞ்செய்தி,

“ ரிசெப்ஷனிஸ்ட் பேரு சுஜி். ஹாஸ்பிட்டல் சண்டே 2 மணிக்கு க்ளோஸ் பண்ணிடுவாங்க. சீக்கிரம்... ஐ டோன்ட் வான்ட் டு யு டு மிஸ் தட்....“

என்பதை படித்த கார்த்திக்கிற்கு மருத்துவமனையில் அவள் எதோ  திட்டம் தீட்டி வைத்திருப்பது தெளிவாக தெரிய...அவனின் மிரட்டலை அலட்சிய படுத்தும் சந்தியா மீது எரிச்சல் வர, சற்று முன் கனிந்த உள்ளம் கல்லாக, காரை கிளப்பியவன் “என்ன மது கேட்ட? சந்தியா மேல க்ரஷ் ன்னா?...... அவளையே க்ரஷ் பண்றேன்னா இல்லாயான்னு பாரு” என்றான் உறுதியாக.

க்தியிடம் “கார்த்திக் கோபப்படுவான். ஆனா கஷ்டபடுத்த மாட்டான். இதுல பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல” என்றாள்  சந்தியா உறுதியாக.

“நீ சொல்றதை பாத்தா உனக்கு அவன் மேல ஸ்பெஷல் இண்டரஸ்ட் இருக்கிற மாதிரி தெரியுதே” என்றாள் சக்தி.

சந்தியா அதற்கு லேசாக அலுத்து கொண்டவாறு “எனக்கு பிடிச்ச மாதிரி ஆளு கிடைக்கிறதெல்லாம் ரெண்டாவது உலக அதிசயம், சக்கு“ என்றாள்.

“ அப்போ முதல் அதிசயம்?” , சக்தி கேட்க,

“எனக்கு பிடிக்கிற ஆளுக்கும் என்னை பிடிச்சதுன்னா அது முதல் உலக அதிசயம்” என்றாள் சந்தியா.

அவள் கடி பொறுக்காத சக்தி “தப்பா சொல்றடி.... நீ போடுற மொக்கைய  கேட்டுட்டு உன்னை சும்மா விட்டேன்னா அது தான்டி ஒரே அதிசயம் “ என்று அவளை மொத்த, அந்த நேரம் பார்த்து  சக்தியின் தாயார் காபி கோப்பையுடன் வர, அதை பார்த்த சந்தியா,

“மாமி.. இங்க பாருங்க இவளை. நான் உனக்கு முக்கியமில்லடி, என் கூட வெட்டியா அரட்டை அடிக்காத. எம்.எஸ் தான் இனி முக்கியம். அவர்கிட்ட பேசி அவ ஆத்து மனுஷாள கேட்டு தெரிஞ்ச்சிகோன்னு சொன்னா, நான் எல்லாம் பிராக்டிகல்லா பாத்துக்குவேன், நீ எனக்கு அட்வைஸ் பண்ணாதடின்னு என்னை அடிக்கிறா” என்றாள் அவள் பட்டு மாமியிடம்.

“அட ராமா... உங்க கோதால என்னை இறக்கி விடாதடியம்மா... இந்தா புடி காபியை...” என்றவாறே சக்தியிடம் திரும்பி “ உன்னை மாதிரி ஒத்த பிள்ளையா சந்து பிறக்கலைடி. அவா  அக்கா எல்லாரும் புகுந்தாத்துல நல்ல பிள்ளைன்னு பேரு எடுத்தவா.....சந்து உன்  நல்லதுக்கு  தான் சொல்லுவா.... கேட்டுக்கோ.” என்ற சக்தியிடம் சொல்லி விட்டு சென்றார்.

