(Reading time: 44 - 87 minutes)

"வெல், டு பி ஹானஸ்ட்,  நேத்து வேற வழியில்லாம தான் உன்கூட மதுவை அன்பு இல்லத்திற்கு அனுப்பினேன்.  ஆனா, மது, எங்க வீட்டை விட்டு உன் கூட அவ்வளோ நேரம்...அதுவும் சந்தோஷமா  இருந்தான்னா என்னால நம்பவே முடியலை. எங்க அம்மா, அப்பா எவ்வளோ சொல்லியும் மதுவை பிரிய மனசில்லாம, ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கிற சந்தர்ப்பத்தை ஸ்கூல்லையோ காலேஜ்லையோ பாட்டியும் தாத்தாவும் அவளுக்கு உருவாக்கி கொடுத்தது  கிடையாது.  காலேஜ்ல டூர் போனா கூட ரெம்ப என்ஜாய் பண்ண மாட்டா. ஹோம் சிக்காவே இருப்பா. அவ்வளவு ஏன், அவ  ப்ரண்ட்ஸ் வீட்டுக்கு போனா ஒரு அரை  மணி நேரம் கூட இருக்க மாட்டா. எங்க பாமிலிய தவிர்த்து அவளுக்குன்னு க்ளோஸ் ப்ரண்ட்ஸ் கிடையாது...முந்தி எங்க பாட்டி தான் அவளுக்கு பிரண்ட். அவங்க இறந்த பிறகு, மீரா அண்ணி.  அத விட்டா என்னோட பிரண்ட்ஸ், சூர்யா பிரண்ட்ஸ் அவங்க பாமிலி இவங்ககிட்ட ஹாய் பை சொல்ற அளவுக்கு. இதுல நிரு மட்டும் எக்ஸ்செப்ஷன்...அவன்கிட்ட ஜாலியா பேசுவா. ஆனாலும், ரொம்பவும் தானா வந்து ஷேர் பண்ண மாட்டா.  அப்படிபட்ட மது, ஒரே நாள்ல எப்படி மாறிட்டா தெரியுமா? என் விஷயத்தில எப்போதும் பொஸஸிவ்வா இருக்கிறவ, இப்போ உனக்கு தான் கொடி பிடிக்கிறா. என்னம்மா எல்லாரையும் பேச்சிலே மயக்குற  வள்ளிக்கண்ணு. ஆனா என்கிட்ட மட்டும் அது நடக்கவே  நடக்காது ” என்று மதுவை பற்றி நெடிய விளக்கத்தை கொடுத்து விட்டு, அவன் எண்ணத்தை வாய் தவறி வெளியிட்டான்  கார்த்திக்.

“ஏன் அப்படி சொல்றீங்க?” என சந்தியா கேட்க, அவள் மீதிருந்த எரிச்சலை காதல் ரசமாக மாற்றினான். “ஏன்னா பேசுற வாய்க்கு லாக் போட்டுருவேன்..” என்றவன், “லிப் லாக்” என்றான் இரகசியமாக குறும்பு சிரிப்புடன்.

அந்த நேரம் பாத்ரூம் செல்வதற்கு எழுந்த தன்ராஜ்  சந்தியா இருந்த அறையை கடக்கும் பொழுது அவளை கவனித்தவராய் “மணி 12 ஆச்சு, இன்னும் தூங்காம பூமாகிட்ட பேசிகிட்டு  இருக்கியா?” என அதட்டலாக கேட்க, “ஆமாம்ப்பா....பூக்கு பத்து மணிக்கே மிஸ்ஸிடு கால் கொடுத்தேன். அவ ஏதோ வேலையா இருந்தாளாம். இப்போ தான் ப்ரீயா இருக்கேன்னு  கால் பண்ணா” என்று சரளமாக பொய் சொன்னாள் சந்தியா. “ம்... என கேட்டுக் கொண்டவர் “சரி..நானும் மாப்பிள்ளைகிட்ட ஒரு விவரம் அவளை கேட்க சொல்லியிருந்தேன். என்னன்னு கேட்கணும். போனை கொடு “ என்று சொல்லிக் கொண்டே அந்த அறைக்குள் நுழைய,

