(Reading time: 24 - 47 minutes)

ந்த பேயை சிங்கிள் ஹான்டட்டா டீல்  பண்ண முடியாது மது. நீ எனக்கு ் ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கும்.” என்றான் கார்த்திக் மதுவிடம், மருத்துவமனை அருகில் காரை நிறுத்தியவாறே. பின் கார்த்திக் சொன்னதை மனதில் வாங்கிக்கொண்டு  அந்த மருத்துவமனைக்குள் மது சென்றாள். அப்பொழுது நேரம் சரியாக மதியம் ஒரு மணி. அந்த கத்திரி உச்சி வெயிலில் வேர்க்க விறு விறுக்க கார்த்திக் தனது பைக்கை எடுக்க சென்றான்.

மருத்துவமனைக்குள் சென்ற மது, சுஜியை பார்த்து அர்ஜுனை விசாரிப்பது போல கேட்டு பின், “நான் சந்தியாவோட பிரண்ட்”, என சொல்ல, சுஜிக்கு சந்தியாவின் பெயர் தெரியாததால் மதுவை யோசனையுடன் பார்க்க “சந்தியாவை தெரியாதா?...உங்களுக்கு கார்த்திக் தெரியுமா? காலையில் வந்தாரே ...உங்களை கூட திட்டி விட்டாருன்னு  கேள்விப்பட்டேன்னே.... அவர்கிட்ட அறை வாங்கிய பொண்ணு தான் சந்தியா” என்றாள் மது.

சுஜிக்கு சகலமும் புரிய “ஆமா... அந்த அந்நியன்... திரும்ப வந்து கிந்து தொலச்சிடுவானோன்னு  பயத்தில இருக்கேன் .”

மது புரியாமல் “யாரு அந்நியன்?" என கேட்க “அதாங்க நீங்க சொன்ன கார்த்திக் ....அவர் ஒரு  ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி தானே”

மது “நீங்க யாரை  சொல்லறீங்க.? கார்த்திக் அப்படியெல்லாம் இல்லை ”

சுஜி அதற்கு “நான் சொல்றது சபஹையர் சதாசிவம் பையன் கார்த்திக். ஆனாலும் சந்தியாக்கா ரெம்ப நல்லவங்க. அவர் சொந்த விசயத்தை மத்தவங்ககிட்ட சொல்ல மாட்டேன்னு  சொன்னாங்க. அதான் உங்ககிட்ட கூட சொல்லலை போல. எத்தனை நாள் தான் இந்த மாதிரி மூடி மூடி மறைக்க முடியும் சொல்லுங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் வெளிய தெரிஞ்சி தான் ஆகும்...இன்னைக்கு அது நடந்திருச்சு.”

அவள் பேசுவதை கேட்டு கோபமும் அதிர்ச்சி அடைந்த மது “இன்னும் என்ன என்னத்தை சொல்லி வச்சிருக்காளோ....எல்லாத்தையும் கேட்டு விட வேண்டியது தான்” என்று நினைத்துக் கொண்டு, அவள் உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் “ஓ...ஆமா அவ தான் சொல்லவே மாட்டாளே...நீங்களாவது சொல்லுங்க.” என்றாள்.

“போன் பத்தி பேசுனாலே அவர் அந்நியனா மாறி அடிச்சு போட்டுருவாராம். அவர் திரும்ப வர நிறைய சான்ஸ் இருக்குன்னும் அவர் வந்தா கொடுக்க சொல்லி  அவரோட சைக்காட்ரிஸ்ட் போன் நம்பர் கொடுத்திட்டு போயிருக்காங்க....அவர்கிட்ட எதுவும் பேசாதீங்கன்னு வார்ன் பண்ணிட்டு வேற போயிருக்காங்க” என்றாள் சுஜி.

மதுவிற்கு சந்தியா மீது  ஆத்திரமாக வந்தாலும் ஏற்கனவே அவள் மீது கோபத்தில் இருந்த கார்த்திக் இதை கேட்டால் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவானே என அஞ்சி கொண்டிருக்கும் வேளையில், அவளது செல்போனில் கார்த்திக் அழைத்தான்.