“சக்கு... நான் சொல்ற  DMK நல்லா கேட்டுக்கணும் புரியுதா” என்றாள் சந்தியா கண்ணடித்த படி. குமுறி கொண்டிருந்த சக்தி, தன் அம்மா அந்த இடத்தை விட்டு அகன்றதும் “உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்டி.....” என விரட்ட “ஏய்.... நாம அப்படியா பழகியிருக்கோம்...நண்....பீ....டி”  என சொல்லிக் கொண்டே சந்தியா ஓட, “என்ன அங்க சத்தம்?” என தனது அம்மாவின் குரல் கேட்க “இந்த சுண்டெலி...... தொல்லை தாங்கலைம்மா ”  என சக்தி சந்தியாவை  முறைத்து கொண்டு சொல்ல “மாமி அது பெருச்சாளி...ஓட முடியாம திணறுது” என்றாள் சந்தியா  சிரித்து கொண்டே. அதை கேட்ட  சக்தியின் முகம் சுருங்கிய அதே நேரம்  “ உச்சி வெயிலில் அதுவும் கத்திரி வெயிலில் அங்க என்ன ஓட்டம்? கீழ இறங்கி வாங்கோ ....” என்று கட்டளையிட்டார் சக்தியின் தாயார். “ஒரு டூ மினிட்ஸ்ல வந்துடுறோம் மாமி ” என சந்தியா சொல்ல அமைதியானார் அவர்.

“ஏன்டி ….நாம மாறி மாறி  டீஸ் பண்றது  சகஜம் தான? நான் டீஸ் பண்ணா திருப்பி டீஸ் பண்ணுவ...என்ன ஆச்சு உனக்கு? குடும்ப இஸ்திரி ஆகப் போற....சரி..... அதுக்காக இப்படி எல்லாம் சூடாக கூடாது...” என்றாள் சந்தியா.

“தெரியலடி... ஜந்து. நான் குண்டா இருக்கேன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்க  ” என்று வருந்தினாள் சக்தி. “யாரு எம்.எஸ் தான சொல்லியிருப்பாரு? லூசுடி நீ. ஓமகுச்சியாட்டம் இருக்கிற உங்கப்பா, கன்னியா தானம் அப்ப அவர் காலில் உன்னை தாங்கணும்ல? லோடு தாங்காம அவர் காலு ீ பஞ்சராகி விட கூடாதுன்னுற நல்ல எண்ணத்தில் சொல்லியிருப்பாரு. என்கிட்டயும் சொன்னாரே... உன் வெயிட்ட குறைக்க நான்  கேரண்டி கொடுத்திருக்கேன்.” என்றாள் சந்தியா.

“அதான் இப்படி என்னை வெறுப்பேத்தி விட்டு ஓட வைக்குறியா?” என்றாள் சக்தி வெறுப்புடன். “என்ன தான் பில்டிங் ஸ்ட்ராங்கானாலும்  சக்கு, நீ ஒரு ஸ்டெப் மூவ் பண்ணதுக்கே...... சும்மா அதுறல.... அதான் அந்த மாதிரி  விஷ பரீட்சை வீட்டுக்கு ஆகாதுன்னு உனக்கு எக்ஸ்பெர்ட் நேச்ரோபதி டாக்டர்கிட்ட நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன். விந்தியா தான் அந்த டாக்டரை சொன்னா. ஏற்கனவே அவுங்க நடத்திற யோகா கிளாஸ்ல  உனக்கும் எனக்கும் காலையில்  ஆறு மணிக்கு ரெஜிஸ்டர் பண்ணியாச்சு. நாளையில் இருந்து ஸ்டார்ட் பண்றோம். “ என்றாள் சந்தியா. “ஆயிரம் குரங்கு சேட்டை பண்ணிட்டு இப்படி ஏதாவது ஒரு நல்லது பண்ணி நெஞ்ச நக்கிடுறடி....” என்றாள் சக்தி சந்தோஷமாக.

“அப்பா... இப்ப தான் பழைய பார்ம்க்கு வார... நீன்னாலும் பரவாயில்லை  வேற வீட்டுக்கு போகப் போற...... டென்ஷனா இருக்க ஓகே. ஆனா இந்த கார்த்திக்கை பாரு.... லைட்டா டீஸ் பண்ணாலும் டென்ஷன் ஆகிடுறான்..சரியான அங்கரி பர்ட்....காசு எனக்கு மேட்டரே இல்ல  நம்ம பசங்களே எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னவுடனே அவன் முகத்தில் என்னம்மா எள்ளும் கொள்ளும் வெடித்தது.” என்றாள் சந்தியா.