“ குடு..குடு...மாம்ஸ்கிட்ட குடு”, என எதிர் முனையில் கார்த்திக் கிண்டலாக சொல்லி விட்டு அவள் சிக்கிக் கொண்டதை விசிலடித்து கொண்டாடினான். “ ஓவரா ஆடுற. இதுக்கெல்லாம் மொத்தமா சந்தியா திருப்பி கொடுப்பா. அப்போ நான் விசிலடிக்கிறதை  நீ கேக்க தான் போற” என மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே, தன்ராசை சமாளிக்க யோசனை செய்த நேரம், வரவேற்பு அறையில் இருந்த அவர்கள் வீட்டு தொலைபேசி அழைக்க, “யாரு இந்த நேரத்தில்?” என சொல்லிக் கொண்டே சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தார் தன்ராஜ்.  “நான் சிக்கினா அவ்வளவு கொண்டாட்டமா சகுனி? எனக்கு கால் மட்டும் சரியாகட்டும் ...பூமராங் மாதிரி எல்லாம்  திரும்ப உங்களை  நோக்கி வரும்” என மிக மெல்லிய குரலில் ரகசியமாக மிரட்டினாள். “ம்… ..இப்போ மட்டும்  லேன்ட் லயனுக்கு கால் பண்றது   உங்க பூமாக்காவா இருந்தா பூமராங் உன்னை நோக்கி வரும்  வள்ளிக்கண்ணு” என பதிலுக்கு  அவனும்  மிரட்டிக்  கொண்டிருக்கும் போது  அவளை   வரவேற்பறையில் இருந்து தன்ராஜ் அழைக்க, அவர்  அழைத்த தொனியிலே ஏதோ பிரச்சினை என புரிந்து கொண்ட சந்தியா “என்னப்பா” என சொல்லிக் கொண்டே கார்த்திக்குடன் உரையாடுவதை நிறுத்தி விட்டு, வேகமாக இணைப்பை துண்டித்து  போனை மறைத்தாள்.

“பூமா நீ செல் போனே எடுக்க மாட்டிங்கிற பிஸியா இருக்குன்னு  வீட்டு போனுக்கு  கூப்பிடுறா….அவ கூப்பிட்டது கூட தெரியாம  இந்த  நேரத்தில நீ  யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த?” என கேள்வி  கேட்டவாறே அவள் அறை வாயிலின் அருகில்  வந்தார். வரவேற்பறையில் எரிந்த விளக்கின் வெளிச்சம்  சந்தியா இருந்த அறையிலும் சற்று ஊடுருவி  அங்கிருந்த இருளை  கொள்ளையடித்து  இருந்தது. லக்ஷ்மியோ நாள் முழுதும் வேலை செய்த களைப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அந்த ஒளியில் சந்தியாவின் அப்பாவி முகம் தன்ராஜிற்கு தெளிவாக தெரிய,  “அப்பா... பூ கிட்ட தான் பேச ட்ரை பண்ணிக்கிட்டு  இருந்தேன். லயன் கிளியரா இல்ல போல. நான் எடுத்தவுடனே கட் ஆகிட்டே இருந்தது ...அப்படியே கிடைத்தாலும்  நான் பேசுறது அவளுக்கு சுத்தமா கேக்கல . லேன்ட் லயன்ல கிளியரா கேக்குதாப்பா?” என பாவம் போல அடுக்கடுக்காக பொய்களை  சொல்லிவிட்டு, தந்தையை திசை திருப்ப அடுத்த கேள்வியை கேட்டாள்.

“ம்...அதுல நல்லா தான் கேக்குது. அவ அமெரிக்கால இருந்து பேசுறால்ல. அதான் உன் செல்லுல சரியா சிக்னல் கிடைச்சிருக்காது. அவளை  காலையில உன்கிட்ட பேச சொல்லிட்டேன். நீ இப்போ ஒழுங்கா படுத்து தூங்கு.” என்றார் கண்டிப்பு குறையாமல். “சரிப்பா…” என்று விட்டு ஒரு நொடி அமைதிக்குப் பின், “அப்பா ….அப்பத பிடிச்சு தாகமா இருக்கு. அம்மா பாவம் அசந்து தூங்குறாங்க. எழுப்ப மனசே வரல... காலு வேற வலிச்சுகிட்டே இருக்கு.” என்றாள் கெஞ்சலாக. அவள் பாவம் போல பேசிய  பேச்சில் தன்ராஜின் கண்டிப்பு கணப்பொழுதில் காணாமல் போனது. “வலி மாத்திரை பாதியாவது போடு. லோ டோஸ் ஒன்னும் செய்யாது” என்று சொன்னவர், சில நொடிகளில்  அவளுக்கு பாதியா  உடைத்த மாத்திரையையும்   தண்ணீரையும்  கொடுத்து அவள் மாத்திரையை விழுங்கும் வரை காத்திருந்து விட்டு படிக்க சென்றார்.