“மது, அந்த பேய் என்ன பண்ணி வைச்சிருக்கா தெரியுமா? பைக்கில் காத்தை பிடிங்கிவுட்டு.... ஹாவ் பன்ன்னு எழுதி வச்சிருக்கா...எதுனாலும் விளையாட்டு தான்.....இனி்மே அவ ஸ்கூட்டி தினம் தினம் என்ன கதி ஆகுதுன்னு பாரு ்” என்றான் கார்த்திக்.

“ஓ....அப்படியா” என்று சாதாரணமாக பதிலளிக்க முயன்ற  மதுவிடம், “என்ன உனக்கு ஷாக்கா இல்லையா...” என்றவனிடம்

“ம்...இருக்கு” என்றாள் மது பேச்சில் சுதியே இல்லாமல்.

அதை கேட்டு சந்தேகித்தவனாய் “அங்க அவ என்னத்தை  பண்ணி வச்சிருக்கா” என கேட்க

“அது... வந்து... காதி ” ...மது எப்படி சொல்ல என்று  தெரியாமல் இழுக்க “சரி... நானே வர்றேன்” என்று அவள் பதில் எதிர்பார்க்காமல் அதை இணைப்பை துண்டித்தான்.

மதுவிற்கு வயிற்றில் புளியை கரைக்க, அவன் அந்த இடத்தில் மீண்டும் கோபத்தில் ஏதாவது பொங்கி எழுந்து விடுவானோ என பயந்து, சுஜியிடம் கார்த்திக் சுஜியை பார்க்க தான் வந்து கொண்டிருப்பதாகவும், சந்தியா கொடுத்த அந்த போன் நம்பரை தானே அவனிடம் கொடுத்து விடுவதாக சொல்லி அதை வாங்கி கொண்டு வரவேற்பறையை விட்டு வெளியேறும் போது் எதிரில்  கார்த்திக் வர, அவனை பார்த்த மது திருவிழாவில் காணமல் போன குழந்தையை போல திரு திருவென முழிக்க, அவள் அருகில் வந்த மருத்துவமனையை துடைக்கும்  மூதாட்டி அவளுக்கு எடுத்து கொடுப்பது போல,

“...ராசா மாதிரி இருக்க...உனக்கு போய் நோயின்னு சொன்னாளே......” என்றாள் வருத்ததுடன்.

அதற்கு கார்த்திக் அந்த மூதாட்டியிடம் “அப்படின்னு யாரு சொன்னா ?” என வினவ, அவள் “என்னப்பா அந்த புள்ள யாருன்னு கேட்குற அளவுக்கு போயிட்ட. ஆயிரந்தான் இருந்தாலும் நீ அவளுக்கு மாமன் மகன்  அவ உனக்கு முறை பொண்ணு....”

கார்த்திக் மதுவிடம் கேள்வியோடு புருவத்தை உயர்த்தி  பார்வையாலே “நீ எதுவும் சொன்னியா “ என வினவ, இல்லை என  தலையசைத்தாள்.

அந்த மூதாட்டியோ தொடர்ந்தாள், “உன்னை மாதிரி வயசு பையனை ஏதாவது மோகினி போக்கு காட்டியிருக்கும். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான். அந்த அம்மன் நகர் பூசாரி போடுற திருநீறுல எல்லா காத்து கருப்பும் ஓடி போயிடும். அதான் உன்னை அவர்கிட்ட கூட்டிட்டு போக சொன்னேன். அவ அதை காதுலே வாங்கலை.  இந்த டாக்டர் பய புள்ளைகள  நம்புன்னா இந்த   நோய்... அந்த நோய்ன்னு சொல்லி காசு பறிக்க தான் பாப்பானுங்க. நீயாவது நான் சொல்றது கேளு...ஒருக்க அவரை போய் பாரு” என்றாள் அந்த மூதாட்டி.

