(Reading time: 44 - 87 minutes)

அவள் சொல்ல சிரித்தவன் “விடு...விடு...அது கேர் டேக்கர் பாத்துக்குவாங்க..எனக்கு  ஒன்னே ஒன்னு தான்...மது ஹர்ட் ஆகாத படி நிருவோட பீலிங்ஸை புரிஞ்சிக்கணும் வல்லிகண்ணு. நிரு  கிட்டதட்ட எட்டு வருஷமா அவளை லவ் பண்றான். இந்த நாலு நாள் பழக்கம் மதுவை  காதல், கல்யாணம் வரைக்கும் கொண்டு போகுதோ  இல்லையோ அவளுக்காக நிருவோட காத்திருத்தலை  உணர வைக்கணும்.” என்றான். அவன்  சொல்வதை கேட்ட சந்தியா, “பாஸ், எட்டு வருஷமாவா நிரு ஒரு தலை ராகம் பாடிக்கிட்டு இருக்காரு??” என வியப்பு காட்டினாள்.

“ஆமா..அதை வைச்சே தெரிஞ்சிக்கலாம், அவன் எந்த அளவுக்கு அவளை காதலிக்கிறான்னு. நிரு என்னோட காலேஜ் ரூம் மேட். அப்பல்லாம்  என்கிட்ட செல்போன் கிடையாது. எங்க ரூம்க்கு டெய்லி மது போன் பண்ணுவா. பல நேரம் நான் டென்னிஸ் ப்ராக்டிஸ் போயிடுவேன். நிரு தான் அட்டென்ட் பண்ணுவான். அப்புறம் நானும் நிருவும் க்ளோஸ்  ப்ரண்ட்ஸ் ஸா ஆக, அவன் எங்க குடும்பத்தில ஒருத்தன் மாதிரி ஆகிட்டான். மதுவும் நிருவும்  பிரண்டலியா பேசுவாங்க.  அவன்  ஒரு மூணு, நாலு  தடவை தான் எங்க வீட்டுக்கு வந்திருப்பான். எங்க குடும்பத்தில எல்லாரும் சேர்ந்து  சம்மர் வகேசனுக்கு  ஒரு தடவை  கல்கத்தா போனோம். அப்போ அவன் வீட்டில தான் தங்கியிருந்தோம். இந்த மாதிரி ஆறேழு வருஷமா  எண்ணி அஞ்சாறு தடவை தான் இவுங்க நேர்ல பாத்திருப்பாங்க. ஆனா, அவன் இந்த அளவுக்கு மதுவை  லவ் பண்ணுவான்னு நான் நினைச்சே பாக்கலை. “

“மூணு வருஷத்துக்கு முன்னாடி கல்யாண ஏற்பாடு பிடிக்காம அவ தூக்க மாத்திரை சாப்பிட்ட விஷயத்தை நிரு கூட ஷேர் பண்ணேன். அவன் கிட்ட சொன்னா எனக்கு ஆறுதல் சொல்வான்னு பாத்தா, `அவன், என்னால சமாதானம் பண்ண முடியாத அளவுக்கு, “அவளுக்கு கல்யாணமாகி போயிருந்தா கூட  எங்கயோ நல்லாயிருக்கான்னு இருந்திருப்பேன். நீ சொல்றதை கேக்கிறப்போ உயிர் போற மாதிரி வலிக்குது” ன்னு சொல்லி அழுதுட்டான். அவன் அப்படி உடைஞ்சு அழுது நான் பாத்ததே இல்ல. அப்பா...இப்ப  நினச்சா கூட ஏதோ பண்ணுது.” என சொல்லும் போதே அவன் குரல் அதை உணர்த்தியது.  