வர் விளக்கை அணைத்து படுத்தவுடன் போர்வைக்குள் புகுந்து கொண்ட சந்தியா, போனை எடுத்துப் பார்த்தாள். கார்த்திக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான் “உன் டிராமா முடிஞ்சதும் மெசேஜ்  பண்ணு ” என அவன் குறுஞ்செய்தியை பார்த்ததும் “கொழுப்பெடுத்தவன் “ என மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே “பேட் நைட்...பிட்டர் ட்ரீம்ஸ்” என பதிலுக்கு அனுப்பி விட்டு கண்களை மூடினாள். ஊமையாக்கப்பட்டிருந்த அவள் போன் பட படவென அடித்து பறக்கும் தட்டானின் சிறகைப்  போல விர் விர் என துடிக்க, அவள் தலையணைக்கு அடியில் இருந்த போனை எடுத்தாள். கார்த்திக் தான் அழைத்தது. “ம்…” என்றாள் இரகசியமாக. “டோன்ட் வொர்ரி  வள்ளிக்கண்ணு. எனக்கு  எப்பவுமே சுகர் ட்ரீம்ஸ் தான். ஆனா வலில உனக்கு தான் தூக்கம் வராது.  பில்லோ ஹக் லாஜிக் ட்ரை பண்றியா?”  “ம்...ம்”  என சொல்லிக்கொண்டே நேரில் பார்த்து பேசுவது போல வேகமாக தலையாட்டினாள். “சரி நேத்து சொன்ன மாதிரி தலைகாணியை மனசுக்கு பிடிச்சவங்களை நினச்சு கட்டிபிடிச்சு கண்ணை மூடிக்கோ. என் கும்ப்கர்ணிக்கு ஒரு தாலாட்டு பாடுறேன்” என்றான் கார்த்திக்.

“என்ன பாட்டு?” என்றாள் இரகசியமாக.

“நமக்கு கமல் ஸ்ரீதேவி மாதிரி ஒரு கெமிஸ்ட்ரி இருக்கு. அதுனால அவுங்க பாட்டு தான். ஆனா கேள்வி எதுவும் கேட்க்காம பாடி முடித்ததும்  படுத்து தூங்கிடணும். சரியா?”

“ம்…ஓகே...ஒன் செகண்ட்” என ரகசியக் குரலில்  அவனை காத்திருக்க சொல்லிவிட்டு,  போர்வையை விட்டு வெளியே வந்து தலையணையைத் தேடினாள். வேறு தலையணை அருகில் இல்லாததால், மெதுவாக லக்ஷ்மியின் தலையணையை உருவி, மறுபடியும் போர்வைக்குள் ஒளிந்து  கொண்டாள். தலையணையை இறுக அணைத்துக் கொண்டே..”.ம் ரெடி” என்றாள் இரகசியமாக.

தொண்டையை செருமிக் கொண்ட கார்த்திக், கண்களை மூடியவாறு பாட ஆரம்பித்தான் “கண்ணே கலைமானே கண்ணின் மணி என்ன கண்டேன் உனை நானே” என அவன் பாட “ம்...அந்த பாட்டில வர்ற ஸ்ரீதேவி மாதிரி தெரியுறேனா உனக்கு”  என கேட்க சந்தியாவிற்கு   தோன்றினாலும், அவன் பாடியதில் வந்த இதம் அவளை வாயடைக்க செய்தது. மோன நிலையில் அவன் பாட்டில் லயித்தாள். பாடலை முழுவதுமாக பாடி முடித்து விட்டு எதுவும் பேசாமல் இணைப்பை துண்டித்த கார்த்திக்  அப்படியே  நித்திரையில் ஆழ்ந்தான்.

 

விடியற்காலை. போனில் ஐந்து மணிக்கு வைத்த அலாரம் எழுப்ப, அதை சிறிது நேரம் தள்ளிப் போட்டு போட்டு ஒரு வழியாக சோம்பல் முறித்து விழிக்கும் போது மணி 6. கார்த்திக் எப்பொழுதும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பவன். நடுராத்திரி விழிப்பால் அதிகாலையில் எழ முடியாமல் அவன் தினசரி வேலைகள் பாதிக்கப் பட்டிருந்தது. அதற்கும் சந்தியாவை காரணம் சொல்லி மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான். டிராக் பேன்ட்டிற்கு மாறியவன் நடைப் பயிற்சிக்கு கிளம்பினான்.

சக்தி யோகா பயிற்சி வகுப்பை முடித்து விட்டு கிளம்பும் போது, அவள் எதிரில் எதிர்பட்டான். “அய்யோ..இந்த சகுனி எதுக்கு வந்து இருக்கானோ.. நம்ம கிட்ட போட்டு வாங்கி  ஜந்து கிட்ட போட்டு கொடுப்பான்” என்று பயந்து கொண்டே, “ஜந்துட்ட செவிடா இருக்கணும்...சகுனிகிட்ட ஊமையா இருக்கணும். பேசாம மவுன விரதம்னு நடிச்சிட வேண்டியது தான்” என்று மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டே அவனை காணாதவள் போல வேறு பக்கம் திரும்பிச் சென்றாள்.