“எப்படிடி நம்ம பசங்களை போய் கருணன்கள்ன்னு அவன்கிட்ட சொல்ல தோணுச்சு? நீ சொன்னத கேட்டா  அந்த கர்ணனே கருணை இல்லாம உன்னை கொலை பண்ணி இருப்பாரு....” என்று சக்தி சொல்ல இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அப்போ இன்னைக்கு பாத்த  கார்த்திக்கும்....ஆறு வயசுல இருந்து பாக்கிற சக்தியும் உன் பார்வைக்கு ஒன்னா தான் தெரியுது. அவன்கிட்ட என் அளவுக்கு உரிமை எடுத்து  டீஸ் பண்றத  பாத்தா...” என சக்தி இழுக்க,  

“….ப்ரண்ட்ஸ்ஸா  இருக்கிறவங்களை  இப்படி சேர்த்து வச்சு ஓட்டியே லவ்வர்ஸ்ஸா ஆக்கிவுட்டுடுறாங்க...நீயும் அதே குட்டை தானா ?” என சந்தியா கேட்க

“இல்ல சந்தியா.... ப்ரண்ட்ஸ்ன்னு வெளில சொல்லிக்கிட்டு உள்ள லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்கள தான் சேர்த்து வச்சு மத்த ப்ரண்ட்ஸ் ஓட்டுவாங்க...இன் பாக்ட், அவுங்களுக்கு இப்படி எடுத்து கொடுத்து அவுங்க லவ்க்கு ஹெல்ப் தான் பண்ணுவாங்க. எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்...நீ சொல்லறதை செய்ய மாட்ட, செய்றதை சொல்ல மாட்ட..... எப்படியும் பொய் தான் சொல்லப் போற. அதனால அந்த   விஷயத்தை அப்படியே விட்டுட்டு, அந்த அப்பாவி அம்பி கார்த்திக் எப்ப சைகாட்ரிஸ்ட்க்கு கால் பண்ணுவான்ன்னு சொல்லு” என்றாள் சக்தி.

சந்தியா “நண்பீ....டி.... என் பஞ்ச்சை எடுத்து விட்டதுக்கு. கார்த்திக் இந்த நேரம் அங்க போய் இருக்கணும்.. அந்த போன் நம்பர் வாங்கியிருப்பான்.” ...ஐ அம் சோ கியூறியஸ் “

சக்தி “சரி யாரு போன் நம்பரை கொடுத்த?”

சந்தியா “வேற யாரு..என்னோடது தான் - இன்னோரு நம்பர். என்னை மாதிரி தில்லாலங்கடிங்களால தான் டியூயல் சிம் போன் சேல்ஸ் ஆகுது.”

சக்தி “அப்போ நீயே குரலை மாத்தி பேச போறியா..”

சந்தியா “அவன் இம்போர்ட்டட் ஹர்ட்வர்ட் சரக்காச்சே...இந்த மாதிரி ஜுஜூபியெல்லாம் வொர்க் அவுட் ஆகாது. சூப்பரா ஆக்டிங்ல பின்னுற திறமையான ஆளா சூஸ் பண்ணியிருக்கேன்”

சக்தி “ஓ.... யாருடி அது?” என்றாள் சக்தி ஆர்வமாக.

சந்தியா “ நீ தான் “ என்று சர்வசாதாரணமாக சொல்ல, அதை கேட்டு அதிர்ந்த சக்தி, “ஏண்டி நான் உனக்கு காமெடி பீஸ்ஸா தெரியுறேனா ?”

சந்தியா சக்தியிடம் “..உன் சேவை சந்தியாவிற்கு தேவை. அவனை தனியா டீல் பண்ண முடியாதுடி. அதான்” என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.