அவள் சொல்வதை கேட்டு அதிர்ந்த கார்த்திக் “இந்த சந்தியா எனக்கு என்ன நோயின்னு சொன்னாளோ ...எயிட்ஸ் மாதிரி ஏடா கூடமா சொல்லி வச்சிருப்பாளோ” என பயம் வர அதை மறைத்தவாறே  அந்த மூதாட்டியிடம் “நல்லாயிருக்கு பாட்டி, நீங்க சொல்றது. அவளுக்கு பிடிச்சிருக்க  பேயையே எப்படி ஓட்டன்னு தெரியல. அதோட அழிச்சாட்டியம் தாங்க முடியாம தான் அறைந்தேன். அவகிட்ட  பூசாரிட்ட போன்னு சொன்னா  எப்படி போவா? ”என்றான் கார்த்திக்.

“ஓ அப்படியா சேதி... அதான்...... வெள்ளையுஞ்  சொள்ளையுமா  தலைய விரிச்சி போட்டுகிட்டு நின்னாளா?   உன்னை போய் அவ நோய் பிடிச்சவன்னு  சொன்னப்பவே எனக்கு சந்தேகம். “

என்று அந்த மூதாட்டி சொல்லி கொண்டிருக்கும் போதே, அந்த மருத்துவமனையில் டோக்கன் கொடுக்கும் பெண் இரண்டு பெண்களோடு வேலை முடித்து கிளம்பி வர , அவர்கள் வழியை அடைத்து நின்று கொண்டிருந்த மதுவும்  கார்த்திக்கும் சற்று விலகி வழி விட, அந்த டோக்கன்  கொடுக்கும் பெண் கார்த்திக்கை ஒரு திகிலோடு பார்த்தவாறு அவனை கடந்து இரண்டு அடி எடுத்து வைத்த பின்,

 “... அந்நியன்டி ”

என உடன் வந்த பெண்களிடம் சொல்ல அவர்களும் உடனே  திரும்பி அவனை வேற்று கிரகவாசி போல பார்க்க, அதை கவனித்து  கொண்டிருந்த கார்த்திக் அவர்களை முறைக்க,

“அவன் முறைக்கிறான்டி ஓடு...“ என அவர்களுக்குள்  பேசி விட்டு, ஓட்டமும் நடையுமாக சற்று தூரம் சென்ற பின் அவனை மீண்டும் திரும்பி பார்த்து கிண்டலாக சிரித்து விட்டு, அவன் பார்வையை விட்டு வேக வேகமாக அகன்றனர். கார்த்திக் “இவங்க ஏன் என்னை அந்நியன்னு சொல்லி வித்தியாசமா பார்க்கிறாங்க?” என மதுவிடம் கேட்க, அங்கு நடந்ததை கவனித்த மதுவும் “காதி நாம கிளம்பலாம்...போறப்போ டீடைல்டா சொல்றேன்” என்றாள். “அந்த சுஜி” என கார்த்திக் ஆரம்பிக்க “நானே பேசிட்டேன். நீ கெஸ் பண்ணது கரெக்ட் தான். அந்த பேய் உனக்கு பெரிய குழிய தோண்டி வச்சிருக்கா” என்று சொல்லி கிளம்பும் முன் அந்த மூதாட்டியிடம்  “கார்த்திக் என்னோட மாமன் மகன்... அவனோட ஒரே முறைப்பொண்ணு நான் மட்டும் தான் ...வேற யாருக்கும் அதற்கு அருகதை இல்லை...இனிமே இப்படி கண்ட கண்டவங்களை சொல்லிக்கிட்டு இருக்காதீங்க“ என்று கண்டிப்பது போல சொல்லிவிட்டு அகன்றாள்.

மது வீட்டிற்கு செல்லும் வழியில் சந்தியாவின் கட்டுக்கதையையும் அவள் கொடுத்த அந்த போன் நம்பர் குறிப்பையும் கார்த்திக்கிடம் கொடுத்தாள். அதை கேட்க கேட்க பாறையாய்  இருகியது  அவன் முகம் மட்டுமல்ல உள்ளமும் தான்.