“ஹலோ ஷக்தி” என அவளை அழைத்தான் கார்த்திக்.

“பெரிய அலைபாயதே மாதவன் நினைப்பு...ஷக்தியாம் ஷக்தி...நாராயணா இந்த சகுனிகிட்ட இருந்து என்னை காப்பாத்து” என மனதிற்குள்  தன் விருப்ப தெய்வங்களை துணைக்கு அழைத்துக் கொண்டே, அவனிடம் திரும்பி கடமைக்கு என சிரித்து வைத்தாள்.

“சோ...உங்க ஜந்து கால் உடஞ்சதுல நீங்க ஹேப்பியா இருக்கீங்க. “ என்றான் கார்த்திக்.

இல்லை என சக்தி மறுப்பாக தலையாட்டினாள்.

“காலையில கிளம்புற அவசரத்தில பிரஷ் பண்ண மறந்துட்டீங்களா? வாயவே திறக்க மாடிங்கிறீங்க”, கார்த்திக்.

மறுபடியும் இல்லை என மறுப்பாக தலையாட்டினாள் சக்தி. பின், வாய் முன் குவித்து காட்டிய  விரல்களை விரித்து  “இல்லை” என பொருள் படும் படி கையை ஆட்டினாள். “ என்னது புவ்வா சாப்பிடலையா? இன்னைக்கும் கொள்ளு கஞ்சி பனிஷ்மென்ட்டா? ” என அவன் கேள்விகள் கேட்க,

தலையிலடித்த சக்தி, தொண்டையிலிருந்து  தாடை வரை ஆள்காட்டி விரலால் குறிப்பு காண்பித்து, மறுபடியும்  கையையும் தலையையும்  ஆட்டி இல்லை என்பது போல சைகை செய்தாள்.

“ஓ...த்ரோட் இன்பெக்ஷனா… நேத்து நல்லா தான் பேசிக்கிட்டு இருந்தீங்க” என கேட்க,

அதற்கு மேல் பொறுக்காத சக்தி,  “அய்யோ... மௌன விரதம்” என்று திருவாய் மலர்ந்து சொன்னாள்.

“ஓ…ஓகே..ஒகே” என சாதாரணமாக தலையாட்டி விட்டு, பின் அவள் சொன்னது புரிந்தவனாய்  திடுக்கிட்டு அவளை பார்த்தவன் “மௌன விரதம்ன்னு  மைக் போட்டு சொல்லுங்க.” என்றான் கிண்டலாக.

அவனுக்கு “ஈ….” என பல்லைக் காட்டி விட்டு, ஒரு பெரிய  கும்மிடு போட்ட சக்தி, “டா டா” என சைகை செய்து கிளம்பினாள்.  

“ஷக்தி...ஷக்தி” என மறுபடியும் அழைக்க, “அய்யோ...கார்த்திக்ன்னு பேரு வச்சாலே இப்படி தான் விரட்டி விரட்டி கூப்பிடுவாங்கள.” என்று எண்ணிக் கொண்டே “என்ன தான் வேணும்” என்பது போல இடுப்பில் கை வைத்தாவாறே சக்தி அவனை பார்க்க, “நீங்க பேசவே வேண்டாம். நான் கேக்குற கேள்விக்கு எஸ், நோ, மே பி ன்னு சைகை காமிச்சா போதும். சரியா”  என்றான் கார்த்திக்.

“இல்லன்னு சொன்னாலும் விட மாட்டியே..” என அலுத்துக் கொண்டவாறே தலையாட்டினாள்.

“சந்தியா பூமாக்காக்கு கல்யாண வயசுல கொளுந்தனார் இருக்காரா?”, கார்த்திக்.

“ஆமாம்” என தலையாட்டினாள்.

“அமெரிக்கால இருக்காரா?”, அடுத்த கேள்வியை கார்த்திக் கேட்டான்.

“ஆமாம்” என தலையாட்டினாள்.

“அவங்க வீட்டில அவனுக்கு சந்தியாவை முடிக்க ப்ளான் இருக்கா?” என அவன் கேட்க,

“இந்த ஜந்து என்ன கப்சா விட்டான்னு தெரியலையே. சரி மே பி ன்னு சேப் சைடுல இருந்துக்க வேண்டியது தான்” என்று எண்ணிக் கொண்டு புருவத்தை உயர்த்தி  தோளைக் குலுக்கினாள்.

“அப்ப...மே பி. அதாவது அப்படி .இருக்கலாம் ன்னு சொல்றேங்க அப்படி தான?” என அவன் கேட்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.