“அப்பவே முடிவு பண்ணிட்டேன், நிருவை  விட பிரமாதமா மதுவை யாராலும் பாத்துக்க முடியாதுன்னு. அப்புறம், அவன்கிட்ட தோண்ட தோண்ட எல்லா உண்மையும் வெளி வந்தது. காலேஜ் பர்ஸ்ட் இயர்ல மது பேச்சுல உள்ள குழந்தைதனத்தில மயங்கினவன் தான் இன்னும் தெளியலை. அப்போ மது ஜஸ்ட் டென்த் தான் படிச்சிகிட்டு இருந்தா. ஏன்டா இதை எங்கிட்ட இத்தனை வருசமா சொல்லலைன்னு கேட்டா, என்னோட பிரண்ட்ஷிப்பை இழந்துடுவோமோங்கிற பயத்தில தான்னு சொல்றான்.  ஆனா, நான் எங்க மதுவை அவன்கூட பேச விட மாட்டேன்னோங்கிற பயத்தில தான் சொல்லிருக்க மாட்டான்” என்றான் கார்த்திக் சிரித்துக் கொண்டே.

“வாவ்...வெரி நைஸ் லவ் ஸ்டோரி. எட்டு வருஷமா? நிருவுக்கு சிலை தான் வைக்கணும். அன்புன்னா எதிர்ப்பார்ப்பு இல்லாம இருக்கணும். அதே தான் அவர் செய்திருக்கார். கண்டிப்பா இந்த மாதிரி ஒருத்தரை தேடினாலும் கிடைக்காது. பாஸ், நிருவை ஸ்கைப்ல பேச சொல்றேன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொன்னீங்க தான?“ என்று ஆர்வமாக  சொன்னாள்.

“அவன் கொஞ்சம் பிசியா இருக்கான். ஆனா, வர்ற வெள்ளிக்கிழமை, நீ அவன்கிட்ட தான் நம்ம வொர்க்கை ப்ரெசென்ட் பண்ணப் போற. அப்போ பாக்கலாம். அவன் சாப்ட் நேச்சர். ஆனா அப்படியே நம்பிடக் கூடாது. சின்ன வயசுல நான், சூர்யா, மது மூணு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோ எங்க  மூணு பேரு ரூம்லயும்  வச்சிருப்போம். அதை படிக்கிற காலத்தில ஹாஸ்ட்டல்ல  என்னோட ரூம்ல வச்சிருந்தேன். இந்த நிரு, அதை எடுத்து மதுவோட போட்டோவை மட்டும் கட் பண்ணி எடுத்திட்டு  மத்ததை குப்பைல வீசிட்டான். அந்த போட்டோவை  எத்தனை நாள் தேடுயிருப்பேன் தெரியமா? யு நோ வாட், மதுவும், சூர்யாவும் இன்னும் அந்த போட்டோவை அவங்க ரூம்ல வச்சு இருக்காங்க.” என்றான் கார்த்திக்.

“அப்போ நீங்க எந்த போட்டோவை உங்க ரூம்ல  வைச்சிருக்கீங்க?”, சந்தியா

“ம்...உன் போட்டோவை தான்” என்றான் கார்த்திக்.

“என் போட்டோ?”, சந்தியா

“அந்த வைட் ட்ரெஸ் போட்டோ”, கார்த்திக்.

“அது உங்க போட்டோ தான பாஸ்”, சந்தியா.

“ரெண்டும் ஒன்னு  தான். வல்லிக்கண்ணு ” என்றான் கண்சிமிட்டிய படி.

“ஜொள்ளு பாஸ்,  இதுலே  அரை மணி நேரம் கரைந்து விட்டது. மது பிளாஷ் பேக்கை பிட்டு பிட்டா கேட்கவும் நல்லா தான் இருக்கு. மது, நிரு விஷயத்தில என்னால எவ்வளோ முடியுமோ அவ்வளவு ஹெல்ப் பண்றேன்.” என்று உறுதி அளித்து பின், இருவரும் எஞ்சியிருந்த வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்தினர்.

கார்த்திக் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் சந்தியாவிற்கு, அந்த நான்கு நாள் பயணத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அவனின் முழுத் திட்டம் தெரியாதே!

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 15

Go to Episode 17

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.