மது அவனிடம் “அப்பவே அவளை க்ரஷ் பண்ண போறேன்ன...இப்போ என்ன பண்ண போற?”

கார்த்திக் “க்ரஷ்ஷா.......இல்ல அவளை என்னை லவ் பண்ண வைக்க போறேன்.  “

மது அதிர்ச்சியுடன் பார்க்க “அவளுக்கு சீரியஸான விஷயம் கூட விளையாட்ட தான தெரியுது...இனி என்னோட ஆட்டம்.....அவளை என் வலையில் விழ வச்சு.....கார்த்திக் விளையாட்ட கூட சீரியஸா தான் விளையாடுவான்னு காட்டுறேன்....என்னை லூசு போல மத்தவங்கள  பாக்க வச்ச அவளை என்ன செய்றேன் பாரு”

சக்தி சந்தியாவிடம், “அவனுக்கு சும்மாவே கோபம் வரும் சொல்லுற... நீ பண்ண வேலைக்கு அவன் உன்னை சும்மா விடுவானாடி?” என கேட்க

“சக்கு..இந்த சந்தியா மணிரத்னம் படம் மாதிரி... என்னை முதல்ல பாக்கிறப்போ சரியா புரியாது...பாக்க பாக்க தான் புரியும்....பிடிக்கும். அவன் நல்லதுக்கு தான் செய்றேன். என் இடத்தில் வேற பொண்ணு இருந்து அவ அதை ஈவ் டீஸ்ஸிங்ன்னு சொல்லி உள்ள தள்ள எவ்வளோ நேரம் ஆகும்? இங்க விடு, இந்த காரியத்தை அவன் அமெரிக்கால செய்ய முடியுமா? என்னதான் கோபம் வந்தாலும் இடம், பொருள் பாத்து தான அதை வெளிபடுத்தணும். இந்த விசயத்தில் அனுபவப் பட்டு தான் தெரிஞ்சிக்க முடியும் சக்கு” என்றாள் சந்தியா.

சக்தி அதற்கு “ஏன்டி இந்த மொட்டை மாடி கூரை தான் உன் போதி மரமா.... ரெம்ப தத்துவமா பேச ஆரம்பிச்சிட்ட?... சரி அவன் உன் பாஸ்... அவன் இதை எப்படி எடுத்துக்குவான்னு யோசிச்சியா? அவன் உன்னை வேலைய விட்டு தூக்கி அந்த மாதிரி  ஏதாவது பண்ணிட்டா ….”

சந்தியா “அவன் என்ன வேணாலும் பண்ணட்டும், ஐ டோன்ட் கேர். பாஸ்ன்னா கொம்பா முளைச்சிருக்கு. அவன்  பாஸ் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு பிரண்ட் ஆகிட்டான். அவனை டீஸ் பண்ணத்தான் செய்வேன். யாருக்காகவும் எதுக்காவும் மாற மாட்டேன். நான் நானா தான் இருப்பேன். ” என்றாள்.

மது கார்த்திக்கிடம் “லவ் பண்ண வச்சு என்னடா பண்ண போற அவளை?” என கேட்க,

கார்த்திக் “ம்.......இந்த கார்த்திக்கிட்ட விளையாண்டது எவ்வளோ பெரிய தப்புன்னு புரிய வைக்க.....என்ன வேணாலும் பண்ணுவேன்....வெயிட் அண்ட் சீ.” என்று அவன் சொல்வதை கேட்டு மேலும் அதிர்ந்தாள் மது.

இப்படியாக சந்தியா-கார்த்திக் இவர்களின் போராட்டம் திசை மாற  இனி கார்த்திக்கின் ஆட்டம் தான்...சந்தியாவின் விளையாட்டு வினையாக, கார்த்திக் வினையை விளையாட்டாய்  ஆட தயாராகி விட்டான். இனி.... கார்த்திக்கின் காதல் வலையில் சிக்குவாளா சந்தியா ?

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 7    

Go to Episode 9